Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று அமைதியாக இருப்பது நல்லது... இன்றைய ராசிபலன்... (ஜனவரி 05,2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று அமைதியாக இருப்பது நல்லது... இன்றைய ராசிபலன்... (ஜனவரி 05,2022)

Today Rasi Palan | உங்கள் மோசமான நேரத்திலும் இன்று நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்கள் பழைய நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த செய்தியைப் பெறுவீர்கள்.

Today Rasi Palan | உங்கள் மோசமான நேரத்திலும் இன்று நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்கள் பழைய நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த செய்தியைப் பெறுவீர்கள்.

Today Rasi Palan | உங்கள் மோசமான நேரத்திலும் இன்று நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்கள் பழைய நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த செய்தியைப் பெறுவீர்கள்.

1. மேஷம்:

நீங்கள் மற்றவர்களால் டார்கெட் செய்யப்படும் போது அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் இது மிக தற்காலிகமான சூழ்நிலை தான். ஆனால் அது உங்களின் நிலையை சோதிக்கலாம். இன்று நீங்கள் ஒரு குறுகிய பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த நாள் விளையாட்டு அல்லது பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிவான வானம்.

2. ரிஷபம்:

எந்த ஒரு விஷயமும் உங்களுக்கானது அல்ல என்றாலோ அல்லது உங்களுக்காக உருவாக்கப்படவில்லை என்றாலோ, அதனை விட்டுவிடுவது நல்லது. எப்படியாவது இந்த நாளின் இறுதியில் நீங்கள் உற்சாகமடையும் வகையில் ஏதாவது ஒரு நல்ல விஷயம் உங்களுக்கு நடக்கும். இந்த நாளில் வேலைக்காக நேர்காணலுக்கு செல்பவர்கள், உங்களை நன்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் கேட்கும் கேள்விகள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆர்ச்சிட் மலர்.

3. மிதுனம்:

காலை நடைப்பயிற்சி செய்வது உங்களுக்கு ஒரு சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும். இந்த நாளில் உங்கள் மனது சொல்வதை கேட்டு நடந்துகொள்ளுங்கள். மேலும் இன்று நீங்கள் ஒரு சமூக நோக்கத்திற்காக பங்களிப்பதாக உணர்வீர்கள். இன்று உங்களுக்கு போட்டி நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பகடை

4. கடகம்:

இன்று நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்கள் பழைய நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த செய்தியைப் பெறுவீர்கள். வேலையில் பிறருடன் நடக்கும் சூடான வாக்குவாதம் உங்களை வருத்தமடையச் செய்யலாம். உங்கள் மேம்பட்ட நேர மேலாண்மைத் திறமையால் பிறரை ஆச்சரியப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீல பேருந்து.

5. சிம்மம்:

நீங்கள் சில சமயங்களில் கடினமான நபராகக் பிறருக்கு தெரியலாம். இருப்பினும் பிறருடன் தெளிவாக பேசுவதன் மூலம் அவர்களுக்கு புரிய வைக்க முடியும். யாரோ ஒருவரின் பொறாமையால் நீங்கள் உங்கள் பொறுமையை இழக்கலாம். எனவே இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு அவர்களை மகிழ்ச்சியாக்குங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கூடைப்பந்து.

6. கன்னி:

நீண்ட காலமாக மனதிற்குள் வைத்து வந்த ரகசியத்தை வெளிப்படுத்தாமல் தவிர்த்து வந்த நீங்கள் இன்று உண்மையை சொல்ல வேண்டியிருக்கும். இன்று உங்கள் பயணம் ஆன்மீக ரீதியில் இருக்கலாம். இந்த புதிய அனுபவத்தை மகிழுங்கள். உங்கள் நெருங்கிய நண்பர், உங்களால் ஏமாற்றப்பட்டதாக உணரலாம். அதை பற்றி அவரிடம் தெளிவாக பேசவும்.

இந்த ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காபி குவளை.

7. துலாம்:

உங்கள் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும். எல்லாவற்றிலும் முழுமையை உருவாக்க வேண்டும் என்ற உங்கள் அணுகுமுறை எல்லா விஷயத்திற்கும் பொருந்தாது என்பதை உணர வேண்டும். பிறரின் கருத்துக்களையும் செவி கொடுத்து கேட்க வேண்டும். இன்று ஒரு நல்ல மதிய உணவு அந்த நாளின் சிறப்பம்சமாக இருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளி கிண்ணம்.

8. விருச்சிகம்:

உங்கள் அச்ச உணர்வுகளை விட்டுவிட்டு உங்கள் நாளை புதிய ஒருவராக தொடங்குங்கள். குடும்பத்தில் இருந்து உங்களுக்கு பெரும் ஆதரவு உண்டு. விரைவில் புதிய ஒத்துழைப்பை பெறுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மிட்டாய் கடை

9. தனுசு:

இன்றைய நாள் வியத்தகு முறையில் நிறைவடையும். மற்றபடி குழு முயற்சியில் உங்கள் பங்களிப்பிற்கான கிரெடிட்டை இன்று நீங்கள் பெறுவீர்கள். இன்று பிற்பகலில் உங்கள் உடல்நிலையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். இருப்பினும் மாலை நேரத்திற்குள் அந்த நிலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அக்வா ப்ளூ சோபா.

10. மகரம்:

இந்த தினம் உங்கள் திட்டங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் குழப்பத்திற்கு வழிவகுக்கும். பல விஷயங்களில் உங்களுக்கு கவனம் தேவைப்படுவது அவசியம். நாளின் சில மணி நேரங்கள் மட்டும் இந்த குழப்பம் தொடரும். உங்கள் விருப்பமான உறவினர் மூலம் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். முடிந்தால் மாலையில் ஓய்வெடுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுக்கு பிடித்த இனிப்பு.

11. கும்பம்:

இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்தபடி இல்லாமல் இருக்கலாம். எப்போதாவது எடுத்த முடிவை நீங்கள் இன்று மறுபரிசீலனை செய்யலாம். சீக்கிரமாக வேலைகளை முடித்து விட்டு ஓய்வு நேரத்தில் நல்ல புத்தகத்தைப் படிக்க வேண்டிய நாள். உங்களை மகிழ்வித்து, இந்த நாளை புதிய செயலுக்கு தயாராகுங்கள்.

உங்களின் அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு மொபைல் கவர்

12. மீனம்:

உங்கள் திறனுக்கு ஏற்ப செயல்படுங்கள். அது விரைவில் பலனைத் தரும். உங்களிடம் தனித்துவமான திறமை உள்ளது. அவ்வளவு சீக்கிரம் மற்றவர்களைப் பார்த்து பயப்படாதீர்கள். இப்போது நீங்கள் உங்கள் ஓய்வு நேரத்தை அனுபவித்துவிட்டீர்கள். இன்றிலிருந்து ஒரு நல்ல வேலை அட்டவணையைத் திட்டமிடுங்கள். அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நல்ல நாள்.

உங்களின் அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செப்பு பாத்திரம்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி