முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 09, 2023) நிதிநிலை ஆரோக்கியமாக இருக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 09, 2023) நிதிநிலை ஆரோக்கியமாக இருக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்: 

உங்கள் எல்லா உணர்ச்சிகளையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. கலவையான உணர்வுகளுடன் இன்றைய தினம் உங்களுக்கு ஏற்ற இறக்கமாக இருக்கும். நீங்கள் இனி பின்வாங்க வேண்டியதில்லை. காலை நேரம் வேலைக்கு ஏற்றது.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நட்சத்திரம்

ரிஷபம்: 

மற்றவர்கள் உங்களைப் புரிந்துகொள்ள முயற்சித்தாலும், நீங்கள் இன்னும் ஒரு மர்மமாகத் தோன்றி எல்லாரையும் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதைக் கையாள்கிறீர்களோ, அதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். ஒரு பழைய வாய்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பீங்கான் தொட்டி

மிதுனம்: 

உங்களுக்கு நெருக்கமானவர்கள் சில சமயங்களில் நீங்கள் எதிர்பார்த்தபடி செயல்படாமல் இருக்கலாம், ஆனால் அது இயல்பு தான். பிறரின் நிலைமை மற்றும் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதும் முக்கியம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நைட்டிங்கேல் பறவை

கடகம்: 

நீங்கள் கடன் வாங்கியிருந்தால் அல்லது தனிப்பட்ட முறையில் உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால், அவர்களுடனான உங்கள் உறவு பிரச்சனையாக மாறலாம். உங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடும் செயல்பாட்டில், நிகழ்காலத்தை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். சில சமயங்களில் பொறுமையாக இருப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சில அட்டை பெட்டிகள்

சிம்மம்: 

உங்களுக்கும் உங்கள் மூத்த சகோதரி அல்லது சகோதரருக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி மேம்பட்டு வருவது போல் தெரிகிறது. நீங்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறீர்கள். நீங்கள் அடுத்த கட்டத்தை அடைய, இன்னும் சிறிது காலம் ஆகலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கம்பளிப்பூச்சி

கன்னி: 

பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்வதன் மூலம் உங்கள் திறனை அதிகரிக்கலாம். உங்களின் நெருங்கிய நண்பர்களில் சிலர் உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். நீங்கள் நிறைவேற்ற வேண்டிய ஒரு தேவை உள்ளது. அதற்காக நீங்கள் நீண்ட நேரம் பயிற்சி செய்ய வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரத்தின கல்

துலாம்: 

சில நேரங்களில் பலரும் சொந்த உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாமல், எண்ணங்களைத் தவறாக வெளிப்படுத்துவோம், நீங்களும் அது போலத்தான். நீங்கள் உங்கள் குற்ற உணர்விலிருந்து வெளியேற முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இரும்பு பான்

விருச்சிகம்: 

இரண்டு நண்பர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் போது அது மேஜிக் போலத் தெரியும். கடந்த காலத்தில் நீங்கள் யாரையாவது காயப்படுத்தியிருந்தால், அதை வெளிப்படுத்தி மன்னிப்பு கோர வேண்டிய நேரம் இது.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பெரிய பூங்கா

தனுசு: 

இன்று ஒரு பிரகாசமான நாள் மற்றும் உங்களுக்கு மிகவும் இணக்கமாக இருப்பது போலத் தோன்றும். நிலுவையில் உள்ள பணி, நீண்ட காலமாக மறந்துவிட்ட வேலைகளின் பட்டியல் அனைத்தையும் செயல்படுத்துவீர்கள். வீட்டுப் பொறுப்புகளுக்கு இன்று முக்கியத்துவம் இருக்காது.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சாமந்திபூ

மகரம்: 

பணியில் இருக்கும் ஒரு இளையவர் உங்கள் கவனத்திற்கு அவர்களின் கவலையைக் கொண்டுவந்தால், பிரச்சனைகளைத் தீர்க்க முன்னுரிமையைக் கொடுங்கள். நீங்கள் பங்குச் சந்தையை சுறுசுறுப்பாகக் கையாள்வீர்கள் என்ற பட்சத்தில், விரைவாக பணம் சம்பாதிப்பீர்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நியான் விளக்கு

கும்பம்: 

தொலைதூர உறவில் இருப்பவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படலாம். இருப்பினும், இது மிகவும் தற்காலிகமான கட்டமாகும். வேலையில் ஏற்படும் மன அழுத்தம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கலாம். இசை இதற்கு ஒரு நல்ல சிகிச்சையாக இருக்கும். நீங்கள் ஒரு குறுகிய பயணத்திற்கும் திட்டமிடலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ரெட்ரோ இசை

மீனம்: 

ஒரு குழுவாக நீங்கள் ஏதாவது திட்டமிடுகிறீர்கள் என்றால், அது இப்போது நல்ல வடிவம் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் அனுபவித்து செய்யும் விஷயங்களுக்கான நல்ல நேரம் வர வாய்ப்புள்ளது. நிதிநிலை ஆரோக்கியமாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்ய திட்டமிடலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி கதவு

First published:

Tags: Oracle Speaks, Tamil News