ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 08, 2023) நிதி சார்ந்த பலன்கள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 08, 2023) நிதி சார்ந்த பலன்கள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்களை சுற்றியுள்ள ஆற்றல் குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது. ஆகவே, நீங்கள் முன்னெடுக்கும் காரியங்களுக்கு அது உறுதுணையாக அமையாது. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். புதிய திறன்களை கற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடங்குவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிளர் செய்யப்பட்ட ஃபோட்டோ

ரிஷபம்:

உங்களை சேர்ந்த சிலர் பிறரால் ஆதிக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், அதில் இருந்து அவர்கள் வெளிவருவதற்கான உத்திகளை கையாள உள்ளனர். நீங்கள் புதிய வேலையை தேடிக் கொண்டுள்ளீர்கள் என்றால் ஆச்சரியம் தரும் வாய்ப்புகள் தேடி வரும். உறவுகளில் தேவையற்ற பிரச்சினைகள் வரலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அட்டை

மிதுனம்:

புதிய வாய்ப்பு அல்லது இலக்கு நோக்கி நீங்கள் பயணம் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் உண்மையான முயற்சியுடன் முன்னெடுக்க வேண்டும். கடந்த சில நாட்களாக உங்கள் உடலில் தென்பட்ட எரிச்சல் இனி இருக்காது. பயனுள்ள பரிந்துரையை உங்கள் நண்பர் முன்வைப்பார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தனி செயல்பாடு

கடகம்:

புதிய சிந்தனைகள் குவிந்து கிடப்பதை போல தோன்றினாலும், அவற்றில் பல நோக்கமற்றதாக இருக்கிறது. தொழில்துறையைச் சேர்ந்த சீனியர் ஒருவருடைய அறிவுரை உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். உங்கள் வாழ்க்கை துணையின் பிரச்சினைகளுக்கு நீங்கள் தீர்வு காண வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழமையான கட்டுரை

சிம்மம்:

பணியில் உங்களுடைய முதல் செயல்பாடு கணிக்க தகுந்ததாக இருக்கும். உங்களை சுற்றியுள்ள நபர்களால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படக் கூடும். உங்கள் நோக்கம் நல்லதாக இருந்தாலும், பேச்சுவார்த்தை நடத்தும் முறைகளில் மாற்றம் தேவைப்படுகிறது. மனை வணிகம் செய்வோருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோலர் கோஸ்டர்

கன்னி:

கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் உங்களின் தற்போதைய சிந்தனைக்கு தடையாக அமையும். எதிர்கால உத்திகளை மாற்றி அமைக்க வெளிப்புற உதவிகளை நாட வேண்டியிருக்கும். நிதி சார்ந்த பலன்கள் மீண்டும் கிடைக்க இருக்கிறது. பயணங்களுக்கு திட்டமிடுபவர்கள் அதை முன்னெடுத்துச் செல்லலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழைய துணி விரிப்பு

துலாம்:

உங்கள் திறமைக்கு இப்போது பெரிய அளவில் பாராட்டு கிடைக்கும். இப்போது மந்தமாக இருக்கும் பொழுதுகள் விரைவில் விறுவிறுப்பானதாக மாற இருக்கின்றன. உங்கள் விருப்பத்திற்கு தகுந்த புதிய வாய்ப்பை நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கேற்ற பரிந்துரை உங்களுக்கு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு நிற பூ

விருச்சிகம்:

கடந்த காலங்களில் தேர்வு செய்த விஷயங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைப்பதை உணருவீர்கள். குறிப்பிட்ட திசை நோக்கி பயணத்தை தொடங்குவதற்கான நேரம் இது. வேலையில் பதற்றம் நிலவுவதை உணருவீர்கள். உங்கள் கவனத்தை திசை திருப்பக் கூடிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிடித்தமான இனிப்பு

தனுசு:

கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட சிறுசிறு நடவடிக்கையானது ஆபத்து காலத்தில் உங்களுக்கு பேருதவியாக அமையும். பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் சமாளிக்கும் வகையில் இருக்கும். பல பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால் நீங்கள் சோர்வடையலாம். சட்ட வழக்கு தொடர்புடைய ஆதாரங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மூலிகை செடி

மகரம்:

உங்கள் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல சிறப்பான தருணம் இது. வணிகம் சார்ந்த திட்டங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் கவலைகளை பெரிய அளவுக்கு களையக் கூடிய பார்ட்னர்ஷிப் அமையும். திருமண ஏற்பாடுகள் நல்லபடியாக நடக்கும். உங்கள் மனம் இப்போது தெளிவானதாக இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ப்ளூபெர்ரி

கும்பம்:

உயர் படிப்புக்கு திட்டமிடும் சமயத்தில் உங்களுக்கு சில குழப்பங்கள் ஏற்படலாம். உங்களுக்கான உதவி தேடி வரும். வீட்டை விட்டு வெளியூர்களில் வசிப்பவர் என்றால் தற்சமயம் வீட்டு சிந்தனை ஆழமாக வந்து போகும். அன்புக்குரிய நபர்களின் தவறான நடத்தை காரணமாக நீங்கள் கோபம் அடைவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மண் பானை

மீனம்:

குடும்ப நண்பரிடம் இருந்து பணி சார்ந்த பரிந்துரை வர இருக்கிறது. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்கு நோக்கி முழு கவனத்தையும் செலுத்தவும். தற்போதைக்கு கவனச்சிதறல்கள் அதிகமாக இருக்கும். குறுகிய பயணம் உங்கள் மனதுக்கு புத்துணர்ச்சி தரும். ஆன்மீக விவாதம் புதிய பாதையை காட்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டுத்துணி

First published:

Tags: Oracle Speaks, Tamil News