மேஷம்:
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. செய்ய வேண்டிய வேலைகளை தள்ளிப் போடுவதை தவிர்க்க வேண்டும். பழைய நண்பர் ஒருவரை சந்திக்க நேரிடலாம்.
உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - ஆரஞ்சு மேரி கோல்ட்
ரிஷபம்:
இன்று யாரேனும் ஒருவர் உங்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கலாம். உயர் அதிகாரிகளின் ஆலோசனையை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் மன நிம்மதியை முன்னிலைப்படுத்துவது நல்லது.
உங்க அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - பட்டாம்பூச்சி
மிதுனம்:
பொறுமையாக இருப்பது நல்லது. பொறுமைக்கேற்ற பலன் கிடைக்கும். உங்கள் கடந்த காலத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் அதனை சரி செய்யக்கூடிய ஒருவரை என்று சந்திப்பீர்கள். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நன்றாக அமையும்.
உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - மின்மினி பூச்சி
கடகம்:
நம்பிக்கைக்குரிய ஒருவர் உங்களது உதவியை எதிர்பார்க்கக்கூடும். பண வரவு அதிகரிக்கும். வீடு சம்பந்தப்பட்ட வேலைகளை மேற்கொள்ள நினைத்திருந்தால் அதனை ஒத்தி வைக்கும் நிலை ஏற்படலாம்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - உதயசூரியன்
சிம்மம்:
இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோர்களிடம் ஆரோக்கியமான ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். காணாமல் போன பொருள் ஒன்று இன்றைக்கு கிடைக்கும். சிறிது பரபரப்பான நாளாக அமையும்.
உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - மௌண்டைன் வியூ
கன்னி:
நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த விஷயம் ஒன்று என்று நடந்து முடியும். உங்கள் வாழ்க்கை துணையிடம் இருந்து நல்ல செய்தி ஒன்று கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை.
உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கலைப் பொருள்
துலாம்:
இன்றைய நாள் உற்சாகமான நாளாக அமையும். நீங்கள் திட்டமிட்ட செயல் ஒன்று நீங்கள் எதிர்பாராத விதத்தில் நடக்கலாம். ஆனால் இறுதியில் உங்களுக்கு சாதகமாகவே முடியும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு அவசரம் காட்ட வேண்டாம்.
உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - பிளாட்டின மோதிரம்
விருச்சிகம்:
நீங்கள் மனமுதிர்சியுடன் செயல்படுவது சிலருக்கு மனக்கசப்பை உண்டாக்கலாம். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துவது நல்லது. வார்த்தைகளில் கவனம் தேவை.
உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - கோல்டன் டஸ்ட்
தனுசு:
இன்றைய நாள் நீங்கள் எதிர் பார்த்தது போலவே நன்றாக அமையும். தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். செய்ய வேண்டிய வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. உற்சாகமான நாளாக அமையும்.
உங்களது சொத்துக்கான குறியீடு - நினைவு புகைப்படம்
மகரம்:
உங்கள் வாழ்க்கை பாதையை மாற்ற விரும்பினால் இதுதான் சரியான நேரம். பழைய உறவினர் ஒருவர் மீண்டும் உங்கள் வாழ்வில் நுழையலாம். அவருடைய அன்பை உங்களுக்கு ஆதரவாக இருக்கும். டிரேடிங்கில் இருப்பவர்களுக்கு இன்று ஸ்டாக்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஏற்ற நாள்.
உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - நைட்டிங்கேல்
கும்பம்:
முடிவெடுப்பதில் கவனம் தேவை. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் உங்கள் தலையில் சுமத்தப்படலாம். உங்கள் எண்ணங்களை சரியாக வெளிப்படுத்த வேண்டும்.
உங்கள அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – மூன்று ஆந்தைகள்
மீனம்:
திட்டமிட்டு செயல்களை செய்ய வேண்டிய நாள். தொழிலை விரிவுபடுத்துவதற்கு இதுதான் சரியான நேரம். உங்கள் குறிக்கோளை அடைவதற்கு மிக நெருக்கமான இடத்தில் இருப்பீர்கள். நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவரிடம் இருந்து ஆலோசனை பெறுவது வெற்றியை கொடுக்கும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கடுகு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News