மேஷம்:
நீங்கள் எதிர்பார்த்ததை விட இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக அமையலாம். சில சீரற்ற வேலைகள் உங்களது இன்றைய பெரும்பாலான நேரத்தை எடுத்து கொள்ளலாம். இன்று உங்களது நண்பர்கள் அல்லது அண்டை வீட்டாரின் உதவியை நீங்கள் நாடலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இன்டோர் கேம்
ரிஷபம்:
உங்களது நெருங்கிய நண்பர் உங்களுக்கு சாதகமான செய்திகளை இன்று கொண்டு வருவார். நீங்கள் தள்ளி போட்டு கொண்டே வரும் முக்கிய விஷயங்களை விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களது காலை நேரம் பரபரப்பாக இருந்தாலும் பிற்பகலுக்கு பிறகு நீங்கள் ஆசுவாசமாக வேலை செய்ய நேரம் கிடைக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மலர் கொத்து
மிதுனம்:
இன்று உங்களுக்கு ஆதாயம் கிடைக்க கூடிய நாள். உங்கள் குழந்தையுடன் இன்று நீங்கள் நேரம் செலவிட சிறந்த நாள். இன்று உங்களுக்கு பங்குச் சந்தை, கடந்த கால முதலீடுகள் அல்லது கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைத்தல் உள்ளிட்டவற்றின் மூலம் ஆதாயங்களை பெறலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பின்னிப்பிணைந்த செடிகள்
கடகம்:
உங்கள் சொந்த உரிமைகளுக்காக நீங்கள் இன்று சில திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நாள். இன்று நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படாதீர்கள். இன்று செஃப் மற்றும் ஹாஸ்பிடலிட்டி துறையில் இருப்பவர்களுக்கு இன்று நல்ல நாள். நீங்கள் நம்பிக்கை வைத்திருந்த உறவு இன்று அர்த்தத்தை இழக்கலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுக்கு பிடித்த துணி
சிம்மம்:
எதிலும் உங்கள் தனிப்பட்ட பார்வை இன்று முக்கியமானது. அது உங்களுக்கு தெளிவை அளிக்கும். மேலும் நிலுவையில் உள்ள முக்கிய பணிகளை முடிக்க இன்று நல்ல நாள். உங்கள் மனைவி மீது அதிக அக்கறை காட்ட வேண்டிய நாள். உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக கவனித்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுடன் வீட்டில் வசிக்கும் நெருங்கிய உறவினர்
கன்னி:
நீங்கள் மற்றவர்களுக்கு உங்களை பற்றிய இமேஜை எப்படி காட்டி கொள்ள விரும்புகிறீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள்.துடிப்பான ஆளுமை கொண்ட ஒரு நபரால் நீங்கள் ஈர்க்கப்படலாம். சீரற்ற பயண திட்டம் ஏதேனும் இருந்தால் பரிசீலிக்கவும். இன்று நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுடன் வீட்டில் வசிக்கும் நெருங்கிய உறவினர்
துலாம்:
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று சிறப்பான நாள் உணர்வை பெறுவீர்கள்.உங்களுக்கு இன்று இருக்கும் ஆற்றல்கள் ஒரு நிலையான அடித்தளத்தை உங்க வாழ்வில் உருவாக்க பயன்படுகின்றன. குடும்ப நண்பர்களுடன் ஒரு புனித யாத்திரை இன்று திட்டமிடலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முத்துச்சரம்
விருச்சிகம்:
சமீபத்தில் அறிமுகமான ஒருநபரை இன்று நீங்கள் நம்பலாம், அவரால் இன்று உங்களுக்கு சில நல்ல பலன்கள் கிடைக்கும். திடீர் விஷயங்களால் ஏற்படும் உணர்ச்சி கொந்தளிப்புகளை அமைதிப்படுத்த நீங்கள் புதிய ஆரோக்கிய வழக்கத்தை உருவாக்கி கொள்வது நல்லது.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒருபுதிய ரெஸ்டாரன்ட்
தனுசு:
முக்கிய விஷயங்களை பற்றி நீங்கள் பிறரிடம் முன்கூட்டியே விவாதிப்பது உங்களது திட்டங்களை சீர்குலைக்கக்கூடும். உங்களுக்கான விஷயங்கள் படிப்படியாக இன்று உங்களுக்குச் சாதகமாக மாறும். உங்கள் நோக்கங்கள் நல்லதாக இருந்தாலும் பிறருக்கு அதை புரிய வைக்க சிறந்த தகவல்தொடர்பு திறன் தேவை. வயத்தில் மூத்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்கலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விரிச்சுவல் சேட்
மகரம்:
சுய ஒழுக்கம் உங்களுக்கு இன்று மிக முக்கியமானது.இன்று உங்களது உள்ளுணர்வு சொல்வதை பின்பற்றுவது சிறப்பானது. உங்களது வேலை பரபரப்பாக இருந்தாலும் நாளின் முடிவில் நிறைவாக இருக்கும். எனினும் பணியிடங்களில் உங்களுக்கு கொடுக்கப்படும் வேளைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் கொடுக்கப்பட்ட சில பொறுப்புகளை நீங்கள் பிசியில் மறக்க நேரிடலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மயிலிறகு
கும்பம்:
இன்று நீங்கள் உடல் நிலையை விட உங்களுடைய மன அமைதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தேவையற்ற வேலைகள் மற்றும் பொறுப்புகளுக்கு சிறிய பிரேக் கொடுக்க ரெடியாக இருக்கலாம். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. நிதி விஷயங்களில் நிதானம் தேவை.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காலை நேரத்து பனி
மீனம்:
பணியிடங்களில் உயரதிகாரிகளுடன் முக்கிய வேலைகளை பற்றி விவாதத்திக்கும் முன் உங்கள் எண்ணங்களை எழுத்தாக முதலில் சமர்ப்பிப்பது நல்லது. உங்களுக்கு இன்று ஏற்படும் சிறிய உடல் உபாதை அல்லது தலைவலி இன்றைய உங்களது முக்கிய திட்டங்களை சீர்குலைக்க கூடும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு மலர்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News