மேஷம்:
உங்களது உள்ளுணர்வை கேட்டு அதன் மூலம் முடிவுகளை எடுப்பது நன்மை அளிக்கும். கடந்த கால தவறுகளை நினைத்து அதிகம் வருந்தி கொண்டிருக்காமல் சில விஷயங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நல்ல வளர்ச்சியை பெற முடியும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - ஸ்ட்ராபெரி
ரிஷபம்:
நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து வந்த விஷயம் ஒன்று நடந்தேறும். நினைத்த விஷயத்தை செய்து முடிப்பீர்கள். வேலை பளுவினால் சற்று களைப்படையலாம். உங்களது தேவைகளை குறைத்துக் கொண்டு முன்னேற்பாடுகளுடன் அனைத்தையும் அணுகுவது நன்மை அளிக்கும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - ஜெல்
மிதுனம்:
மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் அதிக கவனம் தேவை. சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறுவது நல்லது. இதன் மூலம் மற்றவர்களுக்கும் உங்கள் மீது உள்ள நம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கியுள்ளவர்களுக்கு நிலைமை சாதகமாக இருக்கும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - ரோஜா செடி
கடகம்:
கடந்த காலங்களில் இருந்த சவாலான சூழ்நிலைகள் மறைந்து சற்று நிம்மதி அடைவீர்கள். விழாக்கள் மற்றும் போட்டிகளில் கலந்து கொண்டு உங்களது திறமைகளை நிரூபிக்க வாய்ப்புகள் உண்டாகும். உங்களது வாழ்க்கை துணையுடன் நேரம் செலவிடுவது நல்லது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கண்ணாடி டம்ளர்
சிம்மம்:
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொள்வீர்கள். ஆரம்பத்தில் உங்களுக்கு ஆதரவாக இருந்த பெற்றோர் தற்போது திடீரென உங்களுக்கு எதிரான கருத்துக்களை கூற ஆரம்பிக்கலாம். பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – சூரிய கூரை
கன்னி:
அளவுக்கு அதிகமாக பொறுமையை கடைபிடிப்பதை தவிர்ப்பது நல்லது. உடனடியாக நிலைமையை புரிந்து கொண்டு செயல்படுவது நன்மை அளிக்கும். எங்கள் எதிர்பார்த்த விஷயத்தை செய்து முடிப்பதற்கு உங்களுக்கு தேவையான ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - மலர் குவளை
துலாம்:
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பமாக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உண்டு. உடல்நலனில் சிறிய கோளாறுகள் ஏற்படலாம். கவனமாக செயல்படுவது நல்லது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - வெள்ளிப் பொருட்கள்
விருச்சிகம்:
நீங்கள் எதிர்பாராத சில விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. அதனைப் பற்றி அதிக கவலை கொள்ளாமல் கடந்து செல்ல கற்றுக் கொள்வது நல்லது. வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - மலர் கொத்து
தனுசு:
இன்று உங்களுக்கு நாள் முழுவதும் அதிர்ஷ்டம் நிறைந்து காணப்படும். கிடப்பில் இருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். பழைய நண்பர் ஒருவரின் அறிவுரை மூலம் நிம்மதி அடைவீர்கள்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - செய்தித்தாள் கட்டு
மகரம்:
குறுகிய பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. அலுவலகத்தில் மிகப்பெரும் பொறுப்புகள் உங்கள் மீது சுமத்த வாய்ப்புகள் உண்டு. இப்போதைக்கு அதனை தவிர்த்து விடுவது நல்லது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - மஞ்சள் மாணிக்க கல்
கும்பம்:
உங்களுக்கு அளிக்கும் புதிய பொறுப்புகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் குழந்தைகள் உங்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு தங்களது வாழ்க்கையை நடத்த விருப்பப்படுவார்கள். மற்றவர்களின் ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – வால்நட்
மீனம்:
கோப்புகள் சம்பந்தமான வேலைகளை மதியத்திற்குள் முடித்து விடுவது நல்லது. நீங்கள் எதிர்பாராத ஒருவரிடம் இருந்து அழைப்புகள் வரலாம். மாலை வேலைகளில் எதிர்பாராத புதிய சந்திப்புகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. பொருளாதார நிலைமை சீராக இருக்கும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - வாத்து
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News