மேஷம்:
குழுவாக இணைந்து நேர்மையுடன் பணியாற்றுவதே தற்போதைய அவசிய தேவையாக இருக்கிறது. நீங்கள் ஏதேனும் உறவில் உள்ளீர்கள் அல்லது திருமணம் ஆனவர் என்றால் உங்களை பற்றிய தேவையற்ற வதந்திகள் பரவும். உங்களை புதுப்பித்துக் கொள்ள சிறப்பான நாளாகும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காகம்
ரிஷபம்:
உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான சிறப்பு வாய்ந்த வாய்ப்புகளை உங்களுக்கான நட்சித்திரங்கள் ஏற்படுத்துகின்றன. அதன் பலனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். எளிமையுடன் இருந்தால் அங்கீகாரம் கிடைக்கும். நிதி விவகாரங்கள் தெளிவானதாக இருக்க வேண்டும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மலர் மாலை
மிதுனம்:
இன்றைக்கு ஒவ்வொரு பணியையும் தக்க சமயத்தில் முடிப்பது சவாலாக இருக்கும். இன்றைக்கு உங்கள் ஆற்றல் சீரானதாக இருக்க காலையில் தியானம் செய்யவும். ஏற்கனவே சிரமத்தில் இருக்கின்ற சிலருக்கு மீண்டும் தொந்தரவு கொடுக்க வேண்டாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூரிய அஸ்தமனம்
கடகம்:
பிறர் மீது படிப்படியாக நம்பிக்கை கொள்வீர்கள். உங்களின் அன்றாட வாழ்க்கையில் இது வளர்ச்சியை ஏற்படுத்தும். கடந்த கால நினைவுகள் மீண்டும் மனதில் தோன்றலாம். தானம் செய்வது மன நிறைவை தரும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய நாற்காலி
சிம்மம்:
அனைத்து கட்டுக்கதைகளும் விரைவில் விலகிப் போகும். அதன் பலன்களை நீங்கள் பார்ப்பீர்கள். உங்களுடன் இணைந்து பணியாற்றுபவர்களால் புதிய உயரங்களை அடைவீர்கள். இன்றைய தினம் விறுவிறுப்பாக இருக்கும். எதையும் ஒத்திவைக்க வேண்டாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரப்பர் செடி
கன்னி:
பழைய நண்பர் ஒருவருக்கு உங்கள் உதவி தேவைப்படலாம். சேமிப்பு உங்களுக்கு ஊக்கம் தருவதாக அமையும். உடல்நலன் தொடர்புடைய நடவடிக்கைகளை இனியும் ஒத்திவைக்க வேண்டாம். குறிப்பாக பல் நலனை கவனிக்கவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளிக்கரண்டி
துலாம்:
இன்றைய தினம் உங்கள் ஆழ்மனம் உங்களை வழிநடத்தும். முக்கியமான சந்திப்பு ஒன்று உங்கள் எதிர்காலம் பிரகாசமாக அமைவதற்கான அறிகுறியை காட்டும். தானம் செய்ய வேண்டும் அல்லது சேவை செய்ய வேண்டும் என மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளையாட்டு பொருள் பை
விருச்சிகம்:
இன்றைய காலைப் பொழுது நெருக்கடி மிகுந்ததாக இருக்கும். பிற்பொழுதில் அது சரியாகிவிடும். உங்கள் வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்படுவதை தவிர்க்க கவனமாக இருக்கவும். உடன் பிறந்தவர்களுக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கறைபடிந்த கிளாஸ்
தனுசு:
உங்களுக்கான அற்புதமான பொழுது தொடங்க இருக்கிறது. நீங்கள் புதிய பொறுப்பை ஏற்க உள்ளீர்கள். உங்கள் பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அவை திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பால் பொருள்
மகரம்:
உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் இருந்து உங்களை பிரித்து வைக்கும் நடவடிக்கையை சிலர் மேற்கொள்கின்றனர். ஆனால், அதற்கு இப்போது எந்த தேவையும் இல்லை. இன்றைய தினம் வீட்டில் அதிக நேரம் செலவிடுவீர்கள். ஆவண நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு செங்கல் சுவர்
கும்பம்:
அன்புக்குரிய நபர்களுடன் நடைபெறும் சிறப்பான விவாதம் பயனுள்ளதாக அமையும். உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகின்ற நபரிடம் இருந்து விலகி இருக்கவும். இன்றைய தினம் உங்களுக்கான ஆற்றல் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அழகான உள் அரங்கு
மீனம்:
புதிதாக தொடங்கிய பயிற்சி உங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றாலும், உங்கள் உடல்நலனுக்கு அது நல்லது. இன்று புதிய முதலீடு செய்கிறேன் என்ற பெயரில் ஆபத்தில் இறங்க வேண்டாம். பழைய நண்பர் திடீரென்று பார்க்க வருவார்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தங்க நட்சத்திரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News