ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (டிசம்பர் 24, 2022) வணிகத்தில் புதிய சாதனைகளை படைப்பீர்கள்.!

சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (டிசம்பர் 24, 2022) வணிகத்தில் புதிய சாதனைகளை படைப்பீர்கள்.!

ராசிபலன்

ராசிபலன்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (டிசம்பர் 24) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:வணிகம் தொடர்புடைய முக்கியமான முடிவுகளை இப்போது எடுக்க வேண்டாம். தற்போதைய பிரச்சனைகள் குறித்து மட்டும் கவனம் செலுத்தவும். நிலுவையில் உள்ள உங்களுக்கான பண வரவுகளை பெறுவதற்கான நேரம் இதுவாகும். தொடர்புகளை பலப்படுத்தவும்.பரிகாரம் - துர்க்கை அம்மனுக்கு குங்குமம் படைக்கவும்.

  ரிஷபம்:வணிகத்தில் நீங்கள் புதிய சாதனைகளை படைப்பீர்கள். இந்த தருணம் உங்களுக்கு சாதகமானதாக உள்ளது. வணிகத்தில் தற்போது உள்விஷயம் சார்ந்த சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் இடமாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.பரிகாரம் - சிறுமிகளுக்கு பாதாம்கீர் வழங்கவும்

  மிதுனம்:நேரம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கிறது. மார்க்கெட்டிங் மற்றும் மீடியா தொடர்பாக கூடுதல் தகவல்களை பெறும் பட்சத்தில் உங்கள் வணிகம் வளர்ச்சி அடையும். பெரும் சாதனைகளை நீங்கள் அடைவீர்கள். இருப்பினும் உங்கள் திட்டங்களை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம்.பரிகாரம் - வாழை மரத்தடியில் நெய்விளக்கு ஏற்றவும்.

  கடகம்:பணியிடத்தில் உங்களுக்கான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ளவும். உங்கள் பணியின் தரத்தை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தவும். தற்போது நீங்கள் மேற்கொள்ளும் கடின உழைப்பு எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வாய்ப்பு தேடி வரும்.பரிகாரம் - சூரியணுக்கு தண்ணீர் படையல் வைக்கவும்.

  சிம்மம்:வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. திட்டமிட்டபடி உங்கள் பணிகள் அனைத்தும் நிறைவேறும். பணியாளர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்க இருக்கிறது. இருப்பினும் பிறரது நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம்.பரிகாரம் - லெட்சுமி தேவிக்கு தாமரை தண்ணீர் அபிஷேகம் செய்யவும்.

  கன்னி:பணியிடத்தின் உள் விவகாரங்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. உங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்யவும். நீங்கள் கடினமாக உழைத்தாலும், குறைவான லாபம் தான் இப்போது கிடைக்கும்.பரிகாரம் - கருப்பு நாய்க்கு உணவளிக்கவும்.

  துலாம்:வணிகத்தில் புதிய ஒப்பந்தங்களை செய்து கொள்வீர்கள். அவை உங்களுக்கு பலன் அளிப்பதாக அமையும். பணியிடத்தில் சின்ன பிரச்சினைகள் தோன்றலாம். ஆனால், உங்கள் சாதுர்யத்தால் அனைத்து வித பிரச்சினைகளுக்கும் சுமூகமான முறையில் தீர்வு காண்பீர்கள்.பரிகாரம் - மாற்றுத் திறனாளி நபருக்கு உதவி செய்யவும்.

  விருச்சிகம்:வணிகத்தை மேம்படுத்துவதற்கு சில புதிய திட்டங்கள் உதவிகரமாக இருக்கும். மார்க்கெட்டிங் தொடர்புடைய பணிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தவும். உயர் அதிகாரி அல்லது அரசியல் தலைவர் உடனான சந்திப்பு பலன் தருவதாக அமையும். தனியார் வேலையில் நெருக்கடி நிலவும்.பரிகாரம் - எறும்புகளுக்கு இனிப்பு கலந்த மாவு வைக்கவும்.

  தனுசு:நீங்கள் மேற்கொள்ளும் பணிகளில் மிகுந்த கவனமுடன் செயல்படவும். புதிய முதலீடுகளுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. பணியில் சின்ன, சின்ன பிரச்சினைகள் இருக்கலாம். இருப்பினும், சீனியர் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.பரிகாரம் - மீன்களுக்கு உணவளிக்கவும்.

  மகரம்:வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு நவீன தகவல்களை நீங்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பார்ட்னர்ஷிப் தொடர்புடைய பணிகளில் வெளிப்படைத்தன்மை தேவை. உங்கள் பணியின் தரம் மீது கவனம் செலுத்தவும். அதற்கு தகுந்த பலன் கிடைக்கும்.பரிகாரம் - பெற்றோரிடம் ஆசி பெறவும்.

  கும்பம்:வணிகத்தை மேம்படுத்துவதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது. உங்களுக்கு பெரிய அளவுக்கு வெற்றி கிடைக்கும். இந்த சமயத்தில் மற்றவர்களைக் காட்டிலும் உங்கள் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். பணியாளர்கள் அலுவலக சுற்றுலா செல்வீர்கள்.பரிகாரம் - பசுக்களுக்கு பசுந்தீவனம் கொடுக்கவும்.

  மீனம்:வணிகத்தில் தற்போது சவாலான சூழ்நிலை நிலவுகிறது. எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் பிறரது அறிவுரையை கேட்பது பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவும். வணிகம் தொடர்புடைய புதிய நடவடிக்கைகள் வெற்றி அடையும்.பரிகாரம் - லட்சுமி தேவியை வழிபடவும்

  First published:

  Tags: Astrology, Money, Rasi Palan, Tamil News