முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 18, 2023) புதிய வாய்ப்புகள் தேடி வரும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 18, 2023) புதிய வாய்ப்புகள் தேடி வரும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம்:

    உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைப் பற்றி கவலை கொள்வதை நிறுத்த வேண்டும். சவாலான சூழ்நிலைகள் ஏதேனும் ஏற்பட்டால் பொறுமையை கையாள்வது நல்லது. அந்த சூழ்நிலையானது தானாகவே சரியாகிவிடும்

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - மரகத பச்சை

    ரிஷபம்:

    எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பற்றிய கவலைகள் அதிகரிக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் கவனம் செலுத்தி அதற்கேற்ப செயல்படுவது நல்லது. விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – சூரிய உதயம்

    மிதுனம்:

    இன்று நாள் முழுவதும் நேர்மறையான பல விஷயங்கள் நடைபெறும். அலுவலகத்தில் உங்களைப் பற்றி சிலர் சதி செய்ய வாய்ப்புகள் உண்டு. மொத்தத்தில் இந்த நாள் அமைதியான நாளாக இருக்கும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - மீன் வலை

    கடகம்:

    பொருளாதார ரீதியாக இருந்த பல பிரச்சினைகள் நீங்கி வலுவான நிலையை அடைவீர்கள். வளர்ச்சி பாதையில் செல்ல வாய்ப்புகள் உண்டு. எதிர்மறையான எண்ணங்கள் உங்களை ஆட்கொள்வதற்கு இடம் கொடுக்க வேண்டாம்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஆம்பர் கல்

    சிம்மம்:

    உங்கள எதிர்பாராத மொழிகளில் இருந்து புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்களுக்கு தேவையான அனைத்தும் இதன் மூலம் பூர்த்தி செய்யப்படும். ஆன்மீக பாதையில் செல்ல ஆர்வம் உண்டாகும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - ஊதா

    கன்னி:

    நீங்கள் எதிர்பாராத சில நல்ல முடிவுகள் மூலம் உற்சாகம் அடைவீர்கள். எதிர்காலத்தை பற்றி தெளிவோடு செயல்படுவது நல்லது. புதிய வளர்ச்சி பாதையில் செல்ல திட்டங்கள் தீட்ட சரியான நாள்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – மாணிக்க சிவப்பு

    துலாம்:

    வாழ்வில் நீங்கள் இவ்வளவு நாள் செய்து வந்த சாதாரண காரியங்களில் இருந்து வெளிவந்து புதிய செயல்களை மேற்கொள்வீர்கள். உங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவர் உங்கள் மீது சந்தேகம் கொள்ள வாய்ப்புகள் உண்டு. பழைய முதலீடுகள் மூலம் நேர்மறையான முடிவுகள் கிடைக்கும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – பட்டுக்கல்

    விருச்சிகம்:

    அரசியல், கலை மற்றும் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு இந்த நாள் மிகவும் நன்றாக இருக்கும். திட்டம் தீட்டி செயல்களை செய்து முடிக்க ஆர்வம் உண்டாகும். நீங்கள் சந்திக்கும் புதிய மனிதர் ஒருவரின் மூலம் உங்கள் வாழ்வில் முக்கிய மாற்றங்கள் உண்டாகும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – வெள்ளை ரோஜா

    தனுசு:

    வேலையில் மாற்றம் செய்வது குறித்து அறிவுறுத்தப்படுகிறது. போதுமான அளவு வேலையில்லாத காரணத்தினால் உங்களை நீங்களே வந்து கொள்வீர்கள். உங்களை அமைதிப்படுத்தும் ஒரு வாய்ப்பை தேர்ந்தெடுப்பீர்கள் புதிய வழிகளில் பண வரவு உண்டாக வாய்ப்புகள் உண்டு.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஸ்கை ப்ளூ

    மகரம்:

    இன்றைய நாளில் சில குழப்பங்கள் இருந்தாலும் அதற்கு ஏற்ப தயார் படுத்திக் கொண்டு அமைதியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். பல்வேறு வித எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் ஆனால் அதை பற்றி அதிகம் கவலை கொள்ள தேவையில்லை. குறுகிய பயணம் மேற்கொள்வது மனதை அமைதிப்படுத்தும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – நியான் பச்சை

    கும்பம்:

    உங்கள் தன்னம்பிக்கையை ஆதாரமாக வைத்து தான் இன்று அனைத்து பிரச்சனைகளையும் நீங்கள் சரி செய்வீர்கள் பல்வேறு திட்டங்கள் ஒரே நேரத்தில் உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருந்தாலும் அவற்றை பற்றி அதிகம் கவலை கொள்ள தேவையில்லை. முடிந்த அளவு அமைதியாக இருப்பதே வெற்றிக்கு வழிவகுக்கும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – தங்க மீன்

    மீனம்:

    உங்கள் ஆழ்மனதில் பல்வேறு விஷயங்கள் குடைந்து கொண்டிருக்கலாம் ஆனால் உங்களது உள்ளுணர்வானது வேறு ஒரு விஷயத்தை அறிவுறுத்தலாம். யோசித்து முடிவு எடுப்பது நல்லது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு உங்களது அறிவுரை அல்லது உதவி தேவைப்படலாம் புதிய பழக்க வழக்கங்களை மேற்கொள்ள ஏற்ற நாள்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – கோபால்ட் ப்ளூ

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News