Home /News /spiritual /

வெள்ளிக்கிழமை ராசிபலன் | தொழில் ரீதியாக இன்றைய (செப்டம்பர் 2, 2022) தினம் சிறப்பாக இருக்கும்.!

வெள்ளிக்கிழமை ராசிபலன் | தொழில் ரீதியாக இன்றைய (செப்டம்பர் 2, 2022) தினம் சிறப்பாக இருக்கும்.!

money

money

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 2) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

இன்றைய தினம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும், எனவே பண வரவுக்காக எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும். இடமாற்றம் சாதகமாக அமையும். உறவினர்களுடன் உறவு வலுவாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
பரிகாரம்- சிவப்பு நிற பழங்களை ஏழைக்கு தானம் செய்யுங்கள்.

ரிஷபம்:

இன்று கல்வி தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு நாள் சுமூகமாக இருக்கும். பிறருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது, இருப்பினும் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடனை திருப்பி வாங்கவோ அல்லது பண உதவி பெறவோ அதிக முயற்சிகள் எடுக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நிறம்: சிந்தூரி
பரிகாரம் - ஹனுமனுக்கு ஆரத்தி எடுத்து வழிபடுங்கள்.

மிதுனம்:

இன்று வேலையில் முழு ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். முக்கியமான முடிவுகளை எடுப்பதில் தாமதிப்பது லாபம் தரக்கூடிய வாய்ப்பை கைநழுவச் செய்யும் என்பதால், உடனடியாக முடிவெடுப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்

கடகம்:

தொழில் ரீதியாக இன்றைய தினம் சிறப்பாக இருப்பதால், லாபம் தரக்கூடிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புண்டு. இது உங்களுக்கு அதிக பணவரவைக் கொடுக்கும். காதலர்கள் இடையே உணர்வுப்பூர்வமான பந்தம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
பரிகாரம் - பசுவிற்கு புல் அல்லது கீரையை வழங்கவும்.

சிம்மம்:

எதிர்காலத்திற்கான புதிய திட்டங்களை வடிவமைக்க இன்றைய தினம் சிறப்பானது. சட்ட வழக்குகளில் இன்று வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவி உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
பரிகாரம்: துர்க்கை கோயிலில் நெய் தீபம் ஏற்றவும்.

கன்னி:

இன்று குடும்ப வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சனைகள் உருவாகலாம். பெற்றோருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. காதலை வெளிப்படுத்த சரியான நாள். அலுவலக பணியாளர்கள் தங்களது கடின உழைப்பால் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெற வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
பரிகாரம்: ஏழைக்கு வெள்ளை பொருட்களை தானம் செய்யுங்கள்.

துலாம்:

இன்றைய தினம் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். குடும்பத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரது அன்பு மற்றும் ஆதரவையும் பெறுவீர்கள். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று புதிய தொழில் தொடங்குவது பற்றி யோசிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 3
பரிகாரம்: பறவைக்கு தானியம் வழங்கவும்

விருச்சிகம்:

புதிய வேலைகள் மற்றும் புதிய வியாபார ஒப்பந்தங்களில் முன்னேற்றம் ஏற்படலாம். பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு நாள் சிறப்பாக இருக்கும். வேலையில் புதிய சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. திட்டமிட்டு புத்திசாலித்தனமாக வேலையை ஆரம்பித்தால், சீக்கிரம் வேலையை முடிக்க வழி கிடைக்கும். அன்றாடப் பணிகளை முடிப்பதில் எந்தத் தடையும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 8
பரிகாரம்: கருப்பு நாய்க்கு ஏதாவது இனிப்பைக் கொடுங்கள்.

தனுசு:

சமீபத்திய திட்டங்கள் மற்றும் பணிகளில் தடை ஏற்படலாம். இன்றைய தினம் வாக்குவாதம் மற்றும் மோதலைத் தவிர்ப்பது நல்லது, அதேபோல் முதலீடு செய்வதையும் தள்ளிப்போடவும். நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால், எந்தவொரு சொத்து ஒப்பந்தத்தையும் முடிப்பதற்கு முன் அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே
அதிர்ஷ்ட எண்: 8
பரிகாரம்: மாற்றுத்திறனாளி நபருக்கு உதவி செய்யுங்கள்.

மகரம்:

இன்று ரோலார் கோஸ்டர் போல ஏற்ற இறக்கம் இரண்டையும் சந்திக்கக்கூடும். புதிய தொழில் அல்லது பணிமாறுதல் தொடர்பாக பெரிய முடிவுகளை எடுக்கும் முன்பு துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் சீனியர்களிடம் கலந்தாலோசிப்பது நல்ல்து. இன்று வியாபாரத்தில் லாபம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மொத்த வியாபாரம் செய்பவர்களுக்கு நாள் சிறப்பாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: லைட் கிரீன்
அதிர்ஷ்ட எண்: 3
பரிகாரம்- மாவில் சர்க்கரை கலந்து எறும்புகளுக்கு வைக்கவும். ,

கும்பம்:

வியாபாரத்தில் புதிய திட்டங்களுக்கான வேலையைத் தொடங்க ஏற்ற நாள். துணையின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். காதலை வெளிப்படுத்தவும், காதலர்கள் ஒன்றாக பொழுதைக் கழிக்கவும் ஏற்ற நாள். இன்று நினைத்த காரியம் நிறைவேறும். முக்கிய நபர்களைச் சந்திக்க வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
பரிகாரம்: மாலை வேளையில் அரசமரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்.

மீனம்:

நீங்கள் கல்வியில் மிகவும் வெற்றி பெறுவீர்கள், உங்கள் பெயரும் புகழும் வெளியில் பரவும். இன்று நம்பிக்கையுடனும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள். தொழில் துறையில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் கவனத்தை ஈர்க்க வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
பரிகாரம்: சிவப்பு பசுவிற்கு வெல்லம் கொடுங்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Rasi Palan

அடுத்த செய்தி