மேஷம்:
நீங்கள் மன்னிப்பு கேட்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக இருக்கின்றன. எந்தவொரு விஷயத்திற்கும் ஆழ்மனதில் இருந்து ஆறுதல் தேட வேண்டும் மற்றும் உங்களுக்கு தேவையானதை ஏற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் யோசிக்கும் புதிய முயற்சிக்கு இப்போது விண்ணப்பிக்கலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பனிப்பொழுது
ரிஷபம்:
இன்றைய தினம் அதிக வேலைப்பளு கொண்டதாக இருக்கும். இருப்பினும், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை நீங்கள் நிறைவு செய்வீர்கள். பணிச்சுமை காரணமாக மிகுந்த சோர்வடைவீர்கள். நண்பர் குறித்த நற்செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமையும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளிக்கரண்டி
மிதுனம்:
இந்த மாதத்தின் எஞ்சிய நாட்களுக்காக புதிய யோசனைகளை நீங்கள் சிந்திக்க வேண்டியிருக்கும். ஒரே சமயத்தில் பல ப்ராஜக்டுகளை செய்து வருகிறீர்கள் என்றால், இப்போதைக்கு எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கு நிலையான வளர்ச்சி காணப்படும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டம்
கடகம்:
உங்கள் ஆழ்மன திறமைகளை வெளிக்காட்டுவதற்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் நம்பிக்கையை பார்த்து பிறர் பொறாமை கொள்ள கூடும். உங்கள் திறனுக்கு மிகுதியாக சாதனை செய்திருப்பதாக உங்களை சுற்றியிருக்கும் நபர்கள் குறை பேசுவார்கள். எச்சரிக்கையுடன் இருக்கவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வீணை
சிம்மம்:
இன்றைய தினம் சில கவலைகளுக்கான அறிகுறிகள் தென்படலாம். இருப்பினும் அவற்றுக்கு நீங்கள் விரைவில் தீர்வு காண்பீர்கள். வழக்கத்திற்கு மாறாக நடக்கும் விஷயம் உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். பழைய நண்பர் எந்தவித தகவலும் சொல்லாமல் திடீரென்று வருகை தருவார்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விலங்கின் நிழல்
கன்னி:
புத்துணர்ச்சி தரக் கூடிய மதிய விருந்து, நண்பர்களுடனான வெளியிட பயணங்கள் போன்றவை உங்களுக்கு தேவையான ஆற்றலை தரும். இன்றைய நாளின் பிற்பகுதியில் உங்கள் மனம் மிகுந்த கவனத்துடன் இருக்கும். உங்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு யாரோ ஒருவர் பதில் தர கூடும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கார்டூன்
துலாம்:
நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் நடந்தேறுவதன் மூலமாக உங்களுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். திடீரென மேற்கொள்ளும் பயணங்களின் மூலமாக புத்துணர்ச்சி கிடைக்கும். யாரோ சிலர் பழிவாங்க காத்திருப்பதை நீங்கள் மனதில் நினைவில் கொள்ள வேண்டும். எச்சரிக்கையுடன் செயல்படவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பர்பிள் கல்
விருச்சிகம்:
உங்களைப் பற்றிய ரகசியம் ஒன்று இப்போது வெளியுலகிற்கு தெரியலாம். உங்கள் மனதில் நிறைவேறாத ஆசைகள் நிறைய இருக்கக் கூடும். அவை குறித்து உடனடியாக கவனம் செலுத்தவும். நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் குறித்து கவனமாக இருக்கவும். இல்லையேல் தேவையற்ற சிக்கல் உண்டாகும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரப்பெட்டி
தனுசு:
வழக்கத்திற்கு மாறான அமைதி உங்களிடம் இன்றைக்கு தென்படும். கடந்த சில நாட்களில் நீங்கள் இதுபோல இருந்திருக்க வாய்ப்பில்லை. பணியிடத்தில் உங்களுக்கு வழங்கப்படும் புதிய பொறுப்பு சார்ந்து உத்திகளை செயல்படுத்தவும். சக ஊழியர் ஒருவர் இலக்குகளை நிறைவு செய்ய உங்களுடன் இணைந்து பணியாற்றுவார்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விண்மீன் கூட்டம்
மகரம்:
தற்போது நீங்கள் எதிர்கொண்டிருக்கும் சிரமங்கள், மனக் கவலைகளுக்கு இடையே பணி சார்ந்து மேற்கொள்ளும் பயணத்தின் மூலமாக ஆறுதல் கிடைக்கும். நீங்கள் நம்பும் நண்பரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். அதே சமயம், உறவினர் ஒருவர் உங்களிடம் உதவி கேட்பார்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆறு
கும்பம்:
உங்களின் சொந்த விவகாரம் குறித்து மேற்கொள்ளப்படும் விவாதம் பயனுள்ளதாக அமையும். இன்றைய தினம் மனதில் குதூகலங்கள் நிரம்பும். அதே சமயம், சிலருக்கு எரிச்சல் உணர்வும் ஏற்படலாம். உங்கள் உடல்நலன் குறித்து அக்கறை கொள்ளவும். மதியத்திற்கு மேல் புத்தாற்றல் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளம்பரப் பலகை
மீனம்:
உங்கள் பணிகள் குறித்து சிலர் பாராட்டும்போது, அது உண்மையில்லை என்பதால் அதை நீங்கள் முக்கியத்துவம் உடையதாக கருத மாட்டீர்கள். உங்களின் பணித்திறன் குறித்து நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீங்கள் விட நினைக்கும் பழைய பழக்கம் ஒன்றில் இருந்து இறுதியாக விடுபடுவீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டு தலைப்பாகை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News