முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 3, 2023) திறமைகளுக்கு பாராட்டு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 3, 2023) திறமைகளுக்கு பாராட்டு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம்:

    இதற்கு முன்பு உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த விஷயத்தில் இப்போது முன்னேற்றம் காணப்படும். காலம் எடுப்பதை பலவீனமாக கருத வேண்டாம். புறச் சூழல்களைக் காட்டிலும் உங்கள் ஆழ்மன எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கூழாங்கல்

    ரிஷபம்:

    உங்களை யாரோ தவறாக வழிநடத்துவதாக நீங்கள் கருதுகிறீர்கள். ஆனால், அது எப்போதும் உண்மை அல்ல. உங்களுக்கு நெருக்கமான சிலர் உண்மையாகவே உங்களுக்கு நன்மை செய்ய நினைப்பார்கள். சில விஷயங்களை பரிசீலனை செய்ய வேண்டிய நேரமிது.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிவான வானம்

    மிதுனம்:

    நீங்கள் முறைப்படி தயாராகாவிட்டால் உங்கள் எல்லைகளுக்கு அப்பால் தூக்கி எறியப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுக்கு விருப்பம் இல்லாத விஷயங்களை மறுக்கலாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளாஸ் பவுல்

    கடகம்:

    உங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெகுவிரைவில் அல்லது அதற்குப் பிறகு நீங்கள் தெளிவுபடுத்த வேண்டியிருக்கும். உங்களுக்கு எந்தவித ஆதரவும் கிடைக்காது. கடந்த காலங்களில் மேற்கொண்ட முதலீடுகளுக்கு இப்போது லாபம் கிடைக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிங்க் நிற பூ

    சிம்மம்:

    பொறுமை தங்கம் போல மதிப்பு மிகுந்தது. அதை இன்றைக்கு உணருவீர்கள். முக்கியமான முடிவுகளை எடுக்க நீங்கள் அவசரம் காட்டுவீர்கள். ஆனால், இப்போது அதை தவிர்க்கவும். உங்கள் திறமைகளுக்கு பாராட்டு கிடைக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரூபி கியூப்

    கன்னி:

    பயணம் செய்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் திட்டம் அடுத்த சில நாட்களில் நிறைவேறும். தற்போதைய இக்கட்டான சூழலில் வேறெந்த பொறுப்புகளை ஏற்பதும் உங்களுக்கு கடினம்தான். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கம்பி குவியல்

    துலாம்:

    உங்கள் வாழ்வில் மெல்ல, மெல்ல மகிழ்ச்சி திரும்பும். உங்கள் இலக்குகள் நிறைவு செய்யப்படுவதை நீங்கள் உணருவீர்கள். உங்கள் மனதில் உணர்ச்சி ரீதியாக ஒரு வெற்றிடம் தோன்றும். அடுத்து வரக் கூடிய நாட்களில் இதை கடந்து வருவீர்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய அறிவிப்பு பலகை

    விருச்சிகம்:

    உங்கள் வாடிக்கையாளரிடம் இருந்து பாராட்டு குறிப்பு கிடைக்கும். ஆனாலும், சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கவும். குழுவாக இணைந்து உத்திசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக உங்கள் எல்லைகளை கடந்து வருவீர்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - லவங்கம்

    தனுசு:

    நீங்கள் மறைக்க விரும்பும் திறன்களை இப்போது பயன்படுத்திக் கொள்ள விரும்புவீர்கள். உங்கள் தாயார் இப்போது உங்களுக்கு தேவையான ஊக்கத்தை வழங்குவார். இன்றைய தினம் ரிலாக்ஸ் ஆக உணருவீர்கள். பழைய நண்பர் மூலமாக முக்கிய தகவல் கிடைக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சோப்

    மகரம்:

    உங்கள் வாழ்க்கையில் சிலர் வேண்டுமென்றே அவப்பெயரை உருவாக்குகின்றனர். அதுகுறித்து விழிப்போடு இருக்கவும். உங்களை உணர்வு ரீதியாக புண்படுத்தியவர்களை மன்னிப்பது கடினம் தான். அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளை கடந்து செல்லுங்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருங்கல்

    கும்பம்:

    பெரிய விஷயங்களை ஒத்தி வைத்துவிட்டு, முதலில் சின்ன, சின்ன பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும். உங்களுக்கு தேவையற்ற மன அழுத்தம் உண்டாகும். இன்றைய தினம் குழப்பங்களை தவிர்க்கவும். பணியிடத்தில் அரசியல் வேண்டாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மசாலா பொருட்கள்

    மீனம்:

    10இல் 2 திட்டங்களை மட்டுமே இன்றைக்கு செய்து முடிக்க முடியும். எதையோ இழந்து உணர்வு உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் மனதை புரிந்து கொள்வார். லேசான தலைவலி வரலாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பாஸ்டல் கலர்

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News