முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (மார்ச் 10, 2023) புதிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (மார்ச் 10, 2023) புதிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 3-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  இன்றைக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு உள் அமைதியைப் பெறுவீர்கள். ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கும் மனநிலை ஏற்படும். கடைசி நிமிட வேலைகளையும், நிலுவையில் உள்ள வேலைகளையும் ஒரே நாளில் முடிக்கும் மனநிலை இன்றைக்கு ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விதண்டாவாத பேச்சுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை உண்டாகும்

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழைய ஆல்பம்

  ரிஷபம்:

  இன்றைக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், நண்பர்களிடம் மற்றும் உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் செயலை விரைந்து முடிக்கும் மனநிலை ஏற்படும். ஆடம்பரமான சிந்தனைகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். ஆன்மீகம் தொடர்பான பயணங்கள் கைகூடும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழைய நாவல்

  மிதுனம்:

  சில பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும் நாள் இன்று. பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். உங்களின் புதிய யோசனை அடுத்த சில மாதங்களுக்கு உங்களை வெற்றிப் பாதைக்கு இட்டு செல்லும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். கூட்டு வியாபாரத்தில் மேன்மை ஏற்படும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மரப்பொருள்கள்

  கடகம்:

  இன்றைக்கு தன்னம்பிக்கை நிறைந்த நாளாக அமையும். குழந்தைகளின் எண்ணங்களை நிறைவேற்றும் மனநிலை ஏற்படும். உங்கள் முடிவை உறுதிப்படுத்தும் அளவிற்கு வாழ்க்கை சிறப்பாக அமையும். ஒரு ஆண் நண்பர் குறிப்பிடத்தக்க ஆலோசனையை வழங்கக்கூடிய சூழல் ஏற்படும். உத்தியோக பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். மாற்றமான அணுகுமுறைகளின் மூலம் நல்ல லாபத்தை மேம்படுத்துவீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வண்ணமயமான கூழாங்கற்கள்

  சிம்மம்:

  உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சமூக பணிகளில் உங்களது கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் கிடைக்கும். தேவையில்லாத பேச்சுக்கள் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்பதால் நிதானத்துடன் இருக்கவும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மரம்

  கன்னி:

  அக்கம்- பக்கம் இருப்பவர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். செய்யும் பணிகளில் கவனமுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். புதிய முயற்சிகளில் அலைச்சல்களும் , ஆதாயமும் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்ததை விட விரைவில் எதிர்ப்பார்க்கப்பட்ட பயணம் மேற்கொள்வீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கப் தேநீர்

  துலாம்:

  விலையுயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே சிறு, சிறு விவாதங்கள் நடைபெறும். வியாபார பணிகளில் உள்ள போட்டிகளை சமாளிக்கும் எண்ணம் உண்டாகும். உத்தியோக அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் கிடைக்க வேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். எனவே விவேகத்துடன் செயல்படுவது நல்லது.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு பேனா

  விருச்சிகம்:

  போட்டிகள் நிறைந்த நாளாக அமையும். வாழ்க்கையில் ஏற்படும் சில புதிய முன்னேற்றங்கள் உங்களுக்குத் தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்திருக்கலாம். நெருங்கிய நண்பர்களின் அழைப்பு உங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கற்றுத்தரும். சமூக பணிகள் உங்களது கவனத்தை ஈர்க்கலாம். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கருவி

  தனுசு:

  வியாபாரம் நிமிர்த்தமானப் பணிகளில் கவனமுடன் இருக்க வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நீங்கள் சமீபத்தில் சந்தித்த நபரால் புதிய அனுபவங்களைப் பெறக்கூடும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களை அனுசரித்து நடக்க வேண்டும். பண வரவு மேம்படும் நாள் இன்று.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பணப்பை

  மகரம்:

  கணவன், மனைவிக்கிடையே புரிதல்கள் மேம்படும் நாளாக அமையும். தொலைந்து போன நபர் அல்லது முக்கியமான ஆவணங்கள் பற்றிய செய்திகள் கிடைக்கும் நாள் இன்ற. சமூக பணியில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ள சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – செம்பு பாத்திரம்

  கும்பம்:

  இன்றைக்கு வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டிய நாளாக அமையும். மனதில் ஒருவிதமான படபடப்பும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு நீங்கும். சில புதிய விளையாட்டுகளில் அதீத கவனம் செலுத்துவீர்கள். உடல் நலத்தில் அக்கறை இருக்கவும். இல்லையென்றால் வீண் மருத்துவத் தேவைகளுக்கு ஆளாக நேரிடும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடமிருந்து சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தங்க கடிகாரம்

  மீனம்:

  வாழ்க்கைத் துணைவர் வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சகோதர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும் நாள் இன்று. வாழ்க்கையில் நிகழும் ஆச்சரியங்களைப் பாராட்டும் மனநிலையில் நீங்கள் இல்லாமல் இருக்கக்கூடும். உங்களின் பழைய நட்பு சவாலான கட்டத்தை அடையலாம். உங்களது வாழ்வில் சந்தேகமான மனநிலை இருந்தால், உங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒருவரை அணுகவும். மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் நாள் இன்று.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தெளிவான வானம்

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News