முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு வெற்றி நிறைந்த நாளாக இன்று (மார்ச் 14, 2023) அமையும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு வெற்றி நிறைந்த நாளாக இன்று (மார்ச் 14, 2023) அமையும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

மனதை தெளிப்படுத்துவதற்கான நாள் இன்று. நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறக்கூடிய நாளாக அமையும். மனதில் உள்ள பழைய விஷயங்களை மறந்து செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்ப்பார்த்த நில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தேநீர் கோப்பை

ரிஷபம்:

மன சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படும் நாள் இன்று. உங்களின் சாதுரியமான பேச்சுகளின் மூலம் பலரின் நம்பிக்கைகையப் பெறுவீர்கள். நீங்கள் ஏற்கனவே எடுத்த முடிவைப் பற்றி மறுபரீசிலனை செய்ய வேண்டும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பல நாள்களாக தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தன வரவை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு திரை

மிதுனம்:

செலவு நிறைந்த நாளாக இன்றைக்கு உங்களுக்கு அமையும். நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாழ்க்கையில் நீங்கள் நிறைய முயற்சி செய்திருக்கலாம். ஆனால் அது எவ்வளவு எளதில் ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம். பணியிடத்தில் ஒரு நேர்மறையான எண்ணத்தை உருவாக்குவீர்கள். சமூக பணிகளில் மேன்மை ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழைய புகைப்படம்

கடகம்:

வெற்றி நிறைந்த நாளாக இன்றைக்கு உங்களுக்கு அமையும். தந்தை வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களது பணியை சரியான நேரத்தில் செய்து முடிப்பதால் உங்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி குடுவை

சிம்மம்:

விவசாய பணிகளில் பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் புதிய துறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் பிறக்கும். சமீப காலங்களாக உங்களது மனதில் இடம் பிடித்த ஒரு குழப்பம் தெளிவாகும் சூழல் உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாளாக அமையும் என்பதால் எந்த வேலையையும் விவேகமுடன் மேற்கொள்ளவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மயில் இறகு

கன்னி:

எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கை உண்டாகும். வியாபாரத்தில் புதுவிதமான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பாகப்பிரிவினைத் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கடந்த கால பொழுதுபோக்கு மற்றும் ஆர்வத்தை நீங்கள் மீட்டெடுப்பீர்கள். புதிய முயற்சிகளில் உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.ஒரு புதிய டயட் அல்லது வொர்க்அவுட்டை நீங்கள் உங்களது வாழ்க்கையில் மேற்கொள்ளலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு பானம்

துலாம்:

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சில பிரச்சனைகளின் காரணமாக உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட காலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு குறுகிய பயணம் மேற்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தன்னம்பிக்கை நிறைந்த நாளாகவும் இன்றைக்கு உங்களுக்கு அமையக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பூட்டிய கதவு

விருச்சிகம்:

பணியிடத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது வாழ்க்கையில் வெற்றியை உண்டாக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். வேலையில் புதிய முன்னேற்றங்கள் எதுவும் உங்களுக்கு உந்துதலாக இருக்கும். உங்கள் வெற்றிடத்தை நிரப்ப நெருங்கிய நண்பர் வேறொருவரைக் கண்டுபிடித்து தற்காலிக காயத்தை ஏற்படுத்தலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீல நிற ஸ்படிகம்

தனுசு:

வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்கான நேரத்தை ஒதுக்கும் சூழல் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்தத்தன்மை குறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். உங்களது மனைவி சில நிதி அழுத்தங்களுக்கு உள்ளாகக்கூடிய சூழல் ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கருப்பு ஸ்படிகம்

மகரம் :

உறவினர்களைப் பற்றி புரிதல்கள் மேம்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். புதிய நபர்கள் உங்களைப் பற்றி மிகவும் சிறப்பாக நினைக்கும் சூழல் உண்டாகும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு, தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நீண்ட நாள்களாக நீடித்த மனப்போராட்டங்களுக்கு முடிவு கிடைக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஜெபமாலை

கும்பம்:

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும் நாள் இன்று. உங்கள் வாழ்க்கையில் சில பழைய விஷயங்களை மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் லாபம் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கடிகாரம்

மீனம்:

நன்மைகள் நிறைந்த நாளாக இன்றைக்கு அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சூழல் உண்டாகும். நல்ல லாபம் வரக்கூடிய முதலீடுகள் மேற்கொள்ளவும். அண்டை வீட்டுக்காரரின் உதவி உங்களுக்குக் கிடைக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு முயல்

First published:

Tags: Oracle Speaks, Tamil News