Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (11-09-2022) சொத்து விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கலாம்

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (11-09-2022) சொத்து விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கலாம்

தெய்வீகவாக்கு

தெய்வீகவாக்கு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (11-09-2022) ராசிப்பலன்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    மேஷம்:

    சில விஷயங்கள் தனிப்பட்ட நலன் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால், முன்னெடுத்துச் செல்லலாம் என்று நீங்கள் முடிவு செய்து விட்டால், பின்னர் எதற்காகவும் அதை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். போலிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் : முகக்கவசம்

    ரிஷபம்:

    ஒரு நிறுவனத்திடம் இருந்து துரிதமாக வரும் பதில் என்பது, அங்கு நீங்கள் தேர்வாக வாய்ப்பு இருக்கிறது என்பதை குறிக்கிறது. உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான ஸ்பான்சர் கிடைப்பார்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிணறு

    மிதுனம்:

    சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது உங்கள் கனவாகும். அதற்காக கடினமாக உழைத்து வருகிறீர்கள். அதில், எந்த மாற்றமும் வேண்டாம். தேவையான பண சேமிப்பு உங்களிடம் இருக்கிறது.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளையாட்டு வீரர்

    கடகம்:

    உங்கள் மனதில் உள்ள தெளிவு மற்றும் சிந்தனை ஆகியவை உங்களுக்கு புரிய வரும். நீங்கள் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை அவை சொல்லும். குதூகலமான நிகழ்வு விரைவில் நடைபெற இருக்கிறது.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செராமிக் பாத்திரம்

    சிம்மம்:

    பொது இடங்களில் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும். தேவையின்றி சில சிக்கல்களில் மாட்டியிருப்பதை உணருவீர்கள். உங்களால் ஈர்க்கப்பட்ட ஒருவர் உங்களை தொடர்பு கொள்வார்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு நிறம்

    கன்னி:

    உங்களுக்கு விருப்பமான ஒன்று வெகு விரைவில் கிடைக்க இருக்கிறது. உங்களை சுற்றியுள்ள எல்லோரும் கருத்துக்களை சொன்னாலும் இறுதி முடிவை நீங்கள் தான் எடுக்க வேண்டும். இனி வரும் நாட்களில் சவால்கள் காத்திருக்கின்றன.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஸ்மார்ட் வாட்ச்

    துலாம்:

    ஏதோ ஒரு போட்டியில் பங்கேற்க நினைக்கிறீர்கள். ஆனால், அதற்கான திட்டமிடுதல், ஆர்வம், உத்திகள் எதுவும் இல்லை. மனம் உடைந்து போன ஒருவர் உங்களிடம் ஆறுதல் தேடி வருவார்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மெத்தை

    விருச்சிகம்:

    உங்கள் துடிதுடிப்பான நடத்தையால் உயர்ந்த இடத்தை பெறுவீர்கள். உங்களுக்கு இருக்கும் தொடர்புகளால் லாபம் கிடைக்கும். ஆனால், பிறர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சொத்து விற்பனைக்கு பேச்சுவார்த்தை நடத்தலாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தையல் டிசைன்

    தனுசு:

    எடுத்த காரியத்தை முடிக்க முடியாமல் திணறுவது பிறருக்கு இயல்பானதாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அதுபோல சோர்வு அடையக் கூடாது. எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மயில்

    மகரம்:

    ஏற்கனவே நடந்த கசப்பான அனுபவம் மீண்டும் நடக்க இருக்கிறது. ஆனால், அதேபோல இருக்காது. பணியிடத்தில் உங்களை உயர்வாக காட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிரபலம்

    கும்பம்:

    எந்த சமயத்தில், எந்த ஆபத்து வந்தாலும் நீங்கள் அச்சமடைய மாட்டீர்கள். ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. நீங்கள் இழந்த ஆற்றலை நண்பர்கள் மீட்டுக் கொடுப்பார்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய கார்

    மீனம்:

    திருமணத்திற்கு திட்டமிட்டு வரும் நபர்களுக்கு வெகு விரைவில் வரன் அமைய இருக்கிறது. உங்களுக்கு நெருக்கமான ஒருவர் நீங்கள் விரும்பும் அதே விஷயத்தை விரும்புகிறார். பொறாமை கொண்ட அந்த நபரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரம்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Rasi Palan

    அடுத்த செய்தி