மேஷம்:
பணிச்சூழலில் கொஞ்சம் மாற்றம் ஏற்படலாம். அது உங்களுக்கு சௌகரியமானதாக இருக்காது. உடல்நலன் சார்ந்து ஏற்கனவே உள்ள பிரச்சினை மீண்டும் தோன்றக் கூடும். நீடித்த தொந்தரவுகள் இருப்பின் மருத்துவ உதவியை நாடவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கலை ஓவியம்
ரிஷபம்:
ஏற்கனவே நீங்கள் தவறவிட்ட வாய்ப்பு ஒன்று புத்தம் புதிய ரூபத்தில் வர இருக்கிறது. நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் உங்கள் நற்பெயரை கெடுக்கக் கூடும். உங்கள் நடவடிக்கை குறித்து அதிக கவனம் செலுத்துவது சுய சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அணில்
மிதுனம்:
எதையும் ஆக்கப்பூர்வமாக ஆழ்ந்து நோக்கும் உங்கள் குணத்தால் நிலைமை சிறப்பாக மாறும். மற்றவர்களுடைய கருத்துக்களை பின்பற்றி நடந்தால் மோசமான விளைவுகள் ஏற்படலாம். வழக்கமான பணியில் இருந்து கவனம் சிதறினால் பதற்றம் ஏற்படலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நைட்டிங்கேல்
கடகம்:
பணியிடத்தில் வேகமான வளர்ச்சி தென்படும். மாற்றம் என்பது நீங்கள் பணி செய்யும் இடம் அல்லது அலுவலகம் சார்ந்ததாக இருக்கலாம். பணம் சார்ந்து ஏற்றமிகு வளர்ச்சியை காண்பீர்கள். பெற்றோரின் மனவோட்டம் கவலையை ஏற்படுத்தும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தங்கமீன்
சிம்மம்:
தற்போது ரிலாக்ஸான சிந்தனையில் இருக்க விரும்பும் நீங்கள் கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொள்வீர்கள். நீங்கள் விறுவிறுப்பாக இயங்கி வருவதன் காரணமாக குடும்பத்தில் இருந்து விலகி இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை சக ஊழியரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிட்டுக்குருவி
கன்னி:
சமூகத்துடன் இணைந்து பழகவும், வெளியிடங்களுக்கு செல்லவும் சிறப்பான நாளாகும். திடீரென்று உங்கள் கைகளில் ஒப்படைக்கப்படும் பொறுப்பை நீங்கள் ஒத்திவைக்க நினைப்பீர்கள். காதல் உணர்வு உங்கள் மனதில் பற்றிக் கொள்ள இருக்கிறது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆமை
துலாம்:
இன்றைய தினம் கொஞ்சம் பிஸியாக இருப்பீர்கள். ஆனால், மாலையில் கொஞ்சம் ஓய்வு தேவைப்படலாம். மிகப் பெரிய விஷயம் உங்கள் நினைவில் இருந்து தப்பக் கூடும். ஆக, எதையும் தவறவிடக் கூடாது என்றால் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மண்பானை
விருச்சிகம்:
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை இப்போது நீங்கள் தொடங்குவீர்கள். உங்கள் மனநிலை உங்களுக்கு மனநிறைவை தரக் கூடும். நீண்ட கால முதலீடுகள் மூலமாக நல்ல லாபம் கிடைக்க இருக்கிறது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கோடாரி
தனுசு:
உறவினர் மூலமாக சிறு தொந்தரவு ஏற்படக் கூடும். ரியல் எஸ்டேட் துறையில் வருகின்ற புதிய வாய்ப்பு மூலமாக நல்ல லாபம் கிடைக்கும். உங்களுக்கு தெரியாத விஷயத்தை உடன் பிறந்தவர் மூலமாக தெரிந்து கொள்வீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழமையான நாணயம்
மகரம்:
ஓரிடத்தில் அமைதியாக இருப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது. கவலை மற்றும் அவசர முடிவு போன்றவற்றை தவிர்க்கவும். இதற்கு முன்பு உங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரையை பின்பற்றி நடக்கவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - க்ளோசெட்
கும்பம்:
உங்கள் எண்ணங்கள் சூழலுக்கு உகந்ததாக இருக்காது. தற்சமயம் எண்ணங்களில் மாற்றம் செய்து கொண்டால் சில பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கலாம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்பட மாட்டீர்கள். அதையே தொடரவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழங்கால புகைப்படம்
மீனம்:
ஏதோ ஒன்று தடைபடுவதாக உங்கள் மனதில் தோன்றும். ஆனால், முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டால் தீர்வு கிடைக்கும். சௌகரியமான வருமானத்தை மட்டும் நம்பிக் கொண்டிருப்பது நல்லதல்ல. நிலையான வருமானம் தரும் வழியை பார்க்க வேண்டும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளித் தட்டு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News