மேஷம்:
உங்களை சுற்றியுள்ளவர்களின் நோக்கத்தை அறிந்த பிறகும், நீங்கள் இன்று சில விஷயங்களில் ரிஸ்க் எடுக்க நினைப்பீர்கள். உங்களது புதிய திட்டங்கள் அல்லது முயற்சிகளுக்கான பேக்கப் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் தவிர்க்க விரும்பும் நபர் இன்று உங்களை சந்திக்க நேரில் வரலாம். உங்கள் ரகசியங்களை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் புத்திசாலித்தனமாக இருங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இன்டோர் பிளான்ட்
ரிஷபம்:
இன்று நீங்கள் சரியான நேரத்தில் ஒரு விஷயத்தை அணுகுவது உங்களது முக்கிய திட்டத்தை விரைவில் முடிக்க உதவும். இன்று நீங்கள் சில முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அவர்கள் மூலம் உங்களுக்கான புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு சில நல்ல செய்திகள் இன்று வர கூடும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பூங்கொத்து
மிதுனம்:
நீங்கள் இன்று அமைதியான சூழல் வேண்டும் என்று நினைத்தால் உங்கள் எமோஷனை கன்ட்ரோல் செய்ய வேண்டும். நீங்கள் இன்று தனியாக நேரம் செலவிட விரும்பலாம். உங்கள் தோளின் மீது சுமத்தப்பட்ட குடும்ப பாரத்திற்கு இன்று தீவு கிடைக்கலாம். இன்று கடன் கேட்பதை தவிர்க்கவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பீங்கான் குவளை
கடகம்:
உங்கள் மீது பிறர் வைத்திருக்கும் நம்பிகையை காப்பாற்றும் பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் முன்னர் செய்த முதலீடுகள் இன்று எதிர்பார்த்ததை விட அதிக பலன்களை தரலாம். உங்களது செயல்திறனை நீண்ட நாட்களாக கவனித்த ஒருவர் இன்று உங்களை அணுகலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பீங்க் நிற பூக்கள்
சிம்மம்:
நீங்கள் இன்று செயல்படுத்த வேண்டும் என நினைத்து ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியிருக்கலாம், ஆனால் அதை செயல்படுத்துவது இன்று கடினமாக இருக்கலாம். உங்களது தினசரி பணிகள் உங்களது நாளை ஆக்கிரமித்து கொள்ளும். கடந்த காலத்தில் நீங்கள் கடினமாக வேலை செய்ததற்கான பலன்களை இன்று பெறலாம். பல விஷயங்களைப் பற்றி ஒரே நேரத்தில் யோசிப்பது உங்களுக்கு குழப்பம் மற்றும் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்த கூடும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய பர்ஃப்யூம்
கன்னி:
பொது இடங்களில் இன்று உங்களது தனிப்பட்ட உரையாடல்களை தவிர்க்கவும். இன்று உங்களுக்கு கலவையான உணர்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களால் ஈர்க்கப்பட்ட ஒருவர் இன்று உங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம். இன்று அவசரமாக முடிவுகளை எடுக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். குழப்பமான விஷயங்களை அப்படியே விட்டு விடுங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளை பலகை
துலாம்:
இன்று நீங்கள் முக்கியமான ஒருவரை சந்திக்க போகிறீர்கள் என்றால் அவர்களின் நேரம் மற்றும் ஈடுபாட்டை நீங்கள் மதிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களால் செயல்படுத்த முடியாத யோசனைகளை பற்றி பிறரிடம் பேசுவதை தவிர்க்கலாம். நிதி நெருக்கடிகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். சீனியர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அபிப்ராயத்தை காப்பாற்ற முயற்சிக்கவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிலிக்கான் ட்ரே
விருச்சிகம்:
உங்களிடம் யாராவது வேண்டுமென்றே சண்டையிட விரும்பலாம். எனவே பொறுமை மாற்றும் நிதானத்தை கடைபிடிக்கவும். உங்கள் மனதில் இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் பேச வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களது கடந்த கால பிரச்சனையை தீர்க்க இன்று உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பிறரால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளக்குகள்
தனுசு:
இன்று உங்களுக்கு நெருக்கமானவருடன் ஒரு சிறிய பிரச்சனை அல்லது கருத்து வேறுபாடு ஏற்படலாம். உங்கள் மனைவி நீங்கள் சொல்வதை கேட்காமல் உங்களது விருப்பத்திற்கு நேர்மாறான விஷயங்களை பரிந்துரைக்கலாம். இன்று நீங்கள் ஆன்மீக பயணம் மேற்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பறவைகள் கூட்டம்
மகரம்:
ஏதாவது எதிர்மறையாக நடக்கும் என்று நீங்கள் கருதினால், நீங்கள் பயப்படுவது உண்மையாகிவிடும். இதை தவிர்க்க அந்த எண்ணங்களுக்கு பவர் கொடுப்பதை நிறுத்துவதே. உங்கள் பழைய நண்பர்கள் உங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம், ஆனால் நீங்கள் அவர்களை சந்திக்க விரும்பாமல் இருக்கலாம். உங்களிடம் புதிய திட்டம் இருந்தால் உங்கள் பார்ட்னரை கவனமாக தேர்ந்தெடுங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இறகு
கும்பம்:
நீங்கள் எவ்வளவு பொறுமையாக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமான நன்மைகளை பெறுவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களது மகிழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பார்கள். வழக்கமான வேலைக்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு பிற பொறுப்புகளில் கவனம் செலுத்துங்கள். இன்று பணவரவு நன்றாக இருக்கும், மன அழுத்தம் குறையும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மண் பானை
மீனம்:
உங்களது நண்பர்கள் அல்லது பழைய அலுவலக ஊழியர்கள் உங்களை உதவிக்காக தொடர்பு கொள்ளலாம். நீங்கள் அடக்கி வைத்த உணர்ச்சிகள் பொதுவில் காட்ட நேரலாம். இன்று உங்களுக்கு ஏற்படும் நிதி முன்னேற்றம் சில காலத்திற்கு நிலையாக இருக்கலாம். உங்களது இயல்பு வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தலாம் எனவே இன்று பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News