மேஷம்:
மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் கவனம் தேவை. தேவையான இடங்களில் உங்களது கருத்தை வெளிபடுத்த தயங்க வேண்டாம். இல்லையெனில் உங்களது வேலையில் பாதிப்புகள் உண்டாக கூடும். தூரத்து உறவினர் ஒருவரின் மூலம் சில பிரச்சனைகள் வரலாம். கவனம் தேவை.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – சிட்டு குருவி
ரிஷபம்:
பணம் சம்பாதிப்பதில் அதிக கவனம் கொள்வதின் மூலம் உங்கள் வாழ்வின் சில முக்கிய கொள்கைகளை கைவிட வாய்ப்புகள் உண்டு. எனவே கவனம் தேவை. உங்களை முன்னேற்ற உதவும் சில பழக்க வழக்கங்களை கற்று கொள்வது நல்லது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – வாத்து
மிதுனம்:
கிடப்பில் இருந்த வேலைகளை உடனே செய்து முடிப்பது நன்மை அளிக்கும். சோம்பேறித்தனமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் விளையாட்டுகளில் ஆர்வமுடன் கலந்து கொள்வது நன்மையளிக்கும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – அரச மரம்
கடகம்:
மற்றவர்களுடன் பொழுதை கழிப்பதற்கு மிகவும் ஏற்ற நாள். இன்றைய நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்து இருக்கும். மாலைக்கு மேல் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள். பொருளாதார முன்னேற்றங்கள் மெதுவாக நடைபெறும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – களிமண் கிண்ணம்
சிம்மம்:
உங்களுக்காக வேறொருவர் உங்களுடைய வேலைகளை முடிப்பார் என நினைத்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதனால் ஏமாற்றமடைய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கான வேலைகளை நீங்களே தனியாக செய்ய முடியும் என்பதை உணர்வது நல்லது. புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – கேளிக்கை பூங்கா
கன்னி:
இன்றைய நாள் மிகவும் ரிலாக்சாக இருப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - அருங்காட்சியகம்
துலாம்:
உங்களது கடந்த கால நிகழ்வுகளை அசை போடுவது நல்லது. அதை பொறுத்தே நிகழ்காலத்தை வடிவமைக்க போகிறீர்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – படிகம்
விருச்சிகம்:
உங்களது எண்ணப்படியே உங்கள் வாழ்க்கை அமையும் என்பதை மறக்க வேண்டாம். வேலைகளை தள்ளி போடுவதை தவிர்ப்பது நல்லது. சுறுசுறுப்பாக செயல்பட வேண்டிய நாள்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - படிக கண்ணாடி
தனுசு:
இன்றைய நாளில் சற்று மன அழுத்தத்துடன் இருக்க வாய்ப்புகள் உண்டு. அதே சமையத்தில் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். பிரச்சனைகள் தானாக சரியாகும். உங்களது பெற்றோரின் துணையுடன் வெற்றியை ஈட்டுவீர்கள்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – மர தண்டு
மகரம்:
உங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் நேரம் வந்துவிட்டது. உங்களது தவறுகளுக்கு மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்த வேண்டும். உணர்வுகளை அதிகம் கட்டுபடுத்த வேண்டாம்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஆலமரம்
கும்பம்:
எவ்வளவு தயாராக இருந்தாலும் எதுவே ஒன்று இல்லாததை போல ஒரு உணர்வு ஏற்படும். நம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நடக்க தயாராகி விட்டீர்கள் என்பதை உணர வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த வாழ்க்கையை அமைத்து கொள்வீர்கள்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – வயல்
மீனம்:
காலை வேலையில் சற்று மன சோர்வுடன் காணப்படுவீர்கள். நாளின் இறுதியில் அனைத்தும் சரியாகும். உங்களுக்கு சாதகமாக நிலைமை இருக்கும். மதியத்திற்கு மேல் நண்பர்களுடன் நேரம் செலவழிக்க வாய்ப்புகள் உண்டு. மதியத்திகு மேல் கிடப்பில் இருந்த வேலைகள் முடிந்து விடும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – கண்ணாடி வேலைப்பாடு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News