Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று சாதகமான செய்தி வர இருக்கிறது... (மே 23, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று சாதகமான செய்தி வர இருக்கிறது... (மே 23, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன்...

மேஷம்:

பணியில் ஒரு சீரான நிலையை உருவாக்க வேண்டும் என்ற உங்கள் நோக்கம் நிறைவேறும். கடந்த கால அனுபவங்களின் எதிரொலியாக நம்பிக்கை என்பதே தற்போதைய பிரச்சினையாக இருக்கும். மூத்தவர்களின் ஆதரவு உண்டு.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கேளிக்கை பொம்மை

ரிஷபம்:

தினசரி இலக்குகளை இலகுவாக முடிப்பதற்கான அறிகுறிகள் இன்றைக்கு தென்படுகின்றன. எதிர்பாராத செய்தி ஒன்று உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும். புதிய விளையாட்டுப் போட்டி உங்கள் ஆர்வத்தை தூண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பெரிய பேனர்

மிதுனம்:

உங்கள் உடன் பிறந்தோர் உங்களோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டால் நல்லெண்ணம் கருதி நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். நீண்ட விவாதத்தில் சின்ன, சின்ன விஷயம் கூட மகிழ்ச்சியை தரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிலிகான் மோல்டு

கடகம்:

குறிப்பிட்ட ஒரு செயலை செய்து முடிக்க முடியுமா என்ற கேள்வி இறுதியாக நிறைவு பெற இருக்கிறது. தெளிவான சிந்தனையே அடிப்படையானது. சமூக அந்தஸ்து என்பது தற்போது முக்கிய விஷயமாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ப்ளூ ரிப்பன்

சிம்மம்:

சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரையில் முழுமையான ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சியை உணருவீர்கள். உங்களுக்கு சாதகமான செய்தி ஒன்று வர இருக்கிறது. பணியிடத்தில் போட்டி ஏற்படக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஐஸ்கிரீம்

கன்னி:

தினசரி இலக்குகள் சிலவற்றை கைவிடுவது நல்லது. ஏனென்றால், அதை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க இயலவில்லை என்பதால் நீங்கள் எரிச்சல் அடையக் கூடும். பிறருக்கு உதவி செய்வது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நினைவுச்சின்னம்

துலாம்:

உங்களுக்கு நீங்களே உறுதி அளித்துக் கொண்ட கடந்த கால வாக்குறுதி ஒன்று இருக்கும். அதை நிறைவேற்றுவதற்கான தருணம் இது. உங்கள் உடன் பிறந்தோருடன் குடும்ப பிரச்சினைகள் வரக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காப்பர் பாட்டில்

விருச்சிகம்:

ஏதேச்சையாக உங்கள் கனவாக அமைந்த விஷயம் ஒன்றை செயல்படுத்த இன்றைக்கு சிறப்பான நாளாகும். உங்கள் தகவல்களை அதிக மக்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். அது குழப்பத்தை ஏற்படுத்தும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - டெர்ரகோட்டா கிண்ணம்

தனுசு:

உங்களை சுற்றியுள்ள சிலர் எதிர்மறை எண்ணத்துடன் உங்களை அணுகக் கூடும். அவர்களை நீங்கள் தவிர்க்கவும் முடியாது. நீண்ட பயணம் மற்றும் புதிய உத்தி ஆகியவை உங்களுக்கு பலன் தரக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளாஸ் டேபிள்

மகரம்:

அவசரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் போதுமானதாக இருக்காது. கடைசி நேர கவலை உங்களுக்கு தொந்தரவாக அமையும். ஒரே நேரத்தில் ஒரு செயலை மட்டும் செயல்படுத்துவது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரூபிக் க்யூப்

கும்பம்:

பழைய கனவு ஒன்று இன்றைக்கு தொடர்ச்சியாக உங்கள் நினைவலைகளில் வந்து போகும். புதிய திசையை நோக்கி தற்போது மேற்கொள்ளும் முயற்சிகள் பலன் தரும். நண்பர் மூலமாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சாக்கலேட்

மீனம்:

ஏதோ ஒன்று தவறாக நடக்க இருப்பதற்கான அறிகுறிகள் தெளிவாக தென்படுகின்றன. மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கவும். அடுத்த வரக் கூடிய விவாதம் உங்களுக்கு சாதகமாக அமையும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய வாகனம்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி