Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் பணியிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... இன்றைய ராசிபலன்... (ஜனவரி 07, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் பணியிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... இன்றைய ராசிபலன்... (ஜனவரி 07, 2022)

புதிய நண்பர்களை உருவாக்கும் வசீகரம் உங்களிடம் உள்ளது. ஆனால் தற்போது பொறாமை கொண்ட ஒருவரின் இலக்காக நீங்கள் இருக்கிறீர்கள்.

புதிய நண்பர்களை உருவாக்கும் வசீகரம் உங்களிடம் உள்ளது. ஆனால் தற்போது பொறாமை கொண்ட ஒருவரின் இலக்காக நீங்கள் இருக்கிறீர்கள்.

புதிய நண்பர்களை உருவாக்கும் வசீகரம் உங்களிடம் உள்ளது. ஆனால் தற்போது பொறாமை கொண்ட ஒருவரின் இலக்காக நீங்கள் இருக்கிறீர்கள்.

1. மேஷம்

உங்கள் பணிச்சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் விரைவில் ஏற்படும். நீங்கள் விரைவில் ஒரு யாத்திரைக்குச் செல்லலாம் அல்லது செல்லத் திட்டமிடலாம். உங்கள் உறவினர்கள் இன்று உங்களைச் சந்திக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் நவரத்தின கல்.

2. ரிஷபம்

வயதான நபர் ஒருவர் உங்களைத் தொடர்ந்து தவறாகப் புரிந்து கொள்வார். உங்கள் மீதான தவறான பார்வையை நீக்கும் உத்தியை பற்றி நீங்கள் தான் சிந்திக்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். அதற்காக குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாதங்கள் காத்திருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பட்டு தாவணி.

3. மிதுனம்

இன்றைய தினத்தில் நகை வாங்குவது நன்மை பயக்கும். இந்த ஆண்டில் உங்கள் வாழ்க்கை திட்டத்தை பற்றி யோசிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்கள் யோசனைகள் விரைவில் வடிவம் பெறத் தொடங்கும். முதலாளி அல்லது மூத்தவருக்கு உங்களிடமிருந்து உதவி தேவைப்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளி நூல் அல்லது கம்பி.

4. கடகம்

உங்களுக்கு தேவையில்லாத ஒரு உறவு விரைவில் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும். இந்த நாளில் சில புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அதை விட்டுவிடாதீர்கள். தடைப்பட்ட நிதி சூழல்கள் சரியாகத் தொடங்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - திடீர் மழை.

மேலும் படிக்க... தை மாதத்தின் சிறப்புகள்

5. சிம்மம்

உங்கள் உணர்ச்சிகளை அடக்குவது என்பது உங்களுக்கு எளிய விஷயமல்ல. நெருங்கிய நண்பரின் ஆலோசனையைக் கேளுங்கள். உங்களின் ஆற்றல்கள் சில வகையான ஆதாயங்களை நோக்கி உங்களை நகர்த்தும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஐஸ்கிரீம் விற்பனையாளர்.

6. கன்னி

புதிய நண்பர்களை உருவாக்கும் வசீகரம் உங்களிடம் உள்ளது. ஆனால் தற்போது பொறாமை கொண்ட ஒருவரின் இலக்காக நீங்கள் இருக்கிறீர்கள். அந்த நபரிடம் கவனமாக இருங்கள். யாரோ ஒருவர் உங்களின் முதுகின் பின்னால் செயல்படலாம். எனவே அனைத்து புதிய திட்டங்களையும் இரகசியமாக, குறைந்தபட்ச விவாதத்துடன் கடைபிடிக்கப்பட வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷட அடையாளம் - ஈர்க்கக்கூடிய வானொலி நிகழ்ச்சி.

7. துலாம்

நேரம் எவ்வளவு முக்கியமானது என்பதை இன்று நீங்கள் உணவீர்கள். மேலும் உங்களை போலவே யோசிக்கும் எண்ணம் கொண்டவர்களுடன் இணைய முயற்சிக்கவும். அவை எதிர்காலத்தில் நெட்வொர்க்கிங் லீட்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு சில உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு ரிப்பன்.

8. விருச்சிகம்

இரண்டு அல்லது மூன்று சக ஊழியர்கள் உங்களுக்கு பணியிடத்தில் எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்கலாம். அதிகமாக வெளியே சென்று சாப்பிடுவதை தவிர்க்கவும். வழக்கமான உடற்பயிற்சி முறை இப்போது மிகவும் தேவைப்படுகிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புகைப்பட சட்டகம்.

9. தனுசு

வேலையை தவிர்த்து நீங்கள் குடும்பத்துடன் நேரத்தையும் செலவிட விரும்பினால், அதை இன்றே செய்ய வேண்டும். பணியில் நுண்ணறிவுடன் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு தெளிவு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கர்ப்பிணி பெண்.

மேலும் படிக்க... புதன் கிழமைகளில் இந்த காயத்ரி மந்திரத்தை சொன்னால்

10. மகரம்

விரும்பிய முடிவுகளைப் பெற நீங்கள் இன்னும் கொஞ்சம் உழைக்க வேண்டியிருக்கும். தெரிந்த நபர் திடீரென உங்களுக்கு அளித்த ஆதரவில் இருந்து பின்வாங்கலாம். பணியிடத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் திறமையான பணியாளர்களுக்கு இன்று பிஸியான நாள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழங்கால கடிகாரம்.

11. கும்பம்

இன்று மன ஓய்வு மற்றும் உணர்ச்சி சமநிலையை உணர்வீர்கள். சில உல்லாசப் பயணங்கள் அல்லது நல்ல விருந்துக்கு நீங்கள் செல்லலாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷட அடையாளம் ஒரு புத்தம் புதிய கடை.

12. மீனம்

நீங்கள் தற்போது இருக்கும் நிலையில் வசதியாக இருங்கள். இன்று அதிக கவலை உங்கள் நிலைமையை சிக்கலாக்கும். குழந்தை பருவ ஏக்கம் உங்களில் தோன்றலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு உயரமான கண்ணாடி.

மேலும் படிக்க... மிகவும் சக்திவாய்ந்தது அம்மன் கவசம்...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி