ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

கன்னிக்கு தேவை கவனம்.. துலாமுக்கு வருமானம்.. உங்கள் ராசிக்கு என்ன? இன்றைய ராசிபலன்!

கன்னிக்கு தேவை கவனம்.. துலாமுக்கு வருமானம்.. உங்கள் ராசிக்கு என்ன? இன்றைய ராசிபலன்!

 ராசிபலன்

ராசிபலன்

இப்போது உங்களிடம் நெருக்கடியான தருணங்களை எளிதாக கையாளும் திறமை வந்திருப்பதை கவனிப்பீர்கள்

 • Trending Desk
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  நிதி நெருக்கடிக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். பணியிடத்தில் ஒரு புதிய நபர் அவருடைய நல்ல குணத்திற்காக உங்களுடைய கவனத்தை ஈர்க்கலாம். இன்று மனம் முழுவதும் நேர்மறையான, நம்பிக்கையான எண்ணம் நிறைந்திருக்கும். மேஷ ராசிக்காரர்களில் சிலர் பயணம் செய்ய திட்டமிருந்தால், அது தள்ளிப்போக வாய்ப்புள்ளது. கடினமான பணிகளை நிர்வகிக்க எளிய அணுகுமுறையை முயற்சி செய்யவும்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - முத்து

  ரிஷபம்:

  உங்களுடைய குழப்பத்திற்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைக்கப்படும். வேலை தேடும் போது அல்லது விருப்பமான பாத்திரத்தை தேடும் போது தெளிவான தகவல்களை பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். உங்கள் ஒதுக்கப்பட்ட பொறுப்பு குறித்து தேவையற்ற வதந்திகள் உலவலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒரு வேலைக்காக ஒரு பெண் உங்களுக்கு உதவி செய்யலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தனிப்பட்ட பணியை முடிக்க நீங்கள் இறுதியாக முடிவு செய்யலாம்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பச்சை ரிப்பன்

  மிதுனம்:

  புது வீடு கட்டும் பணி அல்லது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியை தொடங்க வாய்ப்புள்ளது. மூத்த குழந்தைக்கு பற்கள் சம்பந்தமான பிரச்சனைகள் எழலாம். வித்தியாசமான சிந்தனைகளால் திறமை மேம்படும். பழைய பொழுதுபோக்கு மீது வருங்காலத்தில் நீங்கள் கவனம் செலுத்தலாம். சிலருக்கு திடீர் பணவரவு ஏற்பட வாய்ப்புண்டு.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பிரகாசமான நிறத்திலான சோபா

  கடகம்:

  இப்போது உங்களிடம் நெருக்கடியான தருணங்களை எளிதாக கையாளும் திறமை வந்திருப்பதை கவனிப்பீர்கள். புதிய தகவல் தொடர்பு உங்களை உற்சாகப்படுத்தும். திரைப்பட தயாரிப்பாளருக்கு, நீங்கள் தயாரித்த படத்தின் கதை சர்ச்சையை உருவாக்கக்கூடும். பத்திரிக்கையாளர்கள் மற்றும் கன்டென்ட் ரைட்டர்களுக்கு பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். தொழில்நுட்ப வசதி இன்றைய தினத்தின் தேவையற்ற நேர விரயத்தைக் குறைக்கும்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கார்னிலியன் கல்

  சிம்மம்:

  இன்றைய தினம் மனரீதியாக காயப்பட வாய்ப்புள்ளது. சிறிய திருட்டு அல்லது இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. உங்கள் மனைவி மூலம் இன்று சிறப்பான ஆறுதல் பெறுவீர்கள். முன்பின் தெரியாத நபர் ஒருவர் உங்களது முயற்சிகளை திடீரென ஊக்குவிக்கலாம்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தங்க சங்கிலி

  கன்னி:

  ஈகோவை தவிர்க்கவும், கவனத்துடன் செயல்படவும் வேண்டும். அலுவலகத்தில் டீம் ப்ளேயராக செயல்பட வேண்டும். புதிய திட்டங்கள் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறும். வேலை, உறவு, முதலீடு என அனைத்திலும் முக்கிய முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டிய நாள்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பிரபலம்

  துலாம்:

  இன்றைய தினம் அதிகபட்ச ஆதாயங்கள், உதவிகள் மற்றும் வருமானங்கள் கிடைக்கூடிய காலமாகும். சிந்தனையில் தடுமாற்றமும், குழப்பமும் ஏற்படலாம். உறவினர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள் ஆகியோருடன் புதிய பிணைப்புகளை உருவாக்குவது நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். பழைய நண்பர்கள் யாராவது உதவி கேட்டால், சிக்கல் இருக்கும் பட்சத்தில் அதனை நிராகரிப்பது நல்லது.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கண்ணாடி பாட்டில்

  விருச்சிகம்:

  உங்களை முன்னிலைப்படுத்தும் நபருக்கு, உங்களை வைத்து காரியம் சாதிக்க வேண்டும் என்ற மறைக்கப்பட்ட நோக்கம் இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பிறகு நீங்கள் நம்பிக்கையை இழந்திருந்தால், அதைத் திரும்பப் பெற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் பிறரை ஆச்சர்யப்படுத்துவதற்காக திட்டமிட்டிருந்த விஷயம், உங்களை நிலை தடுமாற வைக்கலாம்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் -துணிச்சலான முயற்சி

  தனுசு:

  ஒரு புதிய உந்துதல், உங்களுக்குள் ஒரு புத்தம் புதிய வழக்கத்தையும் சுயக்கட்டுப்பாட்டையும் கொண்டுவரப் போகிறது. உங்களிடம் சிறிய அல்லது பெரிய மாற்றம் ஏற்படக்கூடும். உங்களுக்கான காதல் துணையை கண்டுபிடிக்க ஏற்ற நேரம். நீங்கள் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டால், அதனை இப்போது செயல்படுத்தலாம்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நியான் லைட்

  மகரம்:

  சிக்கலான பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும். எப்போதோ கிடப்பில் போடப்பட்ட புதிய திட்டம் செயல்படுத்தப்படலாம். நீங்கள் ஒரு கல்வியாளராக இருந்தால், எதிர்பார்த்த வெற்றியை எதிர்பார்க்கலாம். ஒரு புதிய எண்ணம் முதலீட்டிற்கான சேமிப்பாக மாறலாம்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மஞ்சள் மெழுகுவர்த்தி

  கும்பம்:

  குடும்ப உறுப்பினர்களின் உடல்நலம் குறித்த கவலை உங்கள் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். வேலையில் ஒரு புதிய கொள்கை மாற்றங்கள் உருவாகலாம். உங்கள் வளர்ச்சியைப் பார்த்து சக ஊழியர் பொறாமைப்படக்கூடும். புதிய யோசனைகள் மற்றும் அவற்றை செயல்படுத்துவதில் முன்பை விட வேகமாக செயல்படுவீர்கள். புதிய தொழில் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கலாம், அதன் மீது சரியாக ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மீன் தொட்டி

  மீனம்:

  உடன் பணிபுரிபவருடன் ஒரு பிரச்சனை இருக்கலாம் அது வாக்குவாதத்திற்கு வழிவகுக்கும். பிரச்சனை மேலும் வலுவடையக்கூடும் என்பதால், நீங்கள் இப்போது அதைத் தீர்க்க முயற்சிக்காமல் இருப்பது நல்லத. நீங்கள் முயற்சித்திருந்தால், சர்வதேச அளவில் படிக்கவோ அல்லது வேலை செய்யவோ வாய்ப்பு கிடைக்கும். பெற்றோருக்கு மருத்துவ உதவியும் உதவியும் தேவைப்படலாம். நீங்கள் லேசான மனநிலை மாற்றங்களை அனுபவிக்கலாம். அதிக மனநலத்திற்காக வழக்கமான உடற்பயிற்சியை முயற்சிக்கவும்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கரும்புள்ளி

  Published by:Murugadoss C
  First published: