Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (8 ஆகஸ்ட் 2022) கோதுமை தானம் செய்யவும்

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (8 ஆகஸ்ட் 2022) கோதுமை தானம் செய்யவும்

எண் கணித பலன்கள்

எண் கணித பலன்கள்

Numerology | ஆகஸ்ட் 8-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • Trending Desk
 • 4 minute read
 • Last Updated :
  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  கடந்த கால முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்க தாமதம் ஆகலாம். இன்றைய தினம் உங்கள் திறமைகளுக்கு சவால் விடுவதாக அமையும். குறிப்பாக அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கடினமான வாய்ப்புகளை ஏற்க வேண்டாம். பண பலன்கள் மிதமானதாக இருந்தாலும், தடையின்றி வந்து சேரும். மன நலன் முக்கியம் என்பதால் நள்ளிரவு நேரம் வரையிலும் பணி செய்ய வேண்டாம். விவசாயம், கல்வித் தொழில்களில் லாபம் கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் மஞ்சள்

  அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 9

  தானம் - ஆசிரமத்தில் கோதுமை வழங்கவும்.

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  மனநலனை மேம்படுத்த மதிய உணவில் வெள்ளை நிற இனிப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் நேர்மையும், விசுவாசமும் தான் வெற்றிக்கு காரணம். உங்கள் அப்பாவித்தனத்தை சிலர் தவறாகப் பயன்படுத்த முயற்சி செய்வார்கள் என்பதால் மிகுந்த புத்திகூர்மையுடன் இருக்க வேண்டும். ஏற்றுமதி, இறக்குமதி, மருத்துவர்கள், பொறியாளர்கள், இடைத்தரகர்கள், டிராவல் ஏஜென்சீஸ், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் போன்றோருக்கு வெற்றி கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 2

  தானம் - கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்கவும்.

  #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உடன் இருப்பவர்களின் பொறாமைகளை புறந்தள்ளிவிட்டு முன்னோக்கிச் செல்லுங்கள். அளவில்லா ஆற்றல் மற்றும் திடமான திறன் ஆகியவை காரணமாக பணியில் ஏற்றம் உண்டு. உங்களின் புத்தாக்க சிந்தனை மற்றும் மதி மயக்கும் பேச்சு ஆகியவை அலுவலகத்தில் உயர் அதிகாரியையும், வீட்டில் உள்ளவர்களையும் கவருவதாக அமையும். அனைத்து சூழல்களிலும் நீங்கள் சமாளித்து வேலை செய்பவர் என்பதால் வெற்றி என்பது வெகு தொலைவில் இல்லை.

  அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ

  அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

  தானம் - கோவிலில் மரப் பொருட்களை தானமாக வழங்கவும்.

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் அதிர்ஷ்டம் சாதகமாக இருப்பதால் பண லாபம் தரும் அனைத்து விஷயங்களையும் செயல்படுத்தலாம். எதிர்கால நலன் கருதி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். நல்ல வாழ்வியல் முறைகளை கடைப்பிடிக்கவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மென்மேலும் வளர்ச்சி கிடைக்க இருக்கிறது. பணம் சார்ந்த திட்டங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மாணவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

  அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

  அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - பிச்சைக்காரர்களுக்கு காலணிகளை தானம் செய்யவும்.

  #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  குறுகிய கால பண வரவு மீது ஈர்க்கப்படுவதை விடுத்து, கடின உழைப்பை மேற்கொள்ளுங்கள். உங்கள் உணர்வுகளை பார்ட்னரிடம் வெளிப்படுத்துவதற்கு சிறப்பான நாள் ஆகும். இயந்திரங்கள் வாங்குவது, சொத்து விற்பனை, அலுவல் ரீதியான ஆவணங்களில் கையெழுத்திடுவது, வெளியூர் பயணங்களை மேற்கொள்வது போன்ற காரியங்களுக்கு உகந்த நாளாகும். பொறியாளர்களுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டு கிடைக்க இருக்கிறது.

  அதிர்ஷ்ட நிறம் - அக்வா

  அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 5

  தானம் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு பச்சை நிற பழங்கள் வழங்கவும்.

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  நிதி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண, சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் தொடர்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்பை முதலீடாக மாற்றுவதற்கான முயற்சிகளை எடுக்கலாம். இலக்கை நோக்கி கடினமாக உழைக்கும் பட்சத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தின் அன்பு மற்றும் ஆதரவு காரணமாக மகிழ்ச்சி பெருகும். சில்லறை வியாபாரிகள், ஆசிரியர்கள், நகை வியாபாரிகள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ஆகியோருக்கு சிறப்பு உயர்வு கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9

  தானம் - வீட்டு பணிப்பெண்ணுக்கு வளையல்கள் வழங்கவும்.

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும். உங்கள் பொறுப்புகளை பிறர் மீது சுமத்தாதீர்கள். சுற்றியுள்ள நபர்களை சாதூர்யமாக தேர்வு செய்யவும். வணிக ரீதியாக நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளிடம் இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் போட்டிகளை தவிர்க்க வேண்டும். எதிர்பாலினத்தவர் மூலமாக எதிர்காலத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பண ரீதியிலான லாபங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

  அதிர்ஷ்ட நிறம் - பச்சை

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 3

  தானம் - பருப்பு சேர்த்து வேக வைத்த உணவுகளை தானமாக வழங்கவும்.

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பழைய கடன்களை தீர்ப்பதற்கான நம்பிக்கை இன்று தென்படும். உங்களைச் சுற்றியுள்ள நபர்கள் விசுவாசம் மிகுந்தவர்களாக இருப்பதால் தலைமைத்துவ பண்பை அனுபவிக்கலாம். உடல் ஆரோக்கியம் குறித்து கவனம் கொள்ளுங்கள். குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவும். பசுமைத் தோட்டங்களில் சிறிது நேரம் செலவிடவும். பணி சார்ந்த விஷயங்களில் நீங்காள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். அதே சமயம், மூத்தவர்களின் அறிவுரையை ஏற்க வேண்டும்.

  அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - ஏழைகளுக்கு குடை வழங்கவும்.

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  சமூக வலைதளம் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றை உங்களுக்கு சாதகமானதாகப் பயன்படுத்திக் கொண்டு தொழிலில் பெயர், புகழ் பெற வேண்டும். சமையலர்கள், மருத்துவர்கள், மருந்து விற்பனையாளர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு பரிசு மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். நிதி லாபங்கள் மற்றும் சொத்து பத்திரப்பதிவுகள் ஆகியவை இன்றைக்கு இலகுவாக நடைபெற உள்ளது.

  அதிர்ஷ்ட நிறம் - பிரவுண்

  அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 9

  தானம் - ஏழைகளுக்கு சிவப்பு நிற பருப்பு தானம் செய்யவும்.

  ஆகஸ்ட் 8 அன்று பிறந்த பிரபலங்கள் :

  கபில் சிபல், பஹத் ஃபாசில், அபு ஆஸ்மி, தாதா கோண்ட்கே, பைண்டால், திலிப் சர்தேசாய், ராஜீவ் மஹரிஷி,
  Published by:Murugesh M
  First published:

  Tags: Numerology

  அடுத்த செய்தி