Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (14 ஜூன் 2022) திடீர் பணவரவை எதிர்பார்க்கலாம்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (14 ஜூன் 2022) திடீர் பணவரவை எதிர்பார்க்கலாம்..!

Deiviga Vaakku

Deiviga Vaakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

மேஷம்: நீண்ட காலமாக தடைபட்டிருக்கும் வேலைகள் இன்று எளிதாக முடிய கூடும். மேலும் ஒரு புதிய வாய்ப்பு, சிந்தனை அல்லது உத்வேகம் உங்களுக்குள் எழலாம். இன்றைய நாள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதிக குழப்பம் வேண்டாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - முறுக்கப்பட்ட கயிறு

ரிஷபம்: மாற்றம் ஏற்படும் காலங்களில் நீங்கள் உள் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பல தரப்பிலிருந்தும் உங்களுக்கு ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு புதிய வேலை ஒன்று நீங்கள் எதிர்பார்த்ததை விட விரைவில் தொடங்கலாம். இன்று உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு குச்சி

மிதுனம்: உங்கள் மீது பொறாமை கொள்ளும் அல்லது சதி செய்யும் நபர்களால் நீங்கள் அலுவலகத்தில் சூழப்பட்டிருக்கலாம். எழுதப்பட்ட ஆவணத்தின் வடிவில் உங்களிடம் இருந்த ஒரு முக்கியமான தகவல் தொடர்பு காணாமல் போகலாம். சிலர் உங்களை பற்றி வதந்திகளை பரப்பலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஸ்னூஸ் பட்டன்

கடகம்: உங்களது முக்கியமான திட்டத்தை கோபம் பாழ் செய்ய கூடும். உங்களது முந்தைய தேர்வுகளை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். ஒரு முக்கியமான அறிவிப்பு உங்களுக்கு சாதகமாக வெளியாகும் வாய்ப்புகள் அதிகம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு குதிரை லாடம்

சிம்மம்: உங்களுக்கு ஏதாவது ஒன்றில் நம்பிக்கை இல்லை என்றால் அந்த விஷயங்களில் தொடர்ந்து ஈடுபட வேண்டாம். வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். இந்த வாக்குவாதம் வழக்கத்தை விட நீண்ட நேரம் இருக்க கூடும். எந்தவொரு பார்ட்னர்ஷிப்பையும் இன்று தவிர்த்து விடுவது நலம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பாராசூட்

கன்னி: ஒரு புதிய வழக்கத்தை கடைப்பிடிப்பது எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் உணரலாம். ஆனால் அது வெகுமதிகளுக்கு உரிய பழக்கம் என்பது எதிர்காலம் உங்களுக்கு சொல்லும். இன்று நிதி விஷயங்களில் சிறிய இடையூறுகளை காண்பீர்கள் என்றாலும் இது தற்காலிகமானது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கீ ஹோல்டர்

துலாம்: நீங்கள் சில முதலீடுகளை தேடுகிறீர்கள் என்றால் அல்லது புதிதாக ஒன்றை தொடங்க நிதி உதவியை நாடினால் அதற்கான கதவுகள் இன்று திறக்க கூடும். உங்கள் நீண்ட கால திட்டங்கள் மெதுவாக இருந்தாலும் அவை செயல்படுவது போல் தெரிகிறது. வீட்டில் நிலவி வந்த குழப்பமான சூழல் விலகி இன்று அமைதி ஏற்படும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஸ்னோமேன்

விருச்சிகம்: இன்று நீங்கள் திடீர் பணவரவை எதிர்பார்க்கலாம். அதே நேரம் முற்றிலும் உங்களுடையது அல்லாத ஒன்றை பற்றி நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்திருப்பீர்கள். நினைவில் கொள்ளுங்கள் அந்த விஷயங்களின் முடிவுகள் உங்களுக்கு ஊக்கமளிப்பதாக இல்லை.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சில்க் டை

தனுசு: மற்றவர்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்வது நல்லது. இன்று சிறிய காரணத்திற்காக கூட நீங்கள் கோபப்படுவீர்கள். உங்களை அமைதியாக மற்றும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வீட்டை விட்டு வெளியேறி பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பிளாக் டூர்மலைன்

மகரம்: உங்களுக்கு நெருங்கியவரின் உடல்நிலை இப்போது கவலைக்குரியதாக இருக்கலாம். இதை நினைத்து மனதளவில் பாதிப்படைவீர்கள்.. பிறரிடமிருந்து கிடைக்கும் ஒரு சிறிய உதவி அல்லது கடன் தற்போதைய சூழ்நிலையைச் சமாளிக்க உதவும். தற்போது நிலவும் நிதி நெருக்கடியில் ஓரளவு நிம்மதி கிடைக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு முயல்

கும்பம்: இன்று உங்கள் அன்புக்குரியவர்களை நீங்கள் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் வெளியே சென்று பொழுதை இன்பமாக கழிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்க்காத நேர்மறை சம்பவங்கள் உங்கள்து நாளை உற்சாகமாக வைக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மஞ்சள் மலர்

மீனம்: கடந்தகால உறவுகள், நினைவுகள் மற்றும் அடக்கி வைத்திருக்கும் உணர்ச்சிகள் ஆகியவை உங்களது இன்றைய நாளை முழுக்க எடுத்து கொள்ளலாம். பழைய நினைவலைகளை அசைபோடுவது ஒரு வகையில் உங்களுக்கு நல்லதாகவே இருக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நைட்டிங்கேல்
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி