மேஷம்:
இன்றைக்கு ஆச்சரியங்களும், கொண்டாட்டங்களும் நிறைந்த நாளாக அமையும். புதிய முதலீடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். எந்த வேலையையும் செய்வதற்கு முன்னதாக நிதானம் தேவை. மாணவர்கள் உங்களுடைய வீட்டுப்பாடங்களை சிறப்பாக செய்வதற்கு மட்டும் நேரத்தை பயனுள்ளதாக செலவிடுங்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு உயரமான கண்ணாடி
ரிஷபம்:
இன்றைக்கு நினைத்தக் காரியங்கள் வெற்றிக்கரமாக முடியும் நாளாக அமையும். கடந்த காலங்களில் ஏதாவது ஒன்றின் மீது கோபம் இருந்தால் தற்போது நீங்கள் சமநிலையை அடைந்திருப்பீர்கள். கடந்த காலத்தின் சில மரபுகள் உங்களை வழிநடத்தியிருக்கும். எனவே வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சியான சூழல் ஏற்பட வேண்டும் என்றால், பெரியவரின் பேச்சைக் கண்டிப்பாக கேட்க வேண்டும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கலைப்பொருள்
மிதுனம்:
வாழ்க்கயைில் எவ்வித தடையும் இன்றி நினைத்தக் காரியங்களை வெற்றிக்கரமாக முடிக்கும் சூழல் ஏற்படும். திடீர் மாற்றம் உங்களது நாளை முற்றிலும் மாற்றிவிடும். புதியவர்களுடன் நட்பு ஏற்படும் சூழல் உண்டாகும். இந்த அறிமுகம் நீண்ட காலத்திற்கு உங்களை நல்வழிப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளி நாணயம்
கடகம்:
புதிதாக ஏதாவது ஒன்றைத் தொடங்குவதற்கு முன்னதாக கொஞ்சம் பதட்டமான மனநிலையை உணர்வீர்கள். குறிப்பிட்ட முடிவை எடுப்பதில் உங்கள் மனதில் ஒரு குழப்பம் ஏற்படலாம். தெளிவான மனநிலையைப் பெறுவதற்கு அதிக நேரம் எடுக்கும். வாழ்க்கையில் எவ்வித இடையூறுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் முன்னோர்களின் வழிகாட்டுதல்கள் முக்கியம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பெண்.
சிம்மம்:
உங்களின் சொந்த நிபந்தனைகளின்படி நல்ல காரியங்களை நிறைவேற்றும் நாளாக அமையும். நீங்கள் சிரமமின்றி எந்தவொரு வேலையையும் செய்யக்கூடிய மனநிலை ஏற்படும். சிறப்பான பணிகளினால் பலரின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு வெகுவிரைவில் வெகுமதிகளைப் பெறுவீர்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கடற்பாசி
கன்னி:
இன்றைய நாள் மெதுவாகத் தொடங்குவது போன்ற மனநிலையில் இருந்தாலும், இரண்டாவது பாதியில் வேகம் எடுக்கும். சில சங்கடங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டாலும் அதைத் தீர்க்க மன தைரியம் உங்களுக்கு ஏற்படும். எந்த சங்கடங்கள் வந்தாலும் பொறுமையுடன் எதிர்க்கொள்வீர்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வைக்கோல்
துலாம்:
நீங்கள் பல ஆண்டுகளாக நினைத்தக் காரியங்கள் நிறைவேறும் நாளாக அமையும். ஒரு சூழ்நிலையை நுண்ணோக்கி மூலம் பார்க்கும் திறன் உங்களுக்கு உள்ளது. உங்களிடமிருந்து சிறப்பான சில விஷயங்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது என்பதால், சிந்தித்து செயல்பட வேண்டும். உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஒருவர் துன்பத்தில் இருப்பார்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பேனா
விருச்சிகம்:
உங்களின் பணிகளை விரைந்து முடிக்கும் நல்ல சூழல் உண்டாகும். எந்த வேலையும் நிதானத்துடன் செய்யுங்கள். கணவன் மனைவிக்கிடையே தாம்பதிய உறவில் பிரச்சனை ஏற்படும். சொந்த விஷயங்களை பிறரிடம் பகிர்ந்துக்கொள்ளாமல் இருந்தாலே பல பிரச்சனைகள் ஏற்படாது.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மரகதம்
தனுசு:
பல வாய்ப்புகளுடன் ஆற்றல் மிக்க நாளாக இன்று அமையும். நிலுவையில் உள்ள பணிகளை வெற்றிக்கரமாக முடிக்கும் சூழல் ஏற்படும். தேவையற்ற செய்திகளையும், அழைப்புகளையும் திருப்பி அனுப்புவது நல்லது. வாழ்க்கையில் பல சுவாரஸ்சியமான விஷயங்களை நீங்கள் அடைவீர்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தங்க எம்பிராய்டரி
மகரம்:
ஆற்றல்கள் நிறைந்த நாளாக உங்களுக்கு அமையும். சிறப்பு கவனம் எதுவும் செலுத்தாமல் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். எந்தவொரு செயலையும் முன்பே திட்டமிடுவதால் நீங்கள் வெற்றி பெறலாம். எவ்வித அறிவிப்பும் இல்லாமல் நீண்ட நாள் எதிர்ப்பார்த்த விஷயங்கள் வெற்றிக்கரமாக முடிந்து உங்களை உற்சாகப்படுத்தும். தாயில் உடல்நிலையில் கவனம் செலுத்தவும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு உப்பு நீர் தொட்டி
கும்பம்:
இன்றைக்கு அனைத்து சந்தோஷங்களும் கிடைக்கும் நாளாக அமையும். வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கவும், இலட்சியங்களை அடையவும் முயற்சிகளை எடுக்கவும். தேவையில்லாத கோபம், உணர்ச்சி வசப்படாமல் இருப்பதற்காக ஆன்மீகத்தில் நாட்டம் காட்டுங்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிமெண்ட் பை
மீனம்:
உங்களது மனதில் உள்ள உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்தினால், காயப்படுவீர்கள் என்ற பயம் ஏற்படும் என்பதால் எதையும் செய்ய மாட்டீர்கள். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால் உங்கள் மனம் எப்போதும் பதட்டத்துடன் இருப்பது போன்று தோன்றும். வாழ்க்கையில் எதையும் பெரிதாக நினைத்துக் கவலைக்கொள்ள வேண்டாம். நிச்சயம் நினைத்தது நடந்தே தீரும். உங்களது ரகசியத்தை அறிந்த நெருங்கிய நண்பர்கள் உங்களை எப்போதும் சார்ந்திருப்பார்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீர்நிலை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News