ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 13, 2023) வேலையில் பாராட்டுக்கள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 13, 2023) வேலையில் பாராட்டுக்கள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்று உங்களுக்குள் இருக்கும் அச்சங்கள் அல்லது தயக்கங்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டிய நாள், குறிப்பாக பொதுவில் பேசுவது அல்லது அதிக பார்வையாளர்களை எதிர்கொள்வது போன்றவை. இன்று உங்கள் உள்ளுணர்வை இன்னும் அதிகம் நம்ப வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு காந்தம்

ரிஷபம்:

பழைய நண்பருடன் இன்று நீங்கள் தொடர்பு கொள்வதன் மூலம் உணர்ச்சிவசப்படுவீர்கள். இன்று உங்கள் கடந்த காலங்கள் நினைவுக்கு வருவதை நீங்கள் காணலாம். தொழில் பாதையில் இன்று வளர்ச்சியை சந்திக்க வேண்டும் எனில் கவனத்தை சிதற விடாதீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஆமை

மிதுனம்:

நெருங்கிய உறவுகளிடம் உண்மைகளை மறைக்காமல் பேச வேண்டிய நாள். நீங்கள் வர்த்தகத்தில் ஈடுபடுபவராக இருந்தால் சில விஷயங்களில் தடை ஏற்படலாம். உங்களுக்கு பிடிக்காமல் வலுக்கட்டாயமாக செய்து கொண்டிருந்த சில விஷயங்களை இனி செய்ய தேவை இருக்காது.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஃபெங்சுய் ஒட்டகம்

கடகம்:

நீங்கள் புதிதாக ஒன்றை இன்று செய்ய முயற்சிக்கும் முன் அதற்கான பயிற்சியை முதலில் செய்யுங்கள். இல்லை என்றால் தகுந்த பலன்கள் கிடைக்காது. உங்கள் முற்போக்கான அணுகுமுறையை சுற்றியுள்ளவர்கள் பாராட்டாமல் விடுவதால் ஏமாற்றம் கொள்வீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வைரம்

சிம்மம்:

உயர்கல்வி விவகாரங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய வழிகள் இன்று கிடைக்கும். நீங்கள் இதற்கு முன் அறிந்திராத விருப்பங்களை கூட இன்று காண்பீர்கள். செவிவழிச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உங்களுக்கு வேண்டும் என்றால் விஷயங்களை நீங்களே உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பெயின்டட் கிளாஸ்

கன்னி:

இன்று கிடைக்கும் திடீர் வாய்ப்பு மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். வாய்ப்பை எடுத்து கொள்ளும் முன் அதிகம் சிந்திக்காதீர்கள். உங்களது நெருங்கிய நண்பர் பொறாமையின் வெளிப்படையான அறிகுறிகளை காட்ட கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கூழாங்கற்கள்

துலாம்:

இன்று உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், தகுந்த திறமைகளுக்காக கவனிக்கப்பட ஏற்ற நாள். நீங்கள் யாருடைய ஒப்புதலையாவது பெற காத்து கொண்டிருந்தால், அது உங்களுக்கு இன்று கிடைக்கலாம். வேலையில் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்களை பெற்று தரும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு க்ராஸ்வேர்ட்

விருச்சிகம்:

உங்களுக்கு பிடித்த இரண்டு விஷயங்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் இன்று தீர்மானிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை. கடந்த காலத்தில் தவறவிட்ட சில பொருட்களை அல்லது உறவுகளை இன்று மீண்டும் பெறுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அக்வாரியம்

தனுசு:

எப்பொழுதும் நெருக்கடியை நன்றாக சமாளிக்கும் உங்கள் திறன் மற்றவர்களை வெகுவாக கவரும். இன்று கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்க்க வேண்டிய நாள். உங்களுக்கு தேவையான உதவி சரியான நேரத்தில் இன்று கிடைக்காமல் போகலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரூபி

மகரம்:

இன்றைய தினத்தில் உங்கள் உடன்பிறந்தவர் அல்லது நெருங்கிய நண்பரின் பிரச்சினையை தீர்ப்பதில் நீங்கள் நேரம் செலவிடலாம். பணவரவு சீராக இருக்கும். தொழில் நிமித்தமான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரவுண்ட் டேபிள்

கும்பம்:

உங்களது பணியிடத்தில் நிகழும் நேர்மறை இயக்கம் உங்களுக்கு இன்று மன அமைதியை தரலாம். நீங்கள் இன்று வெளிப்படுத்தும் ஒரு புதிய யோசனை, உங்களது தற்போதைய நிலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தலாம். எனவே மீட்டிங்கில் பங்கேற்றால் உங்கள் திறமையை நன்றாக வெளிப்படுத்துங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிட்டார்

மீனம்:

இன்று நீங்கள் திடீர் குழப்பத்தை சந்திக்க நேரிடலாம். பிறர் மத்தியில் எந்தவொரு புதிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் முன் நன்கு ஆய்வு செய்யவும். நீங்கள் தவிர்த்த சில விஷயங்களில் உங்கள் பெற்றோரின் கோரிக்கை காரணமாக ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஸ் கோல்ட் வாட்ச்

First published:

Tags: Oracle Speaks, Tamil News