ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 16, 2023) வெற்றி நிறைந்த நாளாக அமையும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 16, 2023) வெற்றி நிறைந்த நாளாக அமையும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  இன்றைக்கு பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களிடம் வாக்குவாதம் செய்ய முயற்சித்தாலும் கோபம் கொள்ள வேண்டாம். அமைதியாக இருக்கவும். இச்செயல் உங்களது குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தும். வியாபார பணியில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். இன்றைக்கு உடல் நலத்தில் அக்கறையுடன் இருக்கவும். லேசான காய்ச்சல் அல்லது தலைவலி ஏற்பட்டாலும் மருத்துவரிடம் சென்று சிகிச்சைப் பெறவும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தோட்டம்

  ரிஷபம்:

  தன்னம்பிக்கை நிறைந்த நாளாக உங்களுக்கு அமையும். இந்நாளின் உங்களது ஆற்றல்கள் சக்தி வாய்ந்ததாகவும் உங்களுக்கு சாதகமானதாகவும் அமையும். பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வருவதால் புதிய வேலைகளை எவ்வித தயக்கமும் இன்றி தொடங்கலாம். யாராவது கடன் கேட்டால் கோபம் வேண்டாம். பணிவுடன் எங்களால் முடியாது என தெரிவித்தால் பிரச்சனைகள் இருக்காது. வாக்கிங் அல்லது உடற்பயிற்சிகள் செய்வது உங்களது உடலுக்கு ஆரோக்கியமானது.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இறகு

  மிதுனம்:

  இன்றைக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நீங்கள் எப்போதும் வலிமையுடையவர்களாக இருப்பீர்கள். தேவையில்லாத கோபத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும். நீங்கள் சேமித்து வைத்த பணம் உங்களுக்கு இன்றைக்கு கிடைக்கும். ஆதரவற்றோருக்கு உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கூழாங்கற்கள்

  கடகம்:

  அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் இன்றைக்குப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெற்றி நிறைந்த நாளாக அமையும். பழைய நண்பர்களைச் சந்திக்கும் சூழல் ஏற்படும். வெளிப்புற சந்திப்பு ஏதேனும் இருந்தால் அதில் தடங்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். போட்டி தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். நிலம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு காகிதம்

  சிம்மம்:

  இன்றைக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். சகோதரர்களுக்கிடையே நீண்ட நாள்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். ஒற்றுமை ஏற்படும். நிலுவையில் இருந்த பணம் உங்களுக்குக் கிடைக்கும். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். தந்தை வழி சொத்துக்களின் மூலம் இருந்து வந்த இழுபறிகள் குறைந்து, வரவு நிறைந்த நாளாக அமையும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முத்து சரம்

  கன்னி:

  இன்றைக்கு உங்களது வேலையில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் சாதகமான சூழல் ஏற்படும். நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்து வந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் சூழல் ஏற்படும். பணி சம்பந்தமான ஆவணங்களை வீட்டிலும், அலுவலகத்திலும் மட்டும் கொடுத்து வைக்கவும். மற்றவர்களிடம் கொடுப்பதால் பிரச்சனைகள் ஏற்படும். தூக்கம் இல்லாத நிலையை நீங்கள் உணர்வீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு நிற ஸ்படிகம்.

  துலாம்:

  இன்றைக்கு எந்த வேலையிலும் அலட்சியம் வேண்டாம். அக்கறையுடன் செயல்பட்டாலே வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வழிகாட்டுதல்கள் உங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். உடல் சுகாதாரத்தில் அக்கறையுடன் இருக்கவும். இல்லையென்றால் தேவையில்லாத பல உடல் நலப்பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு தண்டு

  விருச்சிகம்:

  கனவுகள் அல்லது கெட்ட கனவுகளால் ஆழ்மனதில் தேவையில்லாத பயம் ஏற்படும். இவற்றை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம். எதிர்பாலினத்தை சேர்ந்த ஒருவர் உங்களது கவனத்தை ஈர்க்கலாம். பழைய நண்பர்களை சந்திக்கும் சூழலால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செங்கல் சுவர்

  தனுசு:

  இன்றைக்கு நண்பர்களின் உதவியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும் நாளாக அமையும். உங்களது அன்புக்குரியவர்களுக்காக நேரம் ஒதுக்கினால் போதும் உங்களது வாழ்க்கையில் சோகமும் இருக்காது. மாலையில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்படும். உடல் நலம் பாதிப்பில் இருப்பவர்கள் வழக்கமான பரிசோதனையை மேற்கொள்வதை மறந்துவிடக்கூடாது.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஹைலைட்டர்

  மகரம்:

  பழைய நினைவுகளால் இன்றைய நாளில் பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.தேவையில்லாத எண்ணங்களைத் தவிர்த்து பெற்றோர்களின் நலன்களுக்காக எதையும் சிறப்பாக செய்ய முயற்சிக்கவும். எந்த வேலையையும் நிதானத்துடன் செய்யவும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி பாட்டில்

  கும்பம்:

  விவேகம் வேண்டிய நாள் உங்களுக்கு. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புரிதலும், அனுபவமும் மேம்படும். உங்களின் பயம் தான் உங்களுக்கு எதிரி என்பதால் எதையும் துணிச்சலோடு செய்யவும். நீங்கள் உங்களது பணியில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு அதிகாரிகளின் மறைமுக ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சுய வேலைகள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழைய ஆலமரம்

  மீனம்:

  இன்றைக்கு எளிதில் முடியும் என எதிர்ப்பார்த்த சில பணிகள் பல அலைச்சலுக்கு பின்னதாக நிறைவேறும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. கொடுக்கல், வாங்கலில் பொறுமையுடன் செயல்படவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். மருத்துவ பணியில் இருப்பவர்களுக்கு வழக்கத்தை விட அதிக வேலைகள் இருக்கும். வேலையில் அரசு அதிகாரிகளின் இடையூறுகள் அதிகமாக இருக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒன்றாக இருக்கும் பறவைகள்

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News