ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு பணிகளில் இன்று (ஜனவரி 10, 2023) முன்னேற்றம் ஏற்படும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு பணிகளில் இன்று (ஜனவரி 10, 2023) முன்னேற்றம் ஏற்படும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  இன்று நீங்கள் திட்டமிடும் முக்கிய விஷயங்களைச் சிறப்பாக செய்வதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். எதாவதொரு புதிய விஷயத்திற்கு நீங்கள் ஆம் என்று சொல்லும் போது உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். இன்றைய தினம் கிடைக்கும் ஒரு அனுபவம் அல்லது நினைவுகள் உங்களது நாளை ஆக்கிரமிக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நாவல்

  ரிஷபம்:

  இன்று உங்களைச் சுற்றி நடக்கும் சில குழப்பமான விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். உங்கள் தேவைகள் இன்று எளிதாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். இன்று சில விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். இன்றைய தினம் நீங்கள் இன்னும் ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டியிருக்கலாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வைப்ரேன்ட் பேக்

  மிதுனம்:

  உங்கள் தகவல்தொடர்புகளை முன்பே தெளிவாக வைத்திருப்பதை நினைத்து இன்று நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். இது பிறரிடமிருந்து உங்களுக்கு உரிய மரியாதை மற்றும் நம்பிக்கை பெற்று தரும். தொழில் வல்லுநர்கள் மற்றும் ஸ்டார்ட்அப்ஸ்களில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் நேர்மறை இயக்கத்தை இன்று எதிர்பார்க்கலாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இன்டோர் பிளான்ட்

  கடகம்:

  இதுநாள் வரை உங்களுக்கு மந்தமான நாளாக சென்றிருந்தால் இன்று உங்களுக்கு ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் திட்டமிடப்பட்ட பணிகளை சரியாக நிறைவேற்றுவீர்கள், இது உங்களுக்கு போதுமான மகிழ்ச்சியை தரும். உங்கள் வாழ்க்கை துணை உங்களிடம் சில விஷயங்களை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். எனவே அவரிடம் இன்று மனம் விட்டு பேசுங்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளாஸ் டேபிள்

  சிம்மம்:

  உங்களிடம் இன்று உதவி கேட்டு வருவோருக்கு தாராளமாக உதவி கரம் நீட்டலாம். நீங்கள் செய்யும் சில விஷயங்களில் ஆரம்பத்தில் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய உங்கள் பெற்றோர் இப்போது உங்கள் கருத்துடன் உடன்படலாம். இன்று உங்களுக்கு ஏற்படும் படிப்படியான முன்னேற்றம் ஒரு நல்ல அறிகுறி.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரூஃப் டாப்

  கன்னி:

  உங்களது வாழ்வில் நடக்கும் சமீபத்திய முன்னேற்றங்களை பற்றி நெருக்கமானவர்களிடம் கூறாமல் அமைதியாக இருப்பது உங்கள் மீது அவருக்கு தவறான அடையாளத்தை கொடுக்கலாம். இன்று விவேகமாக செயல்பட்டு உங்களின் திறமையை நிரூபிப்பீர்கள். உங்களது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அழகான நாள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பெட் ஷாப்

  துலாம்:

  உங்களை சுற்றி இருக்கும் நேர்மறை ஆற்றல்கள் கொண்டாட்டத்தை நோக்கி உங்களை அழைத்து செல்லும். இன்று நீங்கள் எதிர்பாராத வாய்ப்புகளை பெறலாம். குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் வெளியே நேரத்தை செலவிட கூடும். சிறிய உடல்நலக் குறைவு ஏற்படலாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளிப் பாத்திரங்கள்

  விருச்சிகம்:

  ஒரு ஏமாற்றம் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்த கூடும். ஆனால் அதனை மறந்து விட்டு உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துவது அவசியம். உங்களுக்கு கொடுக்கப்படும் விருப்பங்களை பற்றி மிகவும் ஆராய்ச்சி செய்யாதீர்கள். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள். புதிய ஆக்டிவிட்டி உங்களை இன்று ஈர்க்க கூடும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பூச்செண்டு

  தனுசு:

  இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால் நீண்ட நாள் நிலுவையில் உள்ள உங்களது பணிகளில் இன்று முன்னேற்றம் ஏற்படும். வயதில் மூத்தவர்கள் வழங்கும் சில நல்ல ஆலோசனைகளை பின்பற்றுங்கள். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இடையே சமநிலையை உருவாக்குவது உங்கள் நாளை மேலும் சிறப்பாக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நியூஸ் பேப்பர் பண்டல்

  மகரம்:

  உங்கள் முதலாளி அல்லது மேலதிகாரி உங்கள் தோள்களில் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்கலாம். இன்று நீங்கள் குறுகிய தூரம் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் இன்று நேரம் செலவிடுவது இருவருக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் சஃபையர்

  கும்பம்:

  எந்தவொரு புதிய பொறுப்பை ஏற்க இன்னும் கொஞ்சம் முயற்சி மற்றும் பொறுமை தேவைப்படலாம். உங்கள் குழந்தை உங்களையும் உங்கள் வாழ்க்கை முறையையும் பின்பற்றும் என்பதால் சீரான நடத்தையை வெளிப்படுத்துங்கள். நெருக்கமாக ஒருவரின் ரகசியத்தை நீங்கள் வெளிப்படுத்தாமல் ரகசியம் காப்பது இன்று ஒரு சவாலாக இருக்கலாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வால்நட் கேக்

  மீனம்:

  சில பேப்பர் ஒர்க்ஸ் உங்கள் நாளில் பாதியை ஆக்கிரமித்து கொள்ளலாம். நீங்கள் சிறிதும் எதிர்பாராத நபரிடமிருந்து கால் அல்லது மெசேஜ் பெறலாம். நிறுவனத்தில் உடன் பணியாற்றும் நெருங்கிய நண்பர்களால் உங்களின் மாலை நேரம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கலாம். உங்களது நிதி நிலை இன்று சீராக இருக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டைரி

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News