முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு இன்று (ஜனவரி 31, 2023) வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு இன்று (ஜனவரி 31, 2023) வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 1-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  வாழ்க்கையில் நிறைய இழந்துவிட்டதாகக் கருதி நீங்கள் மனம் உடைந்து போகக் கூடும். புதிய நபர் ஒருவர் உங்கள் வணிகத்தின் மீது திடீரென்று அக்கறை காட்டுவார். இரண்டாவதாக வருமான ஆதாரம் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விண்மீன் கூட்டம்

  ரிஷபம்:

  ஏதேனும் ஒரு விவகாரம் குறித்து நீங்கள் மிகுந்த அக்கறை காட்டுவதற்கு காரணம், அதுகுறித்து தெளிவு உங்களுக்கு இல்லை என்பதால் தான். தற்போது உங்கள் மனதை பாதிக்கக் கூடிய அளவுக்கு கனவுகள் வரலாம். அதிலிருந்து வெளிவந்தால் வெற்றி நிச்சயம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சர்கஸ்

  மிதுனம்:

  யாரோ சிலர் உங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அதை நீங்களும் உணரக் கூடும். ஆனால் உங்கள் புத்திகூர்மை மற்றும் உத்திகள் மூலமாக அதை எதிர்கொண்டு வருவீர்கள். உங்கள் தனிப்பட்ட விஷயங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கொட்டுகின்ற தண்ணீர்

  கடகம்:

  உங்களின் மாபெரும் திட்டங்களுக்கான பலன் இப்போது கிடைக்கக் கூடும். உங்கள் உத்தியை மாற்றிக் கொள்வதற்கான சிறப்பான நேரம் இது. வாழ்க்கையில் நீங்கள் சில தொந்தரவுகளை எதிர்கொள்வீர்கள். ஆனால், அவை தற்காலிகமானதுதான்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய காலணி

  சிம்மம்:

  கடந்த காலங்களில் அறிமுகமாகிய நபர் ஒருவர் மீண்டும் வர இருக்கிறார். ஆனால், அவர்களிடம் பழக வேண்டாம். நீங்கள் பிஸியாக இருந்தாலும் கூட, தனித்து இருப்பதாக உணருவீர்கள். ஒரு குழந்தை உங்கள் கவனத்தை ஈர்க்க கூடும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வைர மோதிரம்

  கன்னி:

  புதிய இடத்தில் பணி செய்வது குறித்து நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். அது பயணம் சார்ந்ததாகக் கூட இருக்கலாம். பணியிடத்தில் உள்ள ஒருவர் உங்களிடம் தொடர்பில் இருக்க முயற்சி செய்வார். சாதாரண கண்ணோட்டம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிரகணம்

  துலாம்:

  வீட்டில் உள்ள ஒருவர் தான் புறக்கணிக்கப்பட்டதாக உணரக் கூடும். பழைய புகைப்படம் அல்லது நினைவுகள் காரணமாக மனதில் உணர்ச்சி பொங்கும். தனித்துவமான உங்கள் யோசனைகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வயர்லெஸ் ஹெட்ஃபோன்

  விருச்சிகம்:

  உங்கள் குரலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே திட்டமிட்ட விஷயத்தை மறுபரிசீலனை செய்ய நீங்கள் விரும்ப மாட்டீர்கள். வெளிநாட்டு பயணத்தின் மூலமாக புதிய புரிந்துணர்வு ஏற்படும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மண் பாண்டம்

  தனுசு:

  காலக்கெடு நெருங்கி வருவதால் உங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்தவும். உங்கள் வீட்டுப் பிரச்சினைகள் தீர்வதற்கான நம்பிக்கை தென்படுகிறது. இளம் நபரின் உத்தி உங்கள் இலக்குகளை அடைய உதவியாக அமையும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிலிகான் டிரே

  மகரம்:

  சிலர் உங்கள் மீது பொறாமை உணர்வு கொண்டிருப்பார்கள். இதை நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். புதிய பழக்கம் ஒன்றின் மூலமாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். சில விஷயங்களை சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு மெழுகுவர்த்தி

  கும்பம்:

  சட்ட விவகாரங்களில் உங்களுக்கு சில அனுபவம் கிடைக்கக் கூடும். பணியிடத்தில் சக ஊழியர் உங்கள் திறமையால் ஈர்க்கப்படுவார். பெரும் முடிவை அறிவிக்கும் முயற்சியை இப்போதைக்கு ஒத்தி வைக்கவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புளிப்பு மிட்டாய்

  மீனம்:

  அடுத்தடுத்த நிகழ்வுகள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். உங்கள் இலக்கை நெருங்கிவிட்டதாக நீங்கள் நினைத்தாலும், அதற்கு இன்னமும் நேரம் இருக்கிறது. உங்களுக்கான வாய்ப்பு கதவை தட்டிக் கொண்டிருக்கிறது.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் நிற கிறிஸ்டல்

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News