மேஷம்:
ஏற்கனவே இருக்கும் வேலைகளினால் அதிகம் கலைப்பாக உணர்வீர்கள். எடுத்த வேலையை செய்து முடிக்க முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும். நண்பர்களுடன் கொண்டாட்டங்களுக்கு செல்ல வாய்ப்புகள் உண்டு. உடல் நலனில் அதிக அக்கறை தேவை.
அதிர்ஷ்டத்திர்கான குறியீடு - செங்கல் சுவர்
ரிஷபம்:
சூழ்நிலைகளை கவனமுடன் கையாள வேண்டும். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதால் குழப்பங்கள் உண்டாக கூடும். உடல் நலனில் அக்கறை தேவை.
அதிர்ஷ்டத்திர்கான குறியீடு - ஒனிக்ஸ்
மிதுனம்:
கவனமுடன் செயல்பட வேண்டும். இன்றைய நாள் முழுவதும் நேர்மறையான எண்ணங்கள் உருவாகும். அதனை பயன்படுத்தி வேலைகளை சிறப்பாக செய்ய முயற்சி செய்ய வேண்டும். கடல் தாண்டி இருக்கும் நண்பர் ஒருவரின் பேச்சின் மூலம் அதிக தன்னம்பிக்கையை பெறுவீர்கள்.
அதிர்ஷ்டத்திர்கான குறியீடு - சணல் பை
கடகம்:
தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. நெருங்கிய நபர்களுடன் உறவு இன்னும் மேம்படும் தொழில் சம்பந்தமாக அனுபவசாலி ஒருவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
அதிர்ஷ்டத்திர்கான குறியீடு - பரிசு பொருள்
சிம்மம்:
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதிக நேரம் வேலையில் ஈடுபடாமல் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு பிறகு வேலையை துவங்கலாம். இதன் மூலம் மன நிம்மதி அதிகரிக்கும். சட்ட சம்பந்தமாக கிடப்பில் போடப்பட்ட விஷயங்களை மீண்டும் துவங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.
அதிர்ஷ்டத்திர்கான குறியீடு - பிரிக்கப்பட்ட கடை
கன்னி:
வேலைகளில் திடீரென புதிய வளர்ச்சி பாதை உண்டாகும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். வேகமாக வாழ்க்கை முறையை குறைத்து மெதுவாக செயல்படுவது நல்லது. எதிர்காலத்திற்காக முன்கூட்டியே திட்டம் தீட்டுவது நல்லது.
அதிர்ஷ்டத்திர்கான குறியீடு - விளக்கு
துலாம்:
குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உங்களுடைய மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம் என்று நீங்கள் நினைத்திருந்தாலும் சில விஷயங்களை இப்போதே பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. நாளின் இறுதியில் மிகவும் ரிலாக்ஸாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்டத்திர்கான குறியீடு - தெளிவான வானம்
விருச்சிகம்:
உங்களைப் பற்றி பல்வேறு புரளிகள் பரவுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய கவனத்துடன் செயல்படுவது நல்லது. வேலையில் புதிய பொறுப்புக்கள் உங்களுக்கு அளிக்கப்படலாம். உங்களது குடும்ப நண்பர் ஒருவரின் உதவியால் நன்மைகள் உண்டாகும்.
அதிர்ஷ்டத்திர்கான குறியீடு - குடை
தனுசு:
பழைய புகைப்படங்களை பார்த்து பழைய ஞாபகங்களில் மூழ்கி போவீர்கள். பொருளாதாரத்தில் வலுவான நிலையில் இருப்பீர்கள். தெளிவான சிந்தனை உடன் இருப்பது பிரச்சனைகளில் இருந்து வெளிவர உதவும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி ஒன்று உங்களை வந்து சேரும்.
அதிர்ஷ்டத்திர்கான குறியீடு - புறாவின் இறகு
மகரம்:
சிக்கலான விஷயங்களில் எளிமையான நடைமுறைகளை பயன்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். இதுவரை தீர்வு கிடைக்காமல் இருந்த பல்வேறு பிரச்சனைகள் இன்று சரியாகும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்கு இது உகந்த நாள். தியானம் செய்வது கை கொடுக்கும்.
அதிர்ஷ்டத்திர்கான குறியீடு –காபி குவளை
கும்பம்:
நெருங்கிய நண்பர் ஒருவரினால் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள். ஷாப்பிங் செல்ல வாய்ப்புகள் உண்டு. இன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வெளி இடங்களில் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்டத்திர்கான குறியீடு - பீங்கான் குவளை
மீனம்:
புதிய உறவுகளில் நெருக்கம் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு. பொறுமையுடன் இருப்பது அவசியம். உங்களது கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் ஏற்ற நாள். தேவையற்ற விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.
அதிர்ஷ்டத்திர்கான குறியீடு - பழைய கடிகாரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News