ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் இன்று கிடைக்கும்... (மே 09, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் இன்று கிடைக்கும்... (மே 09, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | இன்று உங்கள் செயல்திறன் அபாரமாக இருக்கும். பொது நிகழ்வுகளில் பேச வாய்ப்பு கிடைத்தால் அதை பயன்படுத்தி கொள்ளுங்கள்

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் செயல்திறன் அபாரமாக இருக்கும். பொது நிகழ்வுகளில் பேச வாய்ப்பு கிடைத்தால் அதை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்களின் ஆக்கப்பூர்வமான பேச்சு, மற்றவர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று தம்பதிகள் மற்றும் காதல் உறவில் உள்ளவர்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள் வலுவான கருத்துடன் இருந்தால் பெரும் புகழ் அடையலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு மற்றும் செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 9

தானம் - சிவப்பு துணியை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் ஆளுமையின் ஈர்ப்பு நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். நீங்கள் அப்பாவியாக இருப்பீர்கள் என்பதால் உங்கள் மனம் காயப்படுவதற்கான வாய்ப்பு இருக்கும். பிறரிடம் பழகும் போது எச்சரிக்கையாக இருங்கள். பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இன்று நல்ல நாள். உங்கள் காதல் உறவுக்குள் அன்பு மேலும் வளரும்.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சை கேட்டு வருவோருக்கு பால் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுக்கான சிறந்த வாய்ப்புகள் இன்று கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக பணம் சம்பாதிப்பதற்கான நேரம் இது. உங்கள் திட்டங்களை செயல்படுத்தும் முன் நன்றாக சிந்தித்து செயல்படுங்கள். இன்று குறிப்பாக அரசியல்வாதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மிகவும் சிறந்த நாள். ஷாப்பிங் செய்ய, வீடு அல்லது வாகனம், உடைகள் அல்லது அலங்காரங்கள் வாங்க உங்களுக்கு இது நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - கோயிலில் சந்தனம் கொடுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு பெரும்பாலும் அழகான நாளாக அமையும். உங்கள் வணிகத்தில் லாபத்தையும் வெற்றியையும் ஒருசேர ருசிக்கலாம். வணிக ஒப்பந்தங்கள் தாமதமின்றி நிறைவேறும், தொழில் சார்ந்து நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் அதிக லாபம் தரும். உலோக உற்பத்தியாளர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், விநியோகஸ்தர்கள், உள்கட்டமைப்பு வணிகம், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆடை உற்பத்தியாளர்கள் அதிக லாபத்துடன் நாளை நிறைவு செய்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஊதா

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்குங்கள்

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீண்ட கால பிரச்சனைகளை தீர்க்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதிக்கான முதலீட்டில் நல்ல லாபம் பெற வாய்ப்பு உள்ளது. அரசியல், கட்டுமானம், நடிப்பு, பங்குச் சந்தை, ஏற்றுமதி, பாதுகாப்பு துறையில் இருப்பவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகள், நேர்காணல்களில் பங்கேற்பவர்கள் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்களை நம்பி களமிறங்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஏழைகளுக்கு அரிசி தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பரபரப்பான மற்றும் வேலைகள் நிறைந்த நாளாக இருக்கும். ஆனால் எவ்வளவு பணிகள் இருந்தாலும் அதை திறம்பட முடிப்பீர்கள். நாளின் முடிவில் வாழ்வில் செழிப்பு மற்றும் ஆடம்பரத்தை அனுபவிக்க கூடும். உங்கள் துணையுடன் இருந்த பிரச்சனைகள் சரியாகி அவருடன் வெளியே சென்று மகிழ்வீர்கள். காதல் உறவு வீட்டிற்கு மகிழ்ச்சியை தரும்.

அதிர்ஷ்ட நிறம் - வயலட்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிறருக்கு வெள்ளை கைக்குட்டையை தானம் கொடுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வழக்கறிஞர்கள், சிஏ, பாதுகாப்பு அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் இன்று சமூகத்தில் உயர்ந்த அங்கீகாரத்தை பெறுவார்கள். உங்களுக்கு இன்று சவால் நிறைந்த வேலைகள் கொடுக்கப்பட்டால் சிறிதும் தயங்காமல் ஏற்று கொள்ளுங்கள்.உங்களுக்கு மிகவும் வேண்டிய எதிர் பாலினத்தவரின் பரிந்துரைகளை புறக்கணிக்காமல் ஏற்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7 மற்றும் 9

தானம் - சிறிய காப்பர் மெட்டலை நன்கொடையாக கொடுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கான நிதி நன்மைகள் அதிகமாக இருக்கும் மற்றும் சொத்து தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும். அதிகாரம் மற்றும் பணம் இரண்டையும் பெறுவீர்கள். சட்டப் பிரச்சனைகளை தீர்க்க பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். உற்பத்தியாளர்கள், ஐடி ஊழியர்கள், அரசு அதிகாரிகள், தரகர்கள் மற்றும் நகைக்கடைக்காரர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுப் பேச்சாளர்கள் சாதனைகள் புரியும் நாள். வீண் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதியாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - அடர் ஊதா

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவைப்படுவோருக்கு குடை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு பெயரும் புகழும்கிடைக்கும் நாள். உங்களது பேச்சும், செயலும் பலருக்கும் உத்வேகமாகஇருக்கும். உங்கள் ஆளுமை பெரிதாக வெளிப்படும். காதலில் உள்ளவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஒரு அருமையான நாள். ட்ரெயினர்ஸ், பேக்கர்ஸ், பங்கு தரகர்கள், வடிவமைப்பாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - தேவைப்படுவோருக்கு ரெட் மசூர் செய்யுங்கள்

மே 09 அன்று பிறந்த பிரபலங்கள் : விஜய் தேவரகொண்டா, மகாராணா பிரதாப், சாய் பல்லவி, கோபால கிருஷ்ண கோகலே, மல்லிகா சாராபாய், ராபின் சிங்

Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology