முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று நிதி நிலைமை மேம்படும்...(25 ஜூலை 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று நிதி நிலைமை மேம்படும்...(25 ஜூலை 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன்

  • 1-MIN READ
  • Last Updated :

மேஷம் 

நீங்களும் உங்கள் கணவன் / மனைவியும் ஒரு சில விஷயங்களைப் பற்றி பேசக் கூடாது என்று தவிர்ப்பீர்கள், ஆனால் அதை விரைவில் தீர்க்க வேண்டும். ஒரு புதிய டிரெண்டு உங்களை ஈர்க்கக்கூடும். கவனத்துடன் இருங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அமைதிபடுத்தும் இசை

ரிஷபம்

நீங்கள் பொதுமக்களுடன் சம்மந்தப்பட்ட தொழிலில் இருந்தால் நல்ல மாற்றங்கள் காணப்படும். செலவுகள் அதிகமாக இருந்தாலும், அவற்றை திறம்பட சமாளிக்க முடியும். ஆரோக்கியம், உடல் நலம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வெள்ளி செயின்

மிதுனம்

நீங்கள் வெவ்வேறு பாதைகளை தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் கையில் இருக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும். உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் அல்லது ஏதேனும் முடிவு எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தால், அது சரிவராது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புத்தக கவர்

கடகம்

உங்களின் பழைய உணவுப் பழக்கம், உண்ணும் பழக்கம், இனிப்புப் பலகாரம் போன்றவற்றை நீங்கள் மாற்ற விரும்பி இருப்பீர்கள். ஆனால் செய்ய முடியவில்லை. இதையெல்லாம் தீவிரமாக மதிப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது. இப்போதைக்கு நீங்கள் யாரிடமும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரோஸ் குவார்ட்ஸ்

சிம்மம்

நீண்ட நேரம் நீங்கள் விரும்பிய ஓய்வு ஒரு சிறிய பயணத்தில் மூலம் கிடைக்கும். வாழ்க்கை பரபரப்பாக இருந்ததால், இந்த ஓய்வு மிகவும் தேவைப்பட்டது. உறுதியான செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், முன்கூட்டியே திட்டமிடுவது , நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீல சஃபையர்

கன்னி

நீங்கள் நீண்ட நாட்களாக சிந்தித்துக் கொண்டு இருக்கும் ஒரு விஷயத்தை கைவிட வேண்டும், எதுவுமே செய்யாமல் நினைத்துக் கொண்டே இருப்பது பலன் தராது. எனவே, சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி, திட்டமிட்டு செயல்படவேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சோலோ பெர்ஃபார்மன்ஸ்

துலாம்

நீங்கள் முக்கியமான ஒன்றைப் பேசும்போது, உங்கள் எண்ணங்கள் குழப்பமடையாமல் வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் மேற்பார்வையின் கீழ் உள்ள வேலையில் ஆபத்துகள் இருக்கலாம். இனி வரும் நாட்களில் நிதி நிலைமை மேம்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பெரிய ஜன்னல்

விருச்சிகம்

சில நேரங்களில் உங்கள் எண்ணங்களை விட உங்கள் கருத்துகள் வலுவாக இருக்கும். நீங்கள் பேச விரும்புவதும், பேசும் தொனியும் தெளிவாக உங்கள் சிந்தனையுடன் இணைந்திருப்பது நல்லது. எல்லாவற்றையும் கச்சிதமாக நிறைவேற்ற வேண்டும் உங்கள் போராட்டம் தேவையில்லாமல் மற்றவர்களை தடுத்து நிறுத்தி வைக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – டென்னிஸ் ராக்கட்

தனுசு

புதிதாக யாரோ ஒருவர் உங்கள் வாழ்க்கையை உணர்வுபூர்வமாக தொடலாம். நீங்கள் மேலும் நிம்மதியாக இருக்க உங்களுக்காக நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு புதிய மற்றும் புதுமையான யோசனை உங்கள் நாளை பயனுள்ளதாக்கும். கடந்த காலத்தில் செய்த வேலைக்கு நல்ல வெகுமதி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பறவைகள் கூட்டம்

மகரம்

ஆகாங்கே சிதறிக் கிடந்த விஷயங்கள் எல்லாம் இப்போது ஒருங்கிணைந்து கூடி வருவதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். அவற்றைப் புரிந்துகொள்வதற்கான மனத் தெளிவு உங்களுக்கும் இருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம். உங்கள் அணுகுமுறையில் சிறிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். விரைவில் ஒரு நல்ல வாய்ப்பு உங்களைத் தேடி வரலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பழங்கால கடிகாரம்

கும்பம்

நீங்கள் பார்க்காத போது நிறைய விஷயங்கள் நடந்திருக்கலாம். அந்த உண்மைகளை உங்கள் மனதில் பதிந்து கொள்வதற்கு முன்பு, உண்மை என்பதை புரிந்து கொள்ள நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த சில நாட்களாக அதிக செலவுகள் இருப்பதால், நீங்கள் செலவு செய்யும் முறையை ஆய்வு செய்ய வேண்டியிருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மணி

மீனம்

உங்கள் வேலையை முடிக்க பெரிய அளவில் திட்டமிடுவீர்கள். சரியான நேரத்துக்கு காத்திருங்கள். யார் சொல்வதையும் கேட்க வேண்டாம். நீங்களே நன்றாக சிந்தித்து செயல்படுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரத்தினக் கல்

First published:

Tags: Oracle Speaks