Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று நீங்கள் எடுக்கும் ரிஸ்க் நல்ல ரிசல்ட்டைக் கொடுக்கும்...(மே 20, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று நீங்கள் எடுக்கும் ரிஸ்க் நல்ல ரிசல்ட்டைக் கொடுக்கும்...(மே 20, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன்...

மேஷம்

தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக நீங்கள் உண்மையான முன்னேற்றத்தை உணரும் நாள் இது. உங்களுக்கான விஷயங்கள் ஒருங்கிணைந்து வருவதை நீங்கள் கவனிக்கலாம். நீங்கள் ஒரு பிரேக் எடுக்கத் திட்டமிடுகிறீர்கள் என்றால், சிறிது காலத்துக்குத் தவிர்க்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நாவல்

ரிஷபம்

சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் கற்பனை செய்து வைத்திருந்த ஒரு முன்னேற்றமான காலத்துக்கு அருகில் நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். வெளிநாட்டிலிருந்து ஒருவர் உங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொண்டு வரலாம். நீங்கள் நீண்ட கால முதலீடு செய்திருந்தால், அதை இப்போது மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புதிய சாலிடையர்

மிதுனம்

நீங்கள் கடந்த கால நினைவுகளில், உங்கள் சாதனைகளை, நீங்கள் பெற்ற புகழை நினைவுகூறலாம். இந்த நாளின் முதல் பாதி மெதுவாக, சுவாரஸ்யமின்றி இருக்கலாம், ஆனால் போகப்போக, நீங்கள் விரும்பும்படி மாறிவிடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கிளியர் குவார்ட்ஸ்

கடகம்

நீண்ட காலமாக காணாமல் போன ஒன்றைப் பற்றி நீங்கள் இப்போது அறிந்து கொள்ளலாம். நீங்கள் யாரையாவது ஒரு தலையாக நேசித்து வந்தால், உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. சில நேரங்களில் எமோஷனல் கைடன்ஸ் தேவைப்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நியான் சைன்

சிம்மம்

உங்கள் மனதில் உங்கள் பிள்ளைகளைப் பற்றிய சிந்தனை மேலோங்கி இருப்பதால், உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் நேரமும் கவனமும் தேவைப்படும். கடந்த காலத்தில் செய்த முதலீடு உரிய நேரத்தில் கைகளில் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ராஃப்ட்

கன்னி

உங்களுடைய கடைசி பணியை வெற்றிகரமாக செய்துவிட்டீர்கள், ஓய்வு நோக்கி செல்ல வேண்டிய காலம் இது. உங்கள் மனதில் பல யோசனைகள் தோன்றும். உங்கள் தேர்வு சரியானது என்று நம்புங்கள். எதிர்பாராத நேரத்தில் அதிக பணவரவு ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு புதிய சாலை

துலாம்

அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிச் செல்வதை எதிர்க்க வேண்டாம், நீங்கள் எடுக்கும் ரிஸ்க் நல்ல ரிசல்ட்டைக் கொடுக்கும். நீங்கள் விரைவில் ஒரு புதிய சூழலுக்கு உங்களைப் பழக்கப்படுத்த வேண்டியிருக்கும். வீடு அல்லது அலுவலகத்தை மாற்ற திட்டமிட்டால், அதை உடனே செயல்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பழைய நண்பர்

விருச்சிகம்

நீங்கள் உங்கள் அதீதமான மனநிலையை, ஆக்ரோஷத்தை கைவிட்டால், உங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் புலப்படும் மற்றும் கவலைகள் குறையும். உங்கள் கட்டுப்பாட்டை இழந்தால் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும். உடற்பயிற்சி அல்லது தியானம் மிகவும் செய்வது மன நிம்மதியைத் தரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – உண்டியல்

தனுசு

நீண்ட நாளாக இருந்த மர்மம் நீங்கும். அதே போல, நீண்ட நாட்களாக உங்கள் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தவைக்கு தீர்வு கிடைக்கும். பழைய பழக்கவழங்கள், முறைகள் காலாவதி ஆகிவிட்டது என்பதால், நீங்கள் வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கருப்பு டைரி

மகரம்

அதிகப்படியான டிராமா உங்களின் நிம்மதியை குலைக்கும். ஆனால் உண்மையான மற்றும் உங்கள் இதயத்திற்கு நெருக்கமான ஒரு நபர் உங்களை காப்பாற்றுவார். இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு, உங்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் நபர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ட்ராம்போலின்

கும்பம்

உங்களுடைய இன்டெர்பர்சனல் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு ஏற்ற நாள். இன்று உங்கள் நண்பரின் உதவி தேவைப்படும். அதே போல, நீங்கள் மற்றவர்களுக்கு உதவியாக ஏதேனும் செய்ய வேண்டிய ஒரு நாள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சர விளக்கு

மீனம்

சோம்பேறித்தனத்தை கைவிட்டு, தூக்கத்திலிருந்து கண் விழித்து, காஃபி குடித்து உங்கள் நாளை சுறுசுறுப்பாக தொடங்குங்கள். நீங்கள் இல்லாத சூழல்களை ஒரு சிலர் தவறாக பயன்படுத்தி இருக்கக்கூடும். எனவே சிந்தனைகளை தெளிவாகவும் புத்திசாலித்தனமாக வைத்துக் கொண்டு நீங்கள் செயல்படுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரூபி ரேட்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி