Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் விரைவில் தொடங்க உள்ளது..

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் விரைவில் தொடங்க உள்ளது..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

மேஷம் :

இன்று நிதி சார்ந்த சில நல்ல செய்திகள் நிறைந்த நாள். உங்களை சுற்றியுள்ள சமீபத்திய நிகழ்வுகளால் நீங்கள் அதிகமாக வருத்தப்படலாம். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் சட்ட சிக்கலில் சிக்கலாம்.

இன்றைய அதிர்ஷ்ட அடையாளம் - சைக்கிள்

ரிஷபம் :

இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கவனத்தை சிதறடிக்கும் விஷயங்கள் நடைபெறலாம். சிறு குழப்பங்கள் ஏற்படும் முடிவில் நீங்கள் நன்மை நடந்திருப்பதை உணரலாம். உங்களால் வழங்க முடியாத ஒன்றை கொடுக்க நினைக்காதீர்கள்.

மேலே இருந்து அதிர்ஷ்ட அடையாளம் - இரும்பு பொருள்

மிதுனம் :

இன்று நீங்கள் முடித்த சில வேலைகள் காரணமாக நீங்கள் சோர்வாக உணரலாம். உங்கள் வாழ்க்கையை முன்னோக்கி செலுத்த திட்டமிடுவீர்கள். அதற்கு சில நாட்கள் தேவைப்படலாம். உங்களுக்கு தேவைப்படும் ஒருவர் உங்களை அணுகுவதற்கு காத்திருக்கலாம்.

இன்றைய அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளி சரம்

கடகம் :

ஷாப்பிங் செல்ல நீங்கள் திட்டமிட்டு இருந்தால், இன்று உங்களுக்கு சிறந்த நாள். வேலையில் கடைபிடிக்க வேண்டிய காலக்கெடுக்கள் உள்ளன. எனவே அலுவலகத்தில் கவனம் தேவை. வீட்டு உதவியாளர் வழக்கமான வேலைகளில் இடையூறுகளை உருவாக்கலாம்.

இன்றைய அதிர்ஷ்ட அடையாளம் - தங்க ஸ்பூன்

சிம்மம் :

நீங்கள் முன்பு மறுத்த ஒரு பணியை இப்போது செய்ய நேரிடலாம். எதையாவது மிகைப்படுத்துவது சரியான முடிவுகளை தராது. இந்த நாளில் சில தொழில்நுட்ப பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே அலுவலகம், சொத்து விஷயங்களில் கவனம் தேவை.

இன்றைய அதிர்ஷ்ட அடையாளம் - வைர மோதிரம்

கன்னி :

சவாலான நேரங்களில் நீங்கள் திடீரென்று உங்களுக்கு ஆதரவு தரும் நபரை காண்பீர்கள். ஆனால் ஒருவருடனான சந்திப்பு நேர்மறையான முடிவுகளைத் தரக்கூடும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும்.

இன்றைய அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மண் பானை

துலாம் :

இன்று நீங்கள் நன்கு ஓய்வெடுக்கவும், சுவாரஸ்யமான உரையாடல்களை நடத்தவும் நல்ல நாள். நீண்ட நடைப்பயணம் உங்களுக்குத் தேவையான அமைதியை தரக்கூடும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். தினமும் தியானம் செய்வது நல்லது.

இன்றைய அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மீன் வலை

விருச்சிகம் :

இன்று நீங்கள் அதிகார நிலையில் இருப்பதை காணலாம். அலுவலகத்தில் அனைவரும் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். நீங்கள் எந்த ஒரு வலுவான நோக்கத்தை வைத்தாலும், அது விரைவில் உங்களுக்கு சாதகமாக வெளிப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் மோதலை தவிர்க்கவும்.

இன்றைய அதிர்ஷ்ட அடையாளம் - சேமிப்பு புத்தகம்

தனுசு :

இன்று உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி ஒத்திவைக்கப்படலாம் அல்லது உங்களுக்கு நேரம் குறைவாக இருக்கலாம். எனவே முன்கூட்டியே வேலைகளை முடித்து வைப்பது நல்லது. உங்கள் தந்தையுடன் உறவு பலப்படும். இன்று உங்கள் மன நிலையை சீரமைக்கவும்.

இன்றைய அதிர்ஷ்ட அடையாளம் - உப்பு நீர்

மகரம் :

இன்று பயணம் செய்வது உங்கள் மனதில் மிகுந்த அமைதியை தரும். சில பழைய நண்பர்கள் இந்த வாரம் உங்களை சந்திக்க வரலாம். உங்கள் சிதறிய எண்ணங்களை நீங்கள் முயற்சி செய்து சேகரிக்க வேண்டும். உறுதியான திட்டத்தை உருவாக்கவும்.

இன்றைய அதிர்ஷ்ட அடையாளம் - காகித தட்டு

கும்பம் :

இன்று அலுவலத்தில் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். உங்கள் உறவில் நீங்கள் தனிமையாக உணர்ந்தால், அது சிறப்பாக மாறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இன்று பிள்ளைகளுடன் நேரம் செலவழித்து மகிழ்வீர்கள்.

இன்றைய அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளை ரோஜாக்கள்

மீனம் :

சில மருத்துவ பிரச்னைகளால் நீங்கள் திசை திருப்பப்படலாம். உங்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் நண்பரின் குடும்ப பிரச்னைகள் உங்களுக்கு கவலையளிக்கும். உங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் விரைவில் தொடங்க உள்ளது. எனவே இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

இன்றைய அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் துணி
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Oracle Speaks

அடுத்த செய்தி