மேஷம்:
புதிய முயற்சிகள் மற்றும் திட்டப் பணிகளை தொடங்க இன்றைய நாள் மிகவும் நல்ல நாள். உங்கள் திறன் இவ்வளவு தான் என்று நீங்கள் நினைத்ததை விட நீங்கள் அதிக திறமைசாலி என்பதை உணர்வீர்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கண்ணாடி
ரிஷபம்:
நீங்கள் இவ்வளவு நாள் வரை செய்து வந்த அதே வழக்கத்தை பின்பற்றுங்கள். முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பதை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கலாம். ஒரு நல்ல சலுகை உங்கள் நாளை மாற்றும்.
உங்கள் அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளி மெழுகுவர்த்தி
மிதுனம்:
நீங்கள் ஒருவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்தால், இன்று சரியாக இருக்கும். உங்கள் திட்டங்கள் அனைத்தையும் எல்லாரிடமும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உங்கள் அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரத்தினம்
கடகம் :
நீங்கள் மறைத்து வைத்திருந்த ரகசிய எண்ணங்கள் யாராவது ஒருவருக்கு தெரியக் கூடும். நீங்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமாக மற்றவரை சார்ந்திருக்கலாம், ஆனால் அது தேவையற்ற ஒன்று. யாரையும் சார்ந்து இல்லாமல் நீங்கள் சுயமாக செயல்படலாம்.
உங்கள் அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் கல்
சிம்மம்:
பல ஆண்டுகளாக நீங்கள் சந்திக்காத ஒருவரை விரைவில் சந்திப்பீர்கள். ஆற்றல்கள் நேற்மறையாக இருப்பதால் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதிலோ அல்லது அனுபவிப்பதிலோ ஆர்வம் காட்டலாம். சிலர் விடுமுறைக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்று திட்டமிடலாம்.
உங்கள் அதிர்ஷ்ட அடையாளம் - மெழுகுவர்த்தி
கன்னி:
உங்களை விட்டு விலகிச் செல்லும் ஒருவரை நீங்கள் நேசித்தால், அந்த உணர்வுகளில் இருந்து உங்களால் அவ்வளவு எளிதாக வெளி வர முடியாமல் போகலாம். நீங்கள் இன்று பணத்தை கையாளும் போது மிகவும் கவனமாக இருக்கவும்.
உங்கள் அதிர்ஷ்ட அடையாளம் - புத்தர் சிலை
துலாம்:
உங்கள் தலைமைப் பண்புகள் அதிகரித்து வருகிறது, அதை வெளிப்படுத்தியதற்காக நீங்கள் பாராட்டுக்களையும் பெறலாம். நீங்கள் அனைத்து விவரங்களை தெரிந்து வைத்துள்ள ஆற்றல் கொண்டுள்ளீர்கள். நீங்கள் கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களது செயல்திறனுக்கான பாராட்டுகளை பெறுவீர்கள்.
உங்கள் அதிர்ஷ்ட அடையாளம் - இன்டோர் பிளான்ட்
விருச்சிகம்:
உங்கள் வேலை சார்ந்த விஷயங்களில் நீங்கள் செல்லும் வழியை ஏற்கனவே சிலர் தவறு என்று கூறியுள்ளனர். எனவே, புதிதாக முயற்சி செய்யுங்கள். பண வரவும் லாபமும் கிடைக்கும்.
உங்கள் அதிர்ஷ்ட அடையாளம் - சேம்பர்
தனுசு:
உங்களின் மன உறுதி மற்றும் சுறுசுறுப்பால், குறைந்த காலத்தில் நீங்கள் உருவாக்கிய ஒரு விஷயம் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெறும். புதிதாக தொழில் தொடங்கலாம் என்று யோசித்தால், சாதகமான சூழல்கள் உள்ளன. எனவே விரைவில் செயல்படுத்துங்கள்.
உங்கள் அதிர்ஷ்ட அடையாளம் - கிளிம்பர்
மகரம்:
இன்றைய நாள் நன்மை தீமை என இரண்டு அலைகளும் கலந்து வீசக்கூடும். உங்கள் நம்பிக்கைக்குரிய ஒரு நபர், உங்களைப் பற்றி விஷயங்களை வெளியே சொல்லலாம். எனவே நீங்கள் அவர்களை நம்பி இருப்பதைக் குறைத்து கொள்வது நல்லது.
உங்கள் அதிர்ஷ்ட அடையாளம் - பட்டாம்பூச்சி
கும்பம்;
இன்றைய தினம் நிலுவையில் உள்ள உங்கள் வேலையை முடிக்க திட்டமிடுவீர்கள் ஆனால் அது மேலும் தள்ளிப் போகலாம். குடும்பத்தினர் மற்றும் மனைவியிடமிருந்து ஆலோசனைகளை பெறாமல் இருப்பது நல்லது.
உங்கள் அதிர்ஷ்ட அடையாளம் - கேன்வாஸ்
மீனம்:
கடந்த காலத்தில் நீங்கள் செய்த செயல்களால் தற்போது குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுடன் பார்ட்னராக இருக்கும் ஒரு நபரும் அதையே நினைவு படுத்துகிறார். இந்த விஷயங்களைச் சரிசெய்ய மிக விரைவில், நேரம் உங்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கக்கூடும் என்று தெரிகிறது.
உங்கள் அதிர்ஷ்ட அடையாளம் - இரண்டு இறகுகள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News