Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்று அவசரத்தில் முடிவுகள் எதுவும் எடுக்காதீர்கள்... ( ஏப்ரல் 28, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்று அவசரத்தில் முடிவுகள் எதுவும் எடுக்காதீர்கள்... ( ஏப்ரல் 28, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | இன்றைய சூழ்நிலையை சிறப்பாக கையாள சில அடிப்படை நுண்ணறிவுகள் உங்களுக்கு உதவ கூடும்...

மேஷம்:

இன்று ஒரே நேரத்தில் நீங்கள் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கலாம். பல விஷயங்களை கையாண்டாலும் திறமையாக அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். இன்று ஏதேனும் உடல்நல கோளாறுக்கான அறிகுறி இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை பாருங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: ஒரு கோல்டன் ஃபிஷ்

ரிஷபம்:

நீங்கள் இதற்கு முன் தவறவிட்ட ஒரு வாய்ப்பு வேறு வடிவத்தில் உங்களுக்கு இன்று கிடைக்க வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை இன்றாவது சிறப்பாக பயன்படுத்தி கொள்ள பாருங்கள். வெளிப்படையாக உங்களை பற்றி நீங்களே சுயவிமர்சனம் செய்து கொள்ளாதீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: ஒரு நீச்சல் குளம்

மிதுனம்:

இன்றைய சூழ்நிலையை சிறப்பாக கையாள சில அடிப்படை நுண்ணறிவுகள் உங்களுக்கு உதவ கூடும். பிறரின் பேச்சை கேட்டு நடப்பதை இன்று தவிர்த்து விடுவது நலம். வழக்கமான வேலையை தவிர வேறு வெளிகளில் ஈடுபடுவது உங்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்தும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: ஒரு நைட்டிங்கேல்

கடகம்:

இன்றைய நாள் உங்களக்கு மாற்றத்திற்கான சிறப்பாக நாளாக அமையலாம். உங்கள் தொழில் அல்லது வேலையில் நீங்கள் எதிர்கொள்ளும் மாற்றங்கள் நன்மைகளை அளிக்கும். உங்கள் பெற்றோரின் உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும். இன்று பணப்புழக்கம் குறைவாக இருக்க கூடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: ஒரு தோட்டம்

சிம்மம்:

இன்று உங்களுக்கு மன அமைதி கிடைக்கலாம். ஓய்வெடுக்கும் மனநிலை தோன்றலாம். நீண்ட நாட்களாக உங்கள் துணைக்கும் - உங்களுக்கும் நிலவி வந்த மனக்கசப்புகள் இன்று விலகலாம். ஆனால் இந்த நிலைமை ஏற்பட உங்கள் மனதில் இருக்கும் விஷயங்களை ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: ஒரு கூடு

கன்னி:

புதிய நபர்களுடன் பழ, வெளியூர் பயணத்தைத் திட்டமிட இன்று நல்ல நாள். ஒரு திடீர் வேலை உங்களது சில திட்டங்களை தள்ளிப்போட காரணமாக அமையும். இன்று உங்களுக்கு பழக்கமாகும் புதிய நபரால் உங்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: இரண்டு குருவிகள்

துலாம்:

இன்று உங்களுக்கு சற்று கடினமான நாளாக இருக்கலாம், ஆனால் மாலை நேரம் இயல்பாக இருக்கும் மற்றும் உங்களுக்கு ஓய்வை கொடுக்கும். உங்கள் மனதில் தோன்றும் புதிய சிந்தனை உங்களை ஊக்குவிக்கும். வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவ கூடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: ஒரு மரப்பெட்டி

விருச்சிகம்:

நீண்ட காலமாக தள்ளி போட்டு வந்த ஒரு திட்டத்தை இன்று நீங்கள் நம்பிக்கையாக தொடங்கலாம். ஏனென்றால் நீங்கள் இன்று துவங்கும் எல்லாமே வெற்றியை நோக்கியே அழைத்து செல்லும். இன்று நீங்கள்செய்யும் நீண்ட கால முதலீடும் நல்ல பலனை தரும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: ஒரு புது போன்

தனுசு:

இன்று உறவினர்களிடம் கவனமாக இருங்கள். ஏனென்றால் உறவினர் ஒருவரால் சில சிறிய தொல்லைகள் இருக்கலாம். இன்று உங்களுக்கு கிடைக்கும் சாதாரண முதலீட்டு வாய்ப்பு பின்னர் நல்ல வருமானத்தை கொண்டு வரலாம் என்பதால் வாய்ப்பை தவர் விடாதீர்கள். நீங்கள் இதுநாள் வரை அறியாத ரகசியம் ஒன்றை உங்கள் உடன்பிறந்தவர் உங்களுக்கு சொல்ல கூடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: ஒரு மரத்தண்டு

மகரம்:

இன்று உங்களுக்கு அலைச்சல் அதிகரிக்கலாம். நாள் முழுவதும் பயணம், பயணம் என்று ஓடி கொண்டே இருக்க நேரிடலாம். இன்று அவசரத்தில் முடிவுகள் எதுவும் எடுக்காதீர்கள். உங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்ட ஆலோசனையை நீங்கள் இன்று கடைப்பிடிக்க விரும்பலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: ஒரு பீங்கான் ஜாடி

கும்பம்:

உங்களது எண்ணங்கள் தற்போதைய சூழலுடன் பொருந்தாமல் போகலாம் என்றாலும் மாறுபட்ட கண்ணோட்டம் உங்கள் பிரச்சனைகளை தீர்க்க உதவும். மற்றவர்கள் உங்களை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதை பற்றி கவலைப்படாதீர்கள். இன்று உங்களக்கு கிடைக்கும் புதிய நட்பு வாழ்வில் வசந்தத்தை கொண்டு வரலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: ஒரு நீல நிற பாட்டில்

மீனம்:

ஒரே ஒரு வருமான ஆதாரத்தை மட்டுமே நீங்கள் எப்போதும் சார்ந்து இருப்பது நல்லதல்ல. எனவே உங்கள் வாழ்வில் பணத்தை பெருக்க மற்றும் பொருளாதார நிலையை உயர்த்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நாள் இன்று.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: ஒரு சில்வர் ஸ்பூன்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி