ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு இன்று (ஜனவரி 20, 2023) தேங்கி நின்ற பணம் கைக்கு வந்து சேரும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு இன்று (ஜனவரி 20, 2023) தேங்கி நின்ற பணம் கைக்கு வந்து சேரும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட சரியான முயற்சிகளுக்கு இப்போது பலன் கிடைக்க இருக்கிறது. தேவையின்றி உங்களை எடைபோடும் நபர்களை புறக்கணிக்கவும். அலுவலகப் பணிகள் குறித்து ஆய்வு நடைபெறக் கூடும். ஆகவே பணிகளை சரியாக செய்யவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காலணிகள்

  ரிஷபம்:

  பயணத் திட்டங்களை மேற்கொள்ளலாம். இன்றைய தினம் அனைத்தையும் திட்டமிட்ட வகையில் செயல்படுத்தலாம். எதிர்கால திட்டங்களுக்கு பலன் அளிக்கும் வகையிலான நல்ல அறிகுறிகள் தென்பட தொடங்கும். தேங்கி நிற்கின்ற பணவரவு கைக்கு வந்து சேரும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நெல்லிக்காய்

  மிதுனம்:

  உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் வகையில் உங்கள் ஆற்றல் முழுவதையும் இன்று பயன்படுத்திக் கொள்ளலாம். உடன் பிறந்தவர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. மாலையில் சிறப்புமிக்க நபர் ஒருவர் உங்களை சந்திப்பார்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளிக்கம்பி

  கடகம்:

  திட்டமிட்ட வகையில் ஷாப்பிங் செய்ய முன்னுரிமை அளிப்பீர்கள். பணியிடத்தில் காலக்கெடுவை பின்பற்ற வேண்டும். வீட்டுப் பணிகளுக்கான உதவி கிடைக்காத காரணத்தால் உங்களின் அன்றாடப் பணிகளில் தடைகள் ஏற்படும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மெடாலிக் ஓவியம்

  சிம்மம்:

  குழுப்பணி குறித்து கவனம் செலுத்தவும். பிறருடன் இணைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்தால் அதை கட்டாயம் ஏற்றுக் கொள்ளவும். பணியிடத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உங்களுக்கு மன உளைச்சல் உண்டாகக் கூடும். எது குறித்து அவசரத்தில் முடிவு செய்ய வேண்டாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வண்ணமயமான பாட்டில்

  கன்னி:

  உங்கள் பணிகள் தடைபடுகின்றன என்றால், பொறாமையை விட்டுக் கொடுக்குமாறு வேறொரு நபரிடம் நீங்கள் கோரிக்கை வைக்க வேண்டியிருக்கும். தற்போதைய தருணத்தில் குறுகிய கால திட்டங்கள் பலன் அளிக்கும். இரவில் விருந்தினர்களை வரவேற்க தயாராகவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரப்பெட்டி

  துலாம்:

  குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதற்கான நாள் இது. பணிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. உங்கள் பங்களிப்பு குறித்து பரிசீலனை செய்யப்படும். அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக நீங்கள் சோர்வு அடையக் கூடும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பெயிண்டிங்

  விருச்சிகம்:

  உங்களின் பழைய இலக்குகள் கைவிட்டு போகாதபடிக்கு முயற்சிகளை மேற்கொள்ளவும். இலக்குகளை மறுஆய்வு செய்து கொள்ளவும். இன்றைய தினம் சற்று மந்தமான ஆற்றல் கொண்டிருப்பீர்கள். நீங்கள் தொடங்கும் பணிகளை மெதுவாக செய்து முடிப்பீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஐஸ்க்ரீம்

  தனுசு:

  தொலைதூரத்தில் இருந்து அல்லது வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்பு இன்றைய நாளை பயனுள்ளதாக மாற்றும். மிகவும் சிறப்பாக உணருவீர்கள். மற்றவர்களுடன் நீங்கள் கொண்டிருக்கும் பந்தத்தில் சில கேள்விகளுக்கு உடனடி பதில் பெற வேண்டியுள்ளது.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பந்து

  மகரம்:

  உங்கள் ஆரோக்கியத்திற்கான புதிய பழக்கத்தை தொடங்குவதற்கான நாள் இதுவாகும். ஒரு புத்தகம் அல்லது கட்டுரை என்பது உங்களுக்கு ஊக்கம் தருவதாக அமையும். நீங்கள் தொலைத்துவிட்டதாக கருதும் பொருள் மீண்டும் கிடைக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பறவை

  கும்பம்:

  நீங்கள் செய்து முடிக்க விரும்பும் காரியத்தை தொடங்குவதற்கான நல்ல அறிகுறிகள் இப்போது உங்களுக்கு தென்படக் கூடும். உங்கள் ஆழ்மனம் சொல்வதை கூர்ந்து கவனிக்கவும். எதிர்மறை விஷயங்களை புறக்கணிக்கவும். இன்றைய நாளின் பலன்கள் ஏற்ற, இறக்கங்களை கொண்டதாக இருக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சில துளிகள்

  மீனம்:

  வெளி நபரிடம் இருந்து தக்க தருணத்தில் வரக் கூடிய ஆலோசனை உங்கள் நேரத்தை சேமிப்பதாக அமையும். நிலுவையில் உள்ள முடிவு ஒன்றை செயல்படுத்துவதற்கான நம்பிக்கை இப்போது கிடைக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அதிக முன்னுரிமை கொடுப்பீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஏரி

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News