முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் உழைத்ததற்கான அங்கீகாரத்தை இன்று (மார்ச் 13, 2023) பெறுவீர்கள்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் உழைத்ததற்கான அங்கீகாரத்தை இன்று (மார்ச் 13, 2023) பெறுவீர்கள்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

மேஷம்:

இன்று குழப்பமில்லாத தெளிவான நாளாக இருப்பதால் திட்டமிட்ட செயல்களை நீங்கள் இன்று தொடரலாம். கடந்த சில நாட்களாக நீங்கள் செய்து கொண்டிருந்த அனைத்து திட்டமிடல்களும் இன்று சிறப்பாக செயல்படுவதற்கான நாளாக இருக்கும். திருமண உறவுகளை தேடுபவர்களுக்கு இன்று சரியான வாய்ப்பு கிடைக்கும். ஒரு புதிய ஆரோக்கிய அனுபவம் உங்களுக்கு கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் நிற ஆடை

ரிஷபம்:

இன்று உங்கள் முன்னால் இருக்கும் சவால்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதை வெற்றிகரமாக கடப்பது சாத்தியமே. அதற்கு உங்களது முயற்சிகள் தீவிரமாக இருக்க வேண்டும். பணியிடங்களில் உள்ள சிக்கல்கள் உங்கள் நாளை இன்று பிஸியாக வைத்திருக்கலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - கிராம்பு

மிதுனம்:

இன்று ஏற்படும் திடீர் சூழல்களை நீங்கள் எவ்வாறு கையாள போகிறீர்கள் என்பதை முன்பே திட்டமிட்டு கொள்வது நெருக்கடியை சமாளிக்க உதவும். நீங்கள் மனதுக்குள் நினைத்திருந்த விஷயங்கள் நடக்கும் போது உண்மையில் வேறுபட்டதாக இருக்கலாம் உங்கள் பேச்சால் நீங்கள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரூபி ஸ்டோன்

கடகம்:

வெற்றிக்கான அடிப்படை விதி விடா முயற்சி என்பதை நீங்கள் இன்று புரிந்து கொள்வீர்கள். கடின உழைப்பின் மூலம் அதிக பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்த விஷயங்களில் இன்று நீங்கள் ஏமாற்றத்தை உணர்வீர்கள். எனினும் துவண்டு விடாதீர்கள், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் விரைவில் நல்ல காலம் வரும்.

அதிர்ஷ்ட அடையாளம் - சாமந்திப்பூ

சிம்மம்:

உங்கள் ஆளுமையில் உள்ள ஆணவத்தை இன்று வெளிப்படுத்தி பிறரை வருத்தம் கொள்ள செய்யலாம். எனவே உங்கள் அணுகுமுறையை மென்மையாக்க முயற்சிக்கவும். இன்று புதிய ஒப்பந்தங்களை முடிக்க முயற்சிப்பவர்கள் அல்லது ஆவணங்களில் கையெழுத்திடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட அடையாளம் - அழகான பிரேஸ்லெட்

கன்னி:

நீங்கள் மற்றவர்களை எப்படி புரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ அதே போல பிறரும் உங்களை புரிந்து கொள்வார்வார்கள் என்பது உறுதியானது அல்ல. இன்று எந்தவொரு மருத்துவ பிரச்சனையையும் தவிர்க்க, உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வாட்டர் பாட்டில்

துலாம்:

பிறருடனான தகவல் தொடர்புகளை இன்று நீங்கள் சரியான முறையில் பராமரிக்காவிட்டால் சில சிக்கல்கள் ஏற்படலாம். தீய எண்ணங்கள் கொண்ட நபர்களை விட்டு நீங்கள் விலகி இருப்பது உங்களுக்கு சிறப்பான நன்மைகளை அளிக்கும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிரீன் ஸ்டோன்

விருச்சிகம்:

உங்கள் புதிய திட்டங்கள் அல்லது முயற்சிகளை விரிவுபடுத்த நீங்கள் திட்டமிட்டால், அதற்கான வேலைகளைத் தொடங்குவதற்கான சிறந்த நாளாக இன்று இருக்கும். புதிய பார்ட்னர்ஷிப் ஆலோசனை உங்களுக்கு தோன்ற கூடும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அணில்

தனுசு:

உங்களுக்காக தங்கள் உணர்வுகளை நீண்ட காலமாக வெளிப்படுத்த திட்டமிட்டிருக்கும் யாரோ ஒருவர் இன்று உங்களை அணுகலாம். எந்தவொரு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளும் முன்பும் நீங்கள் சில முன்னேற்பாடுகளை செய்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புறா

மகரம்:

ஒரு நபரை பற்றிய உங்கள் பார்வையில் சில குழப்பங்களை இன்று நீங்கள் சந்திக்க நேரிடலாம். வேறொருவரின் பேச்சால் உங்கள் மனதை பாதிக்காதவாறு பார்த்து கொள்ளுங்கள். நீங்கள் புதிதாக தொடங்கும் விஷயங்களில் இன்று பல சவால்களை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மாயை

கும்பம்:

இதுநாள் வரை உங்களுக்கு நீடித்து வந்த மோசமான நேரம் இப்போது முடிந்துவிட்டது. இன்று நீங்கள் ஒரு புதிய உற்சாகமான வாழ்க்கையை நோக்கி செல்வீர்கள். இன்று எதிர்காலத்திற்கு தேவையான நிதி திட்டமிடல் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஸ்லஷ்

மீனம்:

நீங்கள் நீண்ட காலமாக உழைத்ததற்கான அங்கீகாரத்தை இன்று பெறலாம். சரியான நேரத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் இன்று புரிந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு பிடித்த விஷயங்களை தொடர்ந்து முயற்சிக்க இன்று ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட அடையாளம் - பிராஸ் கிளாஸ்

First published:

Tags: Oracle Speaks, Tamil News