ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழில் வியாபாரத்தில் இன்று (டிசம்பர் 25, 2022) சிறப்பான பலன் கிடைக்கும்.!

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழில் வியாபாரத்தில் இன்று (டிசம்பர் 25, 2022) சிறப்பான பலன் கிடைக்கும்.!

ராசிபலன்

ராசிபலன்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (டிசம்பர் 25) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:வியாபாரிகள் இன்று தங்கள் தொழிலில் பொருளாதார சாதனைகள் படைக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஊழியர்கள் பணியிடத்தில் எதிர்பார்த்ததை விட இன்று சிறப்பாக செயல்படுவீர்கள். முதலீடு சம்பந்தமாக விஷயங்களில் குழப்பத்தை தவிர்க்கவும். பணிவாக இருப்பது வெற்றியை தேடி தரும். இன்று உங்களது இலக்கில் கவனம் செலுத்துங்கள்.பரிகாரம்: ஸ்ரீ சுக்தா பாராயணம் செய்யவும்

  ரிஷபம்:இன்று உங்களது தொழிலில் ஏற்படும் முன்னேற்றத்தால் உற்சாகமாக இருப்பீர்கள். ஊழியர்கள் தங்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இலக்குகளை அடைவார்கள். புதிய திட்டத்தில் வேகமாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இன்று சிறப்பான பலன் கிடைக்கும். பணவரவு இன்று மேம்படும்.பரிகாரம்: அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றவும்

  மிதுனம்:வியாபாரிகளுக்கு இன்று பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் சாதகமாக இருக்கும். இருக்கும் வேலையில் இருந்து மாற விரும்புபவர்களுக்கு இன்று சாதகமான சூழல் உண்டாகும். இன்று நீங்கள் சிறந்த முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிதி நன்மைகள் இன்று அதிகரிக்கும்.பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்யவும்

  கடகம்:அலுவலக பணிகளில் பொறுமையை கடைபிடிக்கவும். வேலைகளை செய்வதில் விவேகமாக இருங்கள். எந்த விதமான சர்ச்சையிலும் ஈடுபடாமல் விலகி இருங்கள். நிதி சார்ந்த விஷயங்களில் இன்று தெளிவு அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் ஆலோசனையை பின்பற்றுங்கள்.பரிகாரம்: சூரிய பகவானுக்கு நீர் வைத்து வழிபடுங்கள்

  சிம்மம்:பியாபாரிகள் இன்று தங்களது தொழில் லாபத்தில் கவனம் செலுத்த வேண்டும். பணியிடங்களில் கொடுக்கப்படும் புதிய பொறுப்பை சரியாக நிறைவேற்றுவீர்கள். இன்று அதீத உற்சாகத்தை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.பரிகாரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள்

  கன்னி:கடினமாக உழைக்கும் விஷயங்களில் இன்று வெற்றி பெறுவீர்கள். நிதி விஷயங்களில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். கொடுக்கப்படும் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டிய நாள்.பரிகாரம்: எறும்புகளுக்கு தீனி வைக்கவும்

  துலாம்:வியாபாரிகள் தங்கள் தொழிலில் சீரான வளர்ச்சி மற்றும் வெற்றியை பதிவு செய்வார்கள். பணவரவு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். ஊழியர்களுக்கு வேலையில் முன்னேற்றம் உண்டாகும் .கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.பரிகாரம்: அரச மரத்தடியில் தீபம் ஏற்றவும்

  விருச்சிகம்:வியாபாரத்தில் இன்று நீங்கள் எடுக்கும் சில உறுதியான மற்றும் தீவிரமான முடிவுகள் சாதக பலன்களை தரும். பணியிடங்களில் உங்களை நிரூபிக்க, நிறைய போராட்டமும் கடின உழைப்பும் இன்று தேவை. பணிச்சுமையை சிறந்த முறையில் கையாண்டால் எதிர்காலத்தில் சிறப்பான பலன்களை பெறுவீர்கள்.பரிகாரம்: பசு மாடுகளுக்கு தீவனம் கொடுங்கள்

  தனுசு:வியாபாரிகள் மேற்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். லாப சதவீதம் சிறப்பாக இருக்கும். வணிகம் தொடர்பான முக்கிய விவாதம் நாளை மாற்றும். இன்று வியாபாரிகளுக்கு தொழிலில் திடீர் லாபம் கிடைக்கும்.பரிகாரம்: அன்னை சரஸ்வதி தேவியை வழிபடுங்கள்

  மகரம்:பொருளாதார விஷயங்களில் இன்று நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய கவர்ச்சிகரமான சலுகைகள் கிடைக்கும். பரம்பரை வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று வெற்றி உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.பரிகாரம்: பைரவர் கோவிலில் தேங்காய் வைத்து வழிபடவும்

  கும்பம்:இன்று உங்களின் முயற்சிகள் வளர்ச்சி பெறும். வேலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தால் லாபம் பெறுவீர்கள். ஆக்கப்பூர்வமான வேலை முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும்.பரிகாரம்: பசுவிற்கு பசுந்தீவனம் கொடுங்கள்

  மீனம்:இன்று முதலீடு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வேலை தேடுபவர்கள் நல்ல வாய்ப்புக்காக சிறிது நாள் காத்திருக்க வேண்டும். வியாபார விஷயங்களில் அவசரம் காட்டாதீர்கள். ஒத்துழைக்கும் மனப்பான்மையால் உங்களின் வேலையில் இன்று வேகம் இருக்கும்.பரிகாரம்: மஞ்சள் நிற உணவு பொருட்களை தானம் செய்யுங்கள்

  First published:

  Tags: Astrology, Money, Rasi Palan, Tamil News