முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 2, 2023) வரவுகள் நிறைந்த நாளாக அமையும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 2, 2023) வரவுகள் நிறைந்த நாளாக அமையும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைக்கு குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும் நாளாக அமையும். நீங்கள் உங்களது பார்ட்னருடன் சில விஷயங்களைத் தவிரக்க முயல்வீர்கள். எதையும் தற்காலிகமாக ஒதுக்கித் தள்ளுவதற்குப் பதிலாகத் தீர்ப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள். உறவினர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். சிறு தூர பயணங்களால் மனதில் மாற்றங்கள் ஏற்படும். சில செயல்பாடுகளின் மூலம் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அமைதியான இசை

ரிஷபம்:

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாளாக அமையும். வாழ்க்கையில் சுப காரியங்களை எப்போதும் முன் நின்று செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். ரியல் எஸ்டேட் துறையில் இருந்தால், உங்களுக்குச் சாதமான அனைத்து சூழல்களும் அமையும். செலவுகள் அதிகரித்தாலும், அவற்றைத் திறம்பட சமாளிக்கும் மனநிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளி சங்கிலி

மிதுனம்:

இன்றைக்கு நன்மைகள் நிறைந்த நாளாக உங்களுக்கு அமையும். நினைத்த பணிகள் அலைச்சலுக்குப் பின்னதாக நிறைவேறும் சூழல் ஏற்படும். கையில் இருக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும். உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அல்லது அந்த நிலையை எடுக்கலாமா? இல்லையா? என்பதைப் பற்றி யோசித்தால், உண்மையில் அதை இழக்க நேரிடும். வாடிக்கையாளர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புத்தக அட்டை

கடகம்:

அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் இன்றைக்கு கவனமுடன் இருக்கவும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். உங்களது பழைய உணவுப் பழக்கவழக்கங்களை நீங்கள் விட நேரிடும். வியாபார பணிகளில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோக பணிகளில் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஸ்படிகம்.

சிம்மம்:

நிம்மதி நிறைந்த நாளாக இன்றைக்கு அமையக்கூடும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். இதுவரை மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியைப் பெறுவீர்கள். உங்களது எண்ணங்களை ஒன்றிணைத்து, உறுதியான திட்டத்தை உருவாக்கவும். வாழ்க்கையில் நம்பகமான ஒருவருடன் கலந்துரையாடும் சூழல் ஏற்படும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீல நிற ஸ்படிகம்

கன்னி:

வரவுகள் நிறைந்த நாளாக அமையும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களின் எண்ணங்களைப் புரிந்துக் கொண்டு செயல்படுவீர்கள். முக்கியமான விஷயங்களைப் பற்றி நீங்கள் பேசும் போது, உங்களது எண்ணங்களைக் குழப்பம் இல்லாமல் வைத்திருக்க முயலவும். உத்தியோக பணிகளில் திடீர் இடமாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களின் மூலம் மேன்மை உண்டாகும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தனி செயல்திறன்

துலாம்:

இன்றைக்கு சோதனைகள் விலகும் நாளாக அமையும். சகோதரர் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய தொடர்புகள் ஏற்படும். உங்களது ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பல பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பெரிய ஜன்னல்

விருச்சிகம் :

இன்றைக்கு எண்ணிய பணிகளைச் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். எதிர்மறை கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உங்களது பணிக்கான அங்கீகாரம் விரைவில் கிடைக்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டென்னிஸ் ராக்கெட்

தனுசு:

இன்றைக்கு தடைகள் விலகும் நாளாக அமையும். இன்றைக்கு உங்களது முயற்சிகளால் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கையில் பரபரப்பாக இருப்பது போன்ற மனநிலை ஏற்படும். ஓய்வெடுக்கும் தருணத்தில், எதிர்கால திட்டங்களை நிறைவேற்ற கனவு காணுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பறவைகளின் கூட்டம்

மகரம் :

கல்வி பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். எல்லா இடங்களிலும் தோன்றிய விஷயங்கள் இப்போது சீரமைக்கப்படுவதையும், அவற்றைப் புரிந்துகொள்வதற்கான உயர்ந்த மனத் தெளிவையும் நீங்கள் அடைவீர்கள். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான உதவிகள் சாதகமாக அமையும். உங்கள் அணுகுமுறையில் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கையில் வெற்றிப் பெறுவதற்கான பல வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பாரம்பரிய கடிகாரம்

கும்பம்:

வாழ்க்கையில் புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் நிறைய விஷயங்கள் நடந்திருக்கும் என்பதால் எதிலும் நிதானம் தேவை. உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். செலவுகள் அதிகம் ஏற்படும் என்பதால், எதையும் மதிப்பாய்வு செய்து செலவு செய்யுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மணி

மீனம் :

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். உங்களது மனதில் நிறைய விஷயங்கள் இருக்கும் என்பதால், அவை அனைத்தும் ஒரே நேரத்தில் தீர்க்கும் மனநிலை உங்களுக்கு ஏற்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு மேம்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்பும், லாபமும் உண்டாகும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு கொஞ்சம் பொறுமை மற்றும் சிலரின் வழிகாட்டுதல்கள் தேவைப்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரத்தினம்

First published:

Tags: Oracle Speaks, Tamil News