Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று உங்களுக்கான பயணத்தைத் திட்டமிடலாம்... (மே 10, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று உங்களுக்கான பயணத்தைத் திட்டமிடலாம்... (மே 10, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | 12 ராசியினருக்குமான தெய்வீக பலன்கள்...

மேஷம்

ஒரு பழைய சக ஊழியர் மீண்டும் வந்து உங்களை சந்திக்கலாம். இந்த நாளை சிறப்பாக மாற்றிட பல நல்ல விஷயங்களை செய்ய முயற்சியுங்கள். உங்களுக்கான பலன்கள் தானாக அமையும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மணற்கல்

ரிஷபம்

பணம் சம்பாதிப்பதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய வாய்ப்பு உங்கள் பாதையை வந்தடையும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட தகவல்தொடர்பு மூலம் பாதிக்கப்படலாம் மற்றும் அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்ளலாம். ஒரு புதிய நட்பின் தொடக்கம் இன்று உருவாகலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - விண்மீன்

மிதுனம்

இன்று உங்களுக்கான பயணத்தைத் திட்டமிடலாம். வேலைகள் இன்று தாமதமாவதால் எரிச்சலை சந்திக்க நேரிடும். இது தற்காலிகமாக சில பிரச்சனைகள் வரும். துணிச்சலான எதையும் எதிர் கொள்ள கற்று கொள்ளுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - எண் தட்டு

கடகம்

உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய நீங்கள் நினைக்கும் உணர்ச்சிகரமான நேரம் இது. குறைந்த சுயமரியாதை மற்றும் சுய மதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். இன்றைய நாளின் இரண்டாம் பாதியில் சிறிது ஓய்வு கிடைக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சிவப்பு கொடி

சிம்மம்

சுவாரஸ்யமான ஒருவரை நீங்கள் இன்று சந்திக்கலாம். உங்களுக்கு முக்கியமான விஷயங்கள் தாமதமாவதற்கு காரணங்கள் சில உள்ளன. பணியிடத்தில் நீங்கள் ஒரு மாற்றத்தை காணலாம். அது உங்கள் சமன்பாட்டை சரியாக வைத்து கொள்ளும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மண் பானை

கன்னி

இன்றைய நாள் சோம்பலாக இருக்கும். ஆனால் அதை விழிப்புடன் இருந்து தடுக்க முயற்சியுங்கள். ஒரு நல்ல பணிவாய்ப்பு இன்றி எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஒரு பணியை நிர்வகிக்க எளிய முறைகள் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நியான் சைன்போர்டு

துலாம்

உங்கள் வேகம் இன்று மெதுவாக இருக்கலாம் ஆனால் அது முயற்சிக்கு தடை என்று அர்த்தமல்ல. நியாயமற்ற ஒன்றைச் செய்ய உங்களை தூண்டும் எவரையும், நம்பி இருக்காதீர்கள். உங்கள் வார்த்தைகளை மற்றவர்கள் கேட்கும் வகையில் உங்கள் நடத்தை இருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு இரும்பு கேட்

விருச்சிகம்

பண பிரச்சனைகள் திடீரென்று தலை தூக்கக்கூடும். தற்போது பொருத்தமான ஒன்றைப் பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். எளிய விஷயங்களைச் செய்வது கடினமாகத் தோன்றலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சதுரங்க பலகை

தனுசு

தடைபட்ட சட்ட விஷயங்களில் இன்று வெற்றி வாய்ப்பு உண்டு. உங்களுக்காக நீங்கள் தேடும் ஏதாவது ஒரு வெளிப்புற ஆற்றல் உங்களை வந்தடையும். உணர்ச்சிகளை சரியாக கையாள கற்று கொள்ளுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு துளசி செடி

மகரம்

வேறொருவர் பரிந்துரைக்கும் அனைத்தும் உங்களுக்கு ஏற்றது அல்ல. புதியதை ஒப்புக்கொள்வதற்கு முன் அனைத்து உண்மைகளையும் இரண்டு முறை சரிபார்க்கவும். இல்லையென்றால் சிக்கல்கள் உருவாகலாம். கண்ணியமான உரையாடல் உங்களுக்கு விரும்பிய நல்லதை செய்ய வழி வகுக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு காத்தாடி

கும்பம்

உங்கள் வாழ்க்கையின் சிறந்த கட்டம் இது. எனவே எந்த விஷயத்தையும் எச்சரிக்கையாக அணுகுங்கள். எந்த குற்ற உணர்வும் இல்லாமல் அதைப் பாராட்டவும் ஏற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்களை வெளியே அனுமதிக்கிறீர்களோ, அவ்வளவு நம்பமுடியாத அனுபவங்களைப் பெறுவீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு களிமண் சிலை

மீனம்

இன்று உங்களுக்கு ஒரு மாயையான நாள் போன்று தோன்றும். ஒரு மூத்த அல்லது வயதான நபர் உங்களுக்கு சரியிலிருந்து தவறுகளை காட்டலாம். நாளின் இரண்டாம் பாதியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மர பலகை
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி