Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது.. (ஏப்ரல் 22, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது.. (ஏப்ரல் 22, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

oracle speaks | கல்வி சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் சிக்கலை எதிர்கொள்ள கூடும். புதிய முடிவுகளை முன்வைக்கும் முன்பாக நன்றாக ஆய்வு செய்யுங்கள்

    மேஷம்:

    இன்று உங்கள் அச்சங்களை எதிர்கொள்வதற்கான நாளாகும். குறிப்பாக பொது இடங்களில் உரையாற்றுவது அல்லது பெரும் திரளான பார்வையாளர்கள் மத்தியில் பேசுவது போன்றவை நிகழும். உங்கள் ஆழ்மனது மீது இன்னும் கூடுதலாக நம்பிக்கை வையுங்கள். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துங்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காந்தம்

    ரிஷபம்:

    பழைய நண்பர் ஒருவரை சந்திப்பதன் மூலமாக உங்களுக்குள் இருக்கும் அன்புணர்வு மேலோங்கும். உங்கள் கடந்த கால நினைவுகளில் மூழ்குவீர்கள். பணி சார்ந்த வளர்ச்சி வெகுவிரைவில் வரப் போகிறது. கவனமுடன் இருங்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆமை

    மிதுனம்:

    உண்மையை பேச வேண்டிய நாள் இது. எதையும் மறைக்க கூடாது. முன்கூட்டியே ஒரு விஷயத்தை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படலாம். நீங்கள் வர்த்தகம் செய்பவர் எனில், உங்கள் முயற்சிகளுக்கு தடை ஏற்படக் கூடும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒட்டகம்

    கடகம்:

    எது ஒன்றையும் புதிதாக முயற்சி செய்யும் முன்பாக பயிற்சி செய்யுங்கள். இல்லையென்றால் அதற்கான பலனை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் சிந்தனைத் திறனுக்கு பாராட்டு கிடைக்க வாய்ப்பில்லை.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வைரம்

    சிம்மம்:

    உயர் கல்விக்கு திட்டமிடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கலாம். இதற்கு முன் நீங்கள் அறிந்திராத வாய்ப்புகளும் கூட கிடைக்க கூடும். செவி வழி வரும் செய்திகளை நம்பாதீர்கள். உண்மையை ஆராய்ந்து உறுதி செய்யுங்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வண்ணமடிக்கப்பட்ட கிளாஸ்

    கன்னி:

    திடீரென கிடைக்கும் வாய்ப்பு மூலமாக உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கக் கூடும். அதை பெறுவதற்கு முன்பாக கற்பனை செய்ய வேண்டாம். உங்கள் நெருங்கிய நண்பர் உங்கள் மீது பொறாமை கொள்ள கூடும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆற்றோர கூழாங்கற்கள்

    துலாம்:

    தன்னிம்பிக்கையை அதிகரிப்பதற்கான நாளாகும். பிற நபர்களின் ஒப்புதலுக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அது உங்களைத் தேடி வரும். பணியில் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குறுக்கெழுத்து

    விருச்சிகம்:

    கடந்த கால துன்பங்கள் விலக இருக்கிறது. உங்களுக்கு பிடித்தமான இரண்டு விஷயங்களுக்கு இடையே ஒன்றை தேர்வு செய்வதற்கான சூழல் வரலாம். ஆரோக்கியத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீர்தொட்டி

    தனுசு:

    சிக்கலான சூழலுக்கு நீங்கள் தீர்வு கண்டிருந்தாலும், அதற்கான பாராட்டு வேறொருவருக்கு கிடைத்திருக்கும். இப்போது இரண்டு அடிகள் பின்வாங்கி நடப்பதை வேடிக்கை பார்ப்பதற்கான நேரம் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த உதவி சரியான சமயத்தில் கிடைக்காது.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மாணிக்கம்

    மகரம்:

    நெருங்கிய நண்பர் அல்லது உடன் பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டியிருக்கும். தொழில்சார்ந்த வளர்ச்சியில் சற்று பின்னடைவு ஏற்படக் கூடும். வார இறுதியில் பணவரவு இருக்கலாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வட்ட மேசை

    கும்பம்:

    சமீபத்திய நடவடிக்கை ஒன்றின் காரணமாக உங்கள் நிம்மதி பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், வெகு விரைவில் தானாக சரியாகிவிடும். உங்களை முழுமையாக வெளிப்படுத்துங்கள். கூர்ந்து கவனம் செலுத்துங்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிட்டார்

    மீனம்:

    கல்வி சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் சிக்கலை எதிர்கொள்ள கூடும். புதிய முடிவுகளை முன்வைக்கும் முன்பாக நன்றாக ஆய்வு செய்யுங்கள். நீங்கள் தவிர்த்து வந்த விஷயத்தில் உங்கள் பெற்றோருடன் மீண்டும் இணைப்பு ஏற்படலாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தங்க ரோஸ் கடிகாரம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Oracle Speaks

    அடுத்த செய்தி