Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (1 ஆகஸ்ட் 2022) சர்க்கரை தானம் செய்யுங்கள்.

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (1 ஆகஸ்ட் 2022) சர்க்கரை தானம் செய்யுங்கள்.

எண் கணித பலன்

எண் கணித பலன்

ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் வணிகத்திற்கான பட்ஜெட் உருவாக்குவதில் நேரத்தை செலவிடுவீர்கள். வேலையில் முன்னேற்றம் பெறுவீர்கள். எந்த சவாலையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் உற்சாகமும் இன்று உங்களுக்கு இருக்கும். எனவே வியாபாரத்தில் ரிஸ்க் எடுங்கள். இன்று தம்பதிகளிடையே பிரச்சனைகள் ஏற்படும். பொறுமையாய் இருக்க வேண்டும். சூரிய பகவானின் அருளைப் பெற, ஏழைகளுக்கு மஞ்சள் நிற உணவுகளை விநியோகிக்கவும். உங்கள் வெற்றியைக் கண்டு உங்களைச் சுற்றியுள்ள பலர் பொறாமைப்படுவார்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

    அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, வெள்ளி

    அதிர்ஷ்ட எண்: 1

    தானம்: ஆசிரமங்களுக்கு சர்க்கரை தானம் செய்யவம்.

    #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிட வேண்டிய நாள். வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையை நீங்கள் அறிவீர்கள். புதிய வேலைக்கு விண்ணப்பிக்கவும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் நல்ல நாள். முதலீட்டில் லாபம் அதிகமாக இருக்காது. எனவே நிதி விஷயத்தில் அதிக உற்சாகமடைய வேண்டாம். அழகுசாதனப் பொருட்கள், திரவப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், மருந்துப் பொருட்கள், ஏற்றுமதி-இறக்குமதி, சூரிய ஆற்றல், விவசாயம், திரவப் பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகிய துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: கிரீம், ஆகாய நீலம்

    அதிர்ஷ்ட கிழமை: திங்கள்

    அதிர்ஷ்ட எண்: 2

    தானம்: பிச்சைக்காரர்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் வழங்கவும்

    #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    வீட்டில் துளசி செடியை நட்டு மாலையில் தீபம் ஏற்றவும். உங்களின் படைப்பு ஆளுமையை வெளிப்படுத்தும் நாள். மாணவர்களுக்கு வெற்றிகரமான நாள். உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும். உங்கள் காதலை திருமண உறவுக்கு எடுத்துச் செல்வதற்கு சிறந்த நேரம். நீங்கள் அரசியலில் இருப்பவர் என்றால் மக்களை ஈர்ப்பதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

    மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பும், நேர்காணலுக்கு முன்பும் குரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பெண்கள் மாலையில் குருவுக்கு தீபம் ஏற்ற வேண்டும்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

    அதிர்ஷ்ட கிழமை: வியாழன்

    அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

    தானம்: கால்நடைகள் அல்லது ஏழைகளுக்கு வாழைப்பழங்களை தானம் செய்யுங்கள்.

    #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள். நீங்கள் சாஃப்ட்வேர் அல்லது ஹார்ட்வேர் சார்ந்த துறையில் பணி செய்பவர் என்றால் உங்களுக்கு இன்று பெரிய வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. உடற்பயிற்சிக்கு உரிய நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் சோலார் மின் உற்பத்தி, பட தயாரிப்பு, சமையல் போன்ற பணிகளில் இருப்பவர் என்றால் சாதனங்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம்

    அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய்

    அதிர்ஷ்ட எண்: 9

    தானம்: விலங்குகளுக்கு உணவளிக்கவும்

    #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    பிராண்ட் இமேஜைப் பராமரிக்க நேர்மையான மற்றும் நம்பகமான குழுத் தலைவர் பதவியைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் அமைதி நீடிக்க வேண்டும் என்றால் உறவுகளில் நேர்மையாகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்க வேண்டும். உங்கள் சுதந்திரத்தை எந்த வகையிலும் தவறாக உபயோகிக்க வேண்டாம். உடன் பணியாற்றுபவர்கள் குறித்து கவனமுடன் இருக்க வேண்டும். ரகசியம் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆண்கள் நீல நிற ஆடையும், பெண்கள் பச்சை நிறமும் அணிந்து அதிர்ஷ்டத்தை தருவார்கள். பயணங்களை தவிர்த்துவிட்டு இன்று எளிமையாக சாப்பிடுங்கள். சொத்து சம்பந்தமான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும்.

    அதிர்ஷ்ட நிறம்: அக்வா,

    அதிர்ஷ்ட கிழமை: புதன்,

    அதிர்ஷ்ட எண்: 5,

    தானம்: கோவிலுக்கு தேங்காய் தானம் செய்யுங்கள்.

    #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    வீட்டில் அல்லது அலுவலகத்தில் பெரியவர்களால் நீங்கள் ஒடுக்கப்பட்டதாக உணரலாம். இது தற்காலிகமானது. எதிர்காலம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்றால் சவால்களையும், வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். குழந்தைகளைக் கண்டு பெற்றோர் பெருமை அடையும் தருணம் இது. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்புகளுக்கு மருத்துவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்

    அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு,

    அதிர்ஷ்ட கிழமை: வெள்ளி,

    அதிர்ஷ்ட எண்: 6,

    தானம்: ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யுங்கள்.

    #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    எப்போதும் செப்பு நாணயம் அல்லது வெண்கல நாணயத்தை பையில் வைத்திருங்கள். ஒரு நாள் பண பரிவர்த்தனைகளை தவிர்க்கவும். எதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்களின் ஆலோசனைகளை ஏற்க வேண்டும். ஒரு வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெறுவது சரியான வழியில் பணத்தை சேமிக்க உதவும். மென்பொருள் தொடர்பான வியாபார ஒப்பந்தங்கள் வெற்றியடையும். திருமண முயற்சிகளை கருத்தில் கொள்வது நல்லது. சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வது புண்ணியம் தரும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,

    அதிர்ஷ்ட நாள்: திங்கள்

    அதிர்ஷ்ட எண்: 7

    தானம்: கோவிலுக்கு மஞ்சள் துணி தானம் செய்யவும்.

    #எண் 8 (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    வியாபாரத்தை மேம்படுத்த பணம் செலவு செய்யுங்கள். உங்களின் நிதித் திறமையால் உங்கள் பங்குதாரர் ஈர்க்கப்படுவார். வெளிநாடு செல்ல முயற்சிக்கும் மாணவர்கள் பெரும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது கனவுகளை நனவாக்க உதவும். இன்று எடுக்கும் அனைத்து முடிவுகளும் நல்லதாகவே இருக்கும். விளையாட்டு வீரர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் சாதனைகளைப் பெறுவார்கள். பயணத் திட்டங்கள் தாமதமாகும்.

    அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

    அதிர்ஷ்ட கிழமை: சனிக்கிழமை

    அதிர்ஷ்ட எண்: 6

    தானம்: ஏழைகளுக்கு செருப்பு தானம் செய்யுங்கள்.

    #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தை அணியுங்கள். எதிர்காலத்திற்கு திட்டமிட சிறப்பான நாள் ஆகும். அரசு ஒப்பந்த ஆவணங்கள் மிக எளிமையாக கையெழுத்தாகும். எதிர்கால அரசியல் தலைவர்களுக்கு இன்று புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். பொதுக்கூட்ட பேச்சு, நேர்காணல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளவும். மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு விருது கிடைக்கலாம். சாப்ட்வேர், இசை, ஊடகம், கல்வி ஆகிய துறைகளில் பணியாற்றுபவர்கள் புகழ் பெறுவார்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிவப்பு

    அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய்

    அதிர்ஷ்ட எண்: 9

    தானம்: சிவப்பு மசூர் பருப்பு தானம் செய்யுங்கள்

    ஆகஸ்ட் 1 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: மீனா குமாரி, சுனில் சேத்ரி, டாப்ஸி பன்னு, கிருஷ்ணா, குரீந்தர் சிங், டெல்லி கணேஷ்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Numerology, Rasi Palan

    அடுத்த செய்தி