Home /News /spiritual /

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 11, 2022) தொழில் ரீதியாக சிறப்பான நாளாக இருக்கும்..!

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 11, 2022) தொழில் ரீதியாக சிறப்பான நாளாக இருக்கும்..!

செப்டம்பர் 11 Money Mantra

செப்டம்பர் 11 Money Mantra

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 11) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
மேஷம்

வியாபார ரீதியாக இன்றைய நாள் இனிமையாக அமையும். ஆனால் எதிலும் அவசரத்தை தவிர்க்கவும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை காட்டுங்கள். ஏனென்றால் வானிலை மாற்றம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்க கூடும்.

ராசியான நிறம்: ஊதா, ராசியான எண்: 4

பரிகாரம்: ஹனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி, ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள்

ரிஷபம்

இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமானது. ஏனென்றால் இன்று நீங்கள் எடுக்கும் ரிஸ்க் லாபம் தரும். பொறுமை மற்றும் உங்கள் மென்மையான நடத்தை மூலம் பிரச்சனைகளை சரிசெய்யலாம். துன்பத்தில் இருப்பவருக்கு உதவ வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

ராசியான நிறம்: பச்சை, ராசியான எண்: 7

பரிகாரம்: அன்னைக்கு இனிப்பு வழங்குங்கள்

மிதுனம்

பொருளாதார விஷயங்களில் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டால் இன்று எதிர்பாராத லாபம் கிடைக்கும். நிலுவையில் உள்ள முடிவுகளை அப்படியே வைத்திருக்காமல் நலம் விரும்பிகளின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுங்கள்.

ராசியான நிறம்: கிரே, ராசியான எண்: 7

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பிக்கவும்

கடகம்

அதிர்ஷ்டம் வலுவாக பெருகும் என்பதால் உங்களது வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். ரிஸ்க் எடுப்பதன் மூலம் பெரிய வாய்ப்புகளை முயற்சித்து பார்க்க இன்று ஏற்ற நாள்.

ராசியான நிறம்: வெளிர் சிவப்பு, ராசியான எண்: 5

பரிகாரம்: 108 முறை காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும்

சிம்மம்

பரிவர்த்தனைகளில் இன்று நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் நிதி இழப்பைசந்திக்க நேரிடும். வியாபாரத்தில் லாபம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உங்கள் இடத்தை தக்க வைத்து கொள்ள உதவும்.

ராசியான நிறம்: நீலம், ராசியான எண்: 3

பரிகாரம்: அனுமனுக்கு தேங்காய் வைத்து படைக்கவும்

கன்னி

வியாபாரத்தில் இன்று சீக்கிரம் யாரையும் நம்பி விடாதீர்கள் இல்லையெனில் நஷ்டம் ஏற்படும். பொருளாதார பரிவர்த்தனைகளில் தெளிவாக இருப்பதுஎதிர்காலத்திற்கு நல்லது. இன்று எந்தவொரு முக்கியமான வேலை செய்யும் முன் உங்கள் அன்புக்குரியவர்களிடம் கலந்தாலோசியுங்கள்.

ராசியான நிறம்: பச்சை, ராசியான எண்: 1

பரிகாரம்: துர்கை அம்மனுக்கு சிவப்பு புடவை சாத்துங்கள்

துலாம்

இன்று நீங்கள் செய்யும் பெரிய முயற்சிகள் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தை மேலும் பலப்படுத்தும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். அன்புக்குரியவர்கள் மற்றும் மேலதிகாரிகளுடனான சந்திப்பு ஆதாயம் தரும்.

ராசியான நிறம்: சிவப்பு, ராசியான எண்: 9

பரிகாரம்: சிறுமிகளுக்கு கீர் கொடுக்கவும்

விருச்சிகம்

பணியிடத்தில் உங்களது தலைமைத்துவ திறன் அதிகரிப்பதால் சில பொருளாதார நன்மைகளை நீங்கள் இன்று அடைவீர்கள். நினைத்தை பொருளாதார நிலையை அடைய பணம் சம்பாதிக்க தேவையான புதிய முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

ராசியான நிறம்: ஆரஞ்சு, ராசியான எண்: 0

பரிகாரம்: வாழை மரத்தின் கீழ் நெய் தீபம் ஏற்றவும்

தனுசு

ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் இன்று நீங்கள் புத்திசாலித்தனமாக எடுக்கும் முடிவு நிச்சயம் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். இன்று செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால் நாளை கடன் வாங்கும் வாய்ப்பு உள்ளது.

ராசியான நிறம்: கோல்டன் கலர், ராசியான எண்: 8

பரிகாரம்: அதிகாலையில் எழுந்து சூரியனுக்கு நீரை சமர்ப்பணம் செய்யவும்

இதையும் படிங்க: தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (11-09-2022) சொத்து விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கலாம்

மகரம்

அதிக ஆசை உங்களை கடனாளியாக்கும் என்பதை நினைவில் கொண்டு இன்று நீங்கள் செயல்பட வேண்டும். எந்த ஒரு செயலையும் முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள். வெளியிடங்களுக்கு சென்றால் எடுத்து செல்லும் பொருள் மீது கவனம் இருக்க வேண்டும்.

ராசியான நிறம்: ஊதா, ராசியான எண்: 2

பரிகாரம்: மகாலட்சுமிக்கு தாமரை மலரால் அர்ச்சனை செய்யுங்கள்

கும்பம்

நீங்கள் செய்யும் தொழில் மற்றும் வியாபாரத்தில் அனைவருடனும் இணக்கமாக செல்வது நன்மை தரும். தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும், இது பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புகளை கொடுக்கும்.

ராசியான நிறம்: வெள்ளை, ராசியான எண்: 6

பரிகாரம்: நாய்க்கு இனிப்புகளை வழங்கவும்

மீனம்

சொத்து சம்பந்தமான விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள், இதனால் உங்கள் செல்வச்செழிப்பு அதிகாரிக்கும். இன்று உங்கள் நம்பிக்கை உச்சத்தில் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு எப்போதும் போல நிலைத்திருக்கும். நிறைய நல்ல செய்திகள் இன்று வந்து சேரும்.

ராசியான நிறம்: கருப்பு, ராசியான எண்: 9

பரிகாரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் உதவி செய்யுங்கள்
Published by:Kannan V
First published:

Tags: Money, Rasi Palan

அடுத்த செய்தி