ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 06, 2023) பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 06, 2023) பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைய தினம் உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொண்டு புதியதொரு விஷயத்தை முயற்சிப்பதற்கான சிறப்புக்குரிய நாளாகும். உடனடியாக நீங்கள் சில விஷயங்கள் மீது கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வாழ்க்கை துணையின் உடல்நலன் குறித்து அக்கறை கொள்ளவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளக்கு

ரிஷபம்:

கடந்த கால கவலைகளில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். பணியிடத்தில் சில புதிய வரையறைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். நிலுவையில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இறகு

மிதுனம்:

சில விஷயங்களுக்கு நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால் அது நடக்கவே நடக்காது என்று அர்த்தம் அல்ல. நீங்கள் பொறுமை காக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் மீது விமர்சனம் முன்வைக்கப்படும். பயணங்கள் தாமதமாகக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஹெலிகாப்டர்

கடகம்:

உங்கள் பொறுப்புகளை நிறைவு செய்வதற்கான போதிய நேரம் இல்லை. ஆகவே உங்கள் பணிகளை வேகப்படுத்தவும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளை ரோஜா

சிம்மம்:

நீங்கள் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் விஷயங்களை நோக்கி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது. அதிகம் கோபம் கொண்டால் உங்கள் மன அமைதி கெடும். நட்பு ரீதியான தருணத்தால் உங்கள் நேரம் சேமிக்கப்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நோட்டு

கன்னி:

தற்போது கொண்டாட்டத்திற்கான நேரம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. உங்கள் திட்டங்கள் தற்போது செயல்பாட்டுக்கு வரும். நீங்கள் ஏற்கனவே செய்த முடிவுகள் குறித்து கொஞ்சம் நேரம் ஒதுக்கி மறுபரிசீலனை செய்யவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஹோலோகிராம்

துலாம்:

ஏதேனும் உங்களுக்கு தொந்தரவாக இருப்பின், அதை தொடர்ந்து செய்ய வேண்டாம். புதிய வருமானத்திற்கான யோசனையை உங்கள் உடன்பிறப்பு முன்வைப்பார். பயணத்திற்கான உங்கள் திட்டத்தில் தாமதம் ஏற்படக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூரிய உதயம்

விருச்சிகம்:

உங்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கிடைக்கும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் நிறைவு செய்வீர்கள். பங்குச் சந்தை தொழில்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். கடினமான வாக்குவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மெழுகுவர்த்தி ஸ்டாண்டு

தனுசு:

சில யோசனைகளை நீங்கள் புறக்கணிக்கக் கூடும். ஆனால், மீண்டும் உங்களை ஆட்கொள்ளும். முக்கியமான விஷயங்களை மேற்கொள்வதற்கான தைரியம் உங்களிடத்தில் இல்லை. இன்றைய நாள் சிரமம் மிகுந்ததாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மண் பானை

மகரம்:

ஆச்சரியங்கள் பல வகைகளில் வர கூடும். சிலவற்றை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். உங்கள் கோப உணர்ச்சியை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். இதனால் சிலர் பாதிக்கப்படுகின்றனர். சின்ன திருட்டு குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளாஸ் ஜார்

கும்பம்:

தேர்வு முடிவுகள் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாது. சின்ன தந்திரத்தால் உங்களுக்கான பணிகளை செய்து முடிப்பீர்கள். இன்றைய நாள் சிக்கலுக்குரியதாக இருந்தாலும் நல்ல தீர்வு கிடைக்கும். முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மிட்டாய்

மீனம்:

உங்களை சுற்றியுள்ள ஒருவர் மூலம் கவரப்படுவீர்கள். இன்றைய தினம் இறுக்கமான நபராக இருக்கக் கூடாது. பணியிடத்தில் உங்களை ஒருவர் குற்றம்சாட்டுவார். இன்றைய தினம் மிகக் கடினமானதாக அமையும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிவான வானம்.

First published:

Tags: Oracle Speaks, Tamil News