ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 05, 2023) சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 05, 2023) சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  இன்றைக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். பணிகளை விரைந்து முடிக்கும் திறன் ஏற்படும். நாள் முழுவதும் பிஸியாக இருப்பீர்கள். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். மாலையில் வெளியில் செல்லும் வாய்ப்புள்ளதால் அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்யலாம். வேலையில் அழுத்தம் ஏற்பட்டால் விரைந்து முடிக்கும் செயல்திறன் உங்களிடம் இருக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீல நிற ஸ்படிகம்

  ரிஷபம்:

  குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் நாள் இன்று. யாரிடமாவது தொழில் நிமிர்த்தம் அல்லது சொந்த வேலைக்காக பேச நினைத்திருந்தால் அதைத் தள்ளிப்போட வேண்டாம். அதற்கான நல்ல நாள் இன்று. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தேஷத்தைத் தரும். உடல் நலத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் வழக்கமான உடற்பயிற்சி செய்வதோடு உணவுகளில் கட்டுப்பாடுடன் இருக்கவும். இல்லாவிடில் தேவையில்லாத மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மஞ்சள் நிற கல் அல்லது ஸ்படிகம்.

  மிதுனம்:

  மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் போது நிதானம் தேவை. உடல் தோற்றத்தில் சிறு,சிறு மாற்றங்கள் ஏற்படும். புதிய திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் வெற்றியைப் பெறுவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்துக் கொள்ள வேண்டும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கருப்பு நிற ஸ்படிகம்

  கடகம்:

  இன்றைக்கு வாழ்க்கையில் உயர்வான இடத்திற்குச் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அலைச்சலுக்குப் பின்பு சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். சில வெளியாட்களின் குறுக்கீடு உங்களைப் பெரிதும் எரிச்சல் அடையச் செய்யும். அரசு சார்ந்தப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். ஆடம்பரமான பொருள்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விளக்கு நிழல்

  சிம்மம்:

  அரசு வழியில் எதிர்ப்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களுக்காகவும், உங்களுக்காகவும் உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பெரிதாக்க வேண்டாம். உங்களின் மேலதிகாரிகளின் அனுகூலத்தைப் பெற வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அட்டைப் பெட்டி

  கன்னி:

  மனதளவில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படலாம். உங்களின் அன்புரியவர்கள் மீது தவறான புரிதல்கள் இருந்தால் அவற்றை மனதிலிருந்து நீக்கிவிடவும். வாழ்க்கையில் நீங்கள் மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் உங்களின் மனதிற்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். சுப காரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தோட்டம்

  துலாம்:

  நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் நாள் இன்று. வர்த்தகம் தொடர்பான துறையில் புதுவிதமான நுட்பங்களுடன் நல்ல லாபத்தை அடைவீர்கள். மன நிம்மதியைப் பெறுவதற்க போதுமான அளவு தூக்கம் அவசியம். பிடித்த நண்பர்கள் மாலையில் வருகைத் தரக்கூடும். நீங்கள் செய்யும் எந்த பணிகளிலும் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அணில்

  விருச்சிகம்:

  காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானமாக செயல்படக்கூடிய நாள் இன்று. மற்றவர்களின் மூலம் மனதளவில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கையில் தற்பெருமை இன்றி அனைவரையும் அனுசரித்து செல்லவும். வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் இருப்பது வாழ்க்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளி

  தனுசு:

  உங்களது வாழ்க்கையில் சுப காரியம் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். விரைவில் நீங்கள் ஒரு நேர்மறையான செய்தியைப் பெறுவீர்கள். ஆற்றல்கள் இப்போது உங்களுக்குள் ஒரு புதிய உற்சாகத்தை உருவாக்கக்கூடும். முக்கியமான முடிவு எடுப்பதற்கு முன்னதாக குடும்பத்தினரின் ஆலோசனை முக்கியம். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். இன்பம் நிறைந்த நாளாகவே உங்களுக்கு அமையும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு உடை

  மகரம்:

  யோகம் நிறைந்த நாள் இன்று. குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உங்களுக்கு கிடைக்கும். சில பயிற்சிகள் உங்களது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு புதிய திறமையைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் ஏற்படும். புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்து வந்த தடை, தாமதங்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஸ்படிகம்

  கும்பம்:

  வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழப்பங்கள் நீங்கி தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு சில காரணங்கள் இருக்கலாம். எதையும் ஆழமாக விசாரிப்பது உங்களுக்கு பிரச்சனையைக் கொடுக்கும். உங்களின் பகுத்தறிவு திறன் உங்களது வாழ்க்கையின் வெற்றிக்கு உதவியாக இருக்கும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பச்சை நிறக் கல்

  மீனம்:

  வாழ்க்கையில் நிலவிவந்த இன்னல்கள் விலகும் நாள் இன்று. உங்களின் திறமையை வெளிப்படுத்த உதவும் நாள். கடந்தாண்டில் பெற்ற சாதனைகளின் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். புதிய வீடு மற்றும் மனைத் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பணியில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மரகதம்

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News