Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று நல்ல செய்தி வரும்... இன்றைய ராசிபலன்... (ஜனவரி 06, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று நல்ல செய்தி வரும்... இன்றைய ராசிபலன்... (ஜனவரி 06, 2022)

நீங்கள் நினைத்த திட்டங்கள் இன்று ஒழுங்காக நடக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். விரைவில் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.

நீங்கள் நினைத்த திட்டங்கள் இன்று ஒழுங்காக நடக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். விரைவில் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.

நீங்கள் நினைத்த திட்டங்கள் இன்று ஒழுங்காக நடக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். விரைவில் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.

1. மேஷம்

இன்றைய தினம் வியக்கத்தக்க வகையில் சில நேர்மறையான அதாவது நல்ல செய்திகள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் அலுவலகத்தில் உங்கள் அணியுடன் ஒரு நல்ல உரையாடலை மேம்படுத்துவது அவசியம். உங்கள் வாழ்க்கைத் துணை வீட்டில் விஷயங்களை நிர்வகிப்பதற்கு உதவியாக இருப்பார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் ரோஜா பூச்செண்டு.

2. ரிஷபம்:

இன்று உங்களை பற்றிய பலர் தெளிவாகப் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள். வணிகர்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும். மேலும் இந்த வாரமும் சிறந்த வரமாக இருக்கும். எளிமையான அணுகுமுறை உங்களுக்கு உதவி புரியும். முக்கியமான ஆவணங்களை இன்னும் ஒழுங்காகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பது அவசியம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய பேனா.

3. மிதுனம்:

நீங்கள் நினைத்த திட்டங்கள் இன்று ஒழுங்காக நடக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். விரைவில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். அவநம்பிக்கையான நேரம் அவநம்பிக்கையான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் முன்னாள் காதல் மீண்டும் உங்கள் வாழ்வில் வரவாய்ப்புள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்கள் இன்றைய தினத்தில் உங்கள் ஆற்றலை குறைக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தரையில் ஒரு இறகு.

4. கடகம்:

சிறு விஷயங்களுக்கு உதவி செய்வதன் மூலம் நீங்கள் இன்று தூய மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்களுக்கு நன்றாக தெரிந்த ஒரு நபர் உங்கள் நம்பிக்கையை உடைக்கக்கூடும். மேலும் நீங்கள் அதைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். சிறு சிறு விஷயங்களை விவாதம் செய்வதன் மூலம் பெரிதாக்க வேண்டாம். மாணவர்கள் இன்று உண்மையான கற்றல் அனுபவத்தைப் பெறுவார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒளிரும் விளக்கு.

5. சிம்மம்:

உங்கள் தவறான கருத்து எதிர்காலத்தில் ஒரு வடுவாக மாறுவதற்கு வழிவகுக்கும். உங்களால் முடிந்தவரை விஷயங்களைத் தெளிவாக எடுத்துச்சொல்வதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் துணை உங்கள் மீது பொசஸ்ஸிவாக உணரலாம். பிற்பகலில் நீங்கள் எரிச்சல் அடையும் வகையில் ஏதவாது நடக்கலாம். உங்கள் தாய்க்கு உங்களிடமிருந்து உதவி தேவைப்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குழந்தைகளின் சைக்கிள்.

6. கன்னி:

உங்களுக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கும். உண்மையானவைகள் உங்களை இன்று சந்தித்து செல்லலாம். இன்று உங்கள் ஆற்றல் இந்த வாரம் முழுவதும் எப்படி செல்லும் என்பதை தீர்மானிக்கும். பணியிடத்தில் நல்லிணக்கத்தை உருவாக்குங்கள். உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழைய புகைப்படம்.

7. துலாம்:

இன்று வெற்றிக்கான நாள். உங்கள் எல்லா அச்சங்களையும் தவிர்க்க வேண்டிய தினம் இன்று. நாளைய தினத்திற்கான திட்டமிடலைத் தொடங்குங்கள். உங்கள் நெருங்கிய நண்பர் உங்கள் மீது பொறாமைப்படுவார். எனவே உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் எந்தஒரு முக்கிய திட்டங்கள் குறித்தும் பேசாதீர்கள். இன்று லேசாக சாப்பிடுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு பந்து

8. விருச்சிகம்:

உங்கள் யோசனைகளை முன்வைக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து யாராவது உங்கள் முயற்சியை அங்கீகரித்து பாராட்டலாம். உங்கள் யோசனை ஒருவரை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் வெற்றிகரமாக இருக்கும். உங்கள் தந்தை உங்களிடம் உதவியைக் கேட்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வானத்தில் இரண்டு காத்தாடிகள்.

9. தனுசு:

உங்கள் வாழ்க்கையில் உண்மையான பொக்கிஷம் உங்கள் குடும்பம். இன்று அவர்களின் ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். சிறுசிறு உடல்நலப் பிரச்சினைகள் வரலாம். வேலையில் குழப்பத்திலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். வங்கி வேலைகளை செய்யும் போது கவனமாக இருங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கசப்பான சுவை.

10. மகரம்:

உங்களை பற்றிய தவறான புரிதல் தவிர்க்கப்படும். உங்களுக்கு கவலை உணர்வு இருக்க வாய்ப்பு உள்ளது. வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு அமையலாம். உங்களை விட்டுவிட்டு உங்கள் பெற்றோர் பயணத் திட்டத்தை உருவாக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு லாக்கெட்.

11. கும்பம்:

சில இனிமையான இயற்கை சூழல்கள் அல்லது இசைக்கு மத்தியில் நீங்கள் ஓய்வெடுக்கலாம். வேலை குறைவாக இருக்கும். ஆனால் உங்களின் தினம் இன்று பிஸியாக இருக்கும். ஒரு சிலருக்கு தலைவலி தொந்தரவு இருக்கலாம். திறமையான வேலையாட்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கருப்பு வாயில்.

12. மீனம்:

இன்று உங்கள் மனம் உங்களை ஏமாற்றலாம். நிதானமாக இன்று உங்கள் ஆழ்மனது சொல்வதை கேளுங்கள். சில நண்பர்கள் உங்களை அழைத்து விரிவாக உரையாடலாம். வெளிநாட்டில் இருந்து வரும் உறவினர்கள் சில நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செப்பு கம்பி.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி