Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்... (ஜனவரி 11, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்... (ஜனவரி 11, 2022)

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்

மேஷம்:  பணத்தை கவனமாக செலவு செய்யவும். நீங்கள் எதிர்பார்த்ததை விட செலவு இன்று அதிகரிக்கலாம். தலைவலி அல்லது உடல் உபாதை ஏதேனும் ஏற்படக்கூடும். வழக்கமாக நீங்கள் என்ன செய்வீர்களோ அதையே செய்யுங்கள். புதிய முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புதிய கண்ணாடி

ரிஷபம்:  இன்று உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். காலை நேரம் பரபரப்பாகத் தொடங்கும். மதியத்துக்குப் பின் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மஞ்சளால் செய்யப்பட்ட பொருள்

மிதுனம்:  நிறைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைத் தரும். உங்கள் உறவுகளில் ஒருவர் உங்களைக் காயப்படுத்தக் கூடும். உங்களுக்கு சாதகமாக இல்லாததை விட்டு விடுங்கள். புதிதாக கற்றுக்கொள்வதற்கு ஏற்ற நாள் இது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சப்பாத்திக் கள்ளிச் செடி

கடகம் : வழக்குகள் இருந்தால் உங்களுக்கு சாதகமாக செல்லும், எனவே அதில் கவனம் செலுத்தவும். உங்கள் மதிப்பை உயர்த்தும் அளவுக்கு பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அலுவலத்தில் உங்களுக்கு பெரிய மரியாதை கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மஞ்சள் நிற சோஃபா

சிம்மம்:  உங்களை நேசிப்பவர்களிடம் இருந்து ஆச்சரியமான பரிசு கிடைக்கும். இன்று நீங்கள் அலுவலகத்தில் நிம்மதியாக உணர்வீர்கள். நிலுவையில் இருக்கும் பணிகளை முடிப்பீர்கள். உங்களுக்கு ஒரு புதிய வாய்ப்பு கிடைக்கும், அதைப் பெற்றுக்கொள்வது பெரிய நன்மையாக மாறும். கண் பார்வை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – குருவி

கன்னி: இன்று ஒரு ஆசை நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள், சில நாட்களில் அது நிறைவேறிவிடும். நீங்கள் உடல் மற்றும் மன ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நீண்ட காலத் திட்டங்களை இன்று மேற்கொள்ளலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கருப்பு நிற கிறிஸ்டல்

துலாம்: நீண்ட நாட்கள் பிரிந்திருந்த அன்பர்கள் இன்று தொடர்பு கொள்ளலாம். உங்கள் நண்பர்களுடன் செலவிடக்கூடிய நாள் இது. அதே நேரத்தில், தனிமையில் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். விரைவிலேயே நீங்கள் பரபரப்பாக வேலை செய்யும் அளவுக்கு பிசியாக மாறிவிடுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – டிரீம்கேட்சர்

விருச்சிகம்: உங்கள் சொந்த வேலைகளை முடிக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் இன்று முதல் பலன் அளிக்கும். வேலையில் புதிய முறைகளை அறிமுகம் செய்து, பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தெளிவான வானம்

தனுசு: அழகான நினைவுகளை அசைபோடுவீர்கள். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். சில நேரங்களில், மன அழுத்தத்தால் ஆற்றலே இல்லாதது போல உணர்வீர்கள். நல்ல உடற்பயிற்சி வழக்கம் அல்லது தியானம் உங்கள் உடல் மற்றும் மனதை சமநிலைப் படுத்தும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புதிய வாட்ச்

மகரம்: இன்றைய தினத்தை நீங்கள் விருப்பம் போல செலவழிப்பீர்கள். உங்களுக்காக, குடும்பத்துக்காக ஷாப்பிங் செல்வீர்கள். உடல் நலம் மீது கவனம் செலுத்தவும். ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிடவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு புதிய அக்சஸரி

கும்பம்: உங்களை தயார் செய்து கொள்வதிலேயே இன்றைய தினத்தின் பாதி செலவாகிவிடும். பய்ற்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் வழக்கத்தை விட பிசியாக இருப்பார்கள். வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பல்வேறு வண்ணங்கள் கொண்ட காஃபி கோப்பை

மீனம்: உங்களைத் தொந்தரவு செய்த பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும். பார்ட்னர்ஷிப் நல்ல பலன்களைத் தரும். புதிய வாகனம் வாங்க வேண்டும் என்றால், அதை இன்று செய்யலாம். பழிவாங்கும் உணர்வு அல்லது கடந்த கால நிகழ்வுகளின் மீதான கோவத்தை கைவிட வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சாலையில் கிடக்கும் இறகுகள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி