Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது... இன்றைய ராசிபலன் (ஜனவரி 03, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது... இன்றைய ராசிபலன் (ஜனவரி 03, 2022)

மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்கான இன்றைய (ஜனவரி 03) ராசிபலனை கணித்தவர் ஆரக்கல் பூஜா சந்தர்.

மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்கான இன்றைய (ஜனவரி 03) ராசிபலனை கணித்தவர் ஆரக்கல் பூஜா சந்தர்.

மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்கான இன்றைய (ஜனவரி 03) ராசிபலனை கணித்தவர் ஆரக்கல் பூஜா சந்தர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மேஷம் : எஞ்சியிருக்கும் வேலைகளைத் தொடரவும், நிலுவைத் தொகையை செலுத்தவும் நல்ல நாள். லேசான தொற்று அல்லது தலைவலி ஏற்பலாம். அதனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாக்குவாதத்தின் போது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது எதிர்காலத்தில் உதவும்.

அதிர்ஷ்ட அடையாளம் - பசுமையான தோட்டம்

ரிஷபம் :  இன்றைய நாள் உங்களுக்கு ஆற்றலும் சக்தியும் நிறைந்தநாள்.   இது உங்களை சில புதிய வேலைகளைத் தொடங்க வைக்கும். யாராவது கடன் கேட்டால், பணிவுடன் மறுப்பது நல்லது.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சாம்பல் இறகு

மிதுனம்:  நீங்கள் மனதளவில் பலசாலியாக இருந்தாலும் சிலர் இன்று உங்கள் உணர்ச்சி பொங்கும் அளவிற்கு நடந்துக் கொள்வார்கள். அதனால் நீங்கள் சமநிலையை அடைய சில பேச்சுவார்த்தை உத்திகள் தேவைப்படும். சக ஊழியர் உதவி கேட்கலாம். அது உண்மையானதாக இருக்கும். ஏமாற்றிவிட மாட்டார்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - குவியலான கூழாங்கற்கள்

கடகம்: இன்று நீங்கள் உங்கள் பழைய நண்பர்களை சந்திக்க நேரிடலாம். வெளிப்புற சந்திப்பு ஏதேனும் இருந்தால் இன்று வானிலை ஆதரிக்காது. நீங்கள் ஒரு காரியத்தை செய்ய திட்டமிட்டிருந்தால், இப்போது அதற்கான வாய்ப்பை கூடி வரும்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கார்பன் காகிதம்

சிம்மம்:  விருந்தினர்கள் தீடீர் என்று வருகை தரலாம். இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வராமல் இருக்கும் சில பாக்கிகள் வந்துவிடும்.  உங்கள் ஊழியர்களால் சில பிரச்னைகள் வரலாம். அதை முன்னுரிமையின் அடிப்படையில் தீர்க்கவும்.

அதிர்ஷ்ட அடையாளம் - முத்து சரம்

கன்னி
வேலையில் உள்ள சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நேரம் நிலுவையில் இருக்கும் உரையாடலை நீங்கள் தேர்வு செய்யலாம். வீட்டிலும் அலுவலகத்திலும் ஆவணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்திருங்கள். இன்று உங்களுக்கு சரியான தூக்கம் வராது.

அதிர்ஷ்ட அடையாளம் - எலுமிச்சை வாசனை

துலாம் :

பிறரிடம் நீங்கள் அக்கறையுடன் இருப்பது உங்களை பலவீனமாக்காது. உங்கள் வலுவான வாதங்களை முன்வைக்கவும். புதிய செய்முறையை முயற்சிக்க இது ஒரு சிறந்த நாள். உங்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு தண்டு

விருச்சிகம்

கெட்ட கனவுகள் ஆழ் மனதில் பயத்தை ஏற்படுத்தும். அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம். பழைய நண்பரை அழைப்பதன் மூலம் இன்றைய நாள் சிறப்பாக அமையும் .

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு செங்கல் சுவர்

தனுசு

நெருங்கிய ஒருவரால் நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள். இன்று உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். மாலை நேரத்தில் வெளியூர் பயணம் செல்லுவீர்கள். அதனால் வழக்கமான மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வது உதவியாக இருக்கும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நியான் ஹைலைட்டர்

மகரம் 

பழைய நினைவுகள் இன்று உங்களை ஆட்சி செய்ய வாய்ப்புள்ளது. ஒரு உண்மை சோதனை உதவியாக இருக்கலாம். உங்கள் தாய் உங்களின் அன்பை எதிர்பார்க்கலாம். பழைய அணுகுமுறைக்கு புதிய திட்டத்தை உருவாக்கவும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி பாட்டில்

கும்பம்

உங்கள் பயம் இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது. கெட்ட கனவுகள் இல்லை, காலம் மாறிவிட்டது. சமீபத்திய மாதங்களில் நீங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். . உங்களுக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழைய ஆலமரம்

மீனம்

நீங்கள்தான் உங்கள் குடும்பத்தின் உணர்ச்சி, ஆதரவு அமைப்பு மற்று எல்லம். அதனால் அவர்களிடம் அதிக நேரம் செலவிடுங்கள். இன்று புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. மருத்துவ நிபுணர்களுக்கு வழக்கத்தை விட அதிக வேலை செய்யக்கூடிய நாளாக அமையும். அரசு அதிகாரிகளுக்கு இடையூறுகள் ஏற்படும்.

Read More : Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்.. (ஜனவரி 03, 2022)

Must Read : ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -17

அதிர்ஷ்ட அடையாளம் - மூன்று பறவைகள் ஒன்றாக
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி