Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (31 ஜூலை 2022) ஆதரவற்றவர்களுக்கு பால் தானம் செய்யுங்கள்

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (31 ஜூலை 2022) ஆதரவற்றவர்களுக்கு பால் தானம் செய்யுங்கள்

எண் கணித பலன்

எண் கணித பலன்

ஜூலை 31 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான இன்றைய எண் கணிதப் பலன்கள்

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்களை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டிய நாள் இது. எனவே உங்களுடைய கடின உழைப்புக்கு நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு எதிராக ஏதேனும் விஷயம் நடக்கலாம், ஆனால் அதை நீங்கள் அப்படியே கடந்து விடுங்கள். எண்ணெய், விவசாயக் கருவிகள். இயந்திரங்கள், டிராவல் ஏஜன்சி, மரச்சாமான்கள், புத்தகங்கள், மருந்துகள் கார்மென்ட் ஆகிய துறைகளில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

    அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

    அதிர்ஷ்ட எண்: 1

    நன்கொடைகள்: பிச்சைக்காரர்களுக்கு கோதுமையை தானம் செய்யுங்கள்

    #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று உங்கள் சகாக்களுடன் வாக்குவாதங்கள் மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடிய மிகவும் மந்தமான நாளாகக் காணப்படுகிறது, எனவே அமைதியாக இருக்கவேண்டும். பெண்கள், மற்ற பெண்களுடன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் வெடிக்கலாம். பலரும் உங்களுடைய உணர்வுகளையும் குறிக்கோளையும் அடையவிடாமல் தடையாக இருப்பார்கள். சட்டரீதியான கமிட்மெண்ட் உங்களை பெரிய அளவில்  பாதித்து பின் நிறைவேறும். மதிய உணவிற்கு பிறகு இந்த நாள் சாதகமாக இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

    அதிர்ஷ்ட நாள்: திங்கள்

    அதிர்ஷ்ட எண்: 6

    தானம்: கோயிலில் இரண்டு தேங்காய்களை வழங்குங்கள்

    #எண் 3( நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு இந்த நாளை உங்கள் விருப்பப்படி செலவிடுவதன் மூலம் மன அழுத்தம் குறையும். புதிய வேலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. குடும்ப தலைவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும். எல்லா முடிவுகளுமே உங்களுக்கு சாதகமாக இருக்கும். இயக்குநர்கள், ஏஜென்ட்கள், வழக்கறிஞர்கள், இசைக் கலைஞர்கள், மற்றும் எழுத்தாளர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாள். அரசாங்க அதிகாரிகள் தங்கள் சுற்றுப்புறத்தில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். உங்கள் குருவின் பெயரை சொல்லி நெற்றியில் சந்தனம் வைத்து உங்கள் நாளைத் தொடங்கங்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

    அதிர்ஷ்ட நாள்: வியாழன்

    அதிர்ஷ்ட எண்: 3, 1

    நன்கொடைகள்: ஏழைகளுக்கு பிரவுன் அரிசியை தானம் செய்யுங்கள்

    #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்கள் முடிவுகளில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள். எதிர்காலத்தில் அது உங்களுக்கு நல்ல மாற்றத்தை கொண்டு வரும். முடிவுகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளக் கூடாது. உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் சொத்து வாங்கும் முயற்சியை ஒத்திவைக்கவும். அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான நாள் ஆகும். சைவ உணவை சாப்பிடுங்கள். தியானம் செய்வது அவசியம். தனிப்பட்ட உறவுகளில் எந்த குழப்பமும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். சமைக்காத உணவுகளை சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும், தியானம் செய்வதும் நன்மை அளிக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம்

    அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

    அதிர்ஷ்ட எண்: 9

    நன்கொடைகள்: ஏழை எளியவர்களுக்கு சித்ராஸ் பழங்களை தானமாக வழங்கவும்

    #எண் 5 (நீங்கள் 5, 14 , 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    நாளின் தொடக்கம் கொஞ்சம் மெதுவாக செல்வது போல இருந்தாலும் மதிய நேரத்திற்கு மேல் உங்களுக்கு சாதகமாக மாறிவிடும். கிளாமர் மற்றும் மீடியா துறையில் இருப்பவர்கள் இன்றைக்கு எல்லையில்லா வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். தனிப்பட்ட வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கடந்த காலத்தில் உங்களுடைய கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டு இன்று கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு ஒரு சீனியர் உதவி செய்தால் அவருடைய உதவியை தவிர்க்காதீர்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

    அதிர்ஷ்ட நாள்: புதன்

    அதிர்ஷ்ட எண்: 5

    நன்கொடைகள்: ஆதரவற்றவர்கள் இல்லத்தில் பால் தானமாக வழங்கவும்

    #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் ஈடுபாட்டுடன் இருப்பீர்கள், அது உங்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும் தரும். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நடிகர்கள் மற்றும் மீடியா ஊழியர்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். புதிய வீடு அல்லது புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். நாளின் பின்பகுதியில் நிம்மதியாக, ஓய்வாக செலவழிப்பீர்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்

    அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

    அதிர்ஷ்ட எண்: 6

    நன்கொடைகள்: ஏழை எளியவர்களுக்கு பால் இனிப்புகளை வழங்குங்கள்

    #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    நேரத்தை வீணடிக்காதீர்கள். சௌகரியமான சூழலில் இருந்து வெளியே வந்து முயற்சி செய்யவும். உங்களுக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. புதிய உறவுகள் மலரும் மற்றும் எதிர்பாலினத்தவர் மூலமாக உங்களுக்கான அதிர்ஷ்டம் தேடி வரும். கனிவாகப் பேசினால் இன்றைக்கு வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு பங்குச் சந்தையில் அதிக லாபம் கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

    அதிர்ஷ்ட நாள்: திங்கள்

    அதிர்ஷ்ட எண்: 7

    நன்கொடைகள்: ஆதரவற்ற இல்லங்களுக்கு ஸ்டேஷனரி பொருட்கள் தானம் செய்யவும்

    #எண் 8 (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    மனதை ரிலாக்சாகவும், அமைதியாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முன்னுரிமை அளிக்கவும். உங்கள் கடந்த கால உழைப்பிற்கு இன்றைக்கு நிதி ரீதியாக நல்ல பலன் கிடைக்க இருக்கிறது. பெரிய முடிவுகளை எடுக்கும் போது இலகுவாக செயல்படவும். உங்கள் நல்லெண்ணம் மற்றும் சமூக தொடர்புகள் ஆகியவற்றின் மூலமாக வெற்றி கிடைக்க இருக்கிறது. அறிவை வளர்த்துக் கொள்ள அதிக நேரம் செலவு செய்வீர்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் புகழ் அதிகரிக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

    அதிர்ஷ்ட நாள்: சனி

    அதிர்ஷ்ட எண்: 6

    நன்கொடைகள்: வீட்டுப் பணியாளர்களுக்கு துளசி வழங்குங்கள்

    #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்): தொழில் அல்லது வேலை நிமித்தமாக உங்கள் அடையாளத்தை உருவாக்குவதற்கு மிகவும் முக்கியமான நாள். வணிக ஒப்பந்தங்கள் சுமூகமாக கையெழுத்தாகும். இன்று நீங்கள் பழைய நண்பர்களை சந்தித்து, உங்கள் கடந்த கால இனிமையான நிகழ்வுகளை நினைவுகூறலாம். காதலில் இருக்கும் நபர்கள், தூது வரும் நபர்கள் குறித்தும், அவர்களின் நோக்கம் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். திடீர் பண வரவை எதிர்பார்க்கலாம். இன்றைய நாள் முழுவதும் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க, நேர்காணலில் பங்கேற்க அல்லது அரசு ஆணைகளுக்கு பதில் அளிக்க இன்று சிறப்பான நாள் ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஆரஞ்சு

    அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

    அதிர்ஷ்ட எண்: 3, 9

    நன்கொடைகள்: மாதுளம் பழத்தை தானமாக வழங்குங்கள்

    ஜூலை 31 அன்று பிறந்த பிரபலங்கள்: கியாரா அத்வானி, முன்ஷி பிரேம்சந்த், பிசி சர்கார் ஜூனியர், அராடா இஸுமி, மும்தாஜ்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Numerology, Rasi Palan

    அடுத்த செய்தி