முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு முதலீடுகள் செய்ய இன்று (பிப்ரவரி 08, 2023) சிறப்பான நாளாகும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு முதலீடுகள் செய்ய இன்று (பிப்ரவரி 08, 2023) சிறப்பான நாளாகும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைய தினம் உங்கள் வீட்டு விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கலாம். நீங்கள் ஒத்திவைத்து வரும் சில விஷயங்கள் மீது உடனடி கவனம் செலுத்துவது அவசியம். அண்மைக்கால தொடர்பு ஒன்றை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மேரிகோல்டு

ரிஷபம்:

இன்றைய தினம் சில முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் மற்றும் பொறுப்புகளை நீங்கள் ஏற்க வேண்டியிருக்கும். சீனியர்கள் ஏதேனும் சொல்வார்களோ என நினைத்து எதையும் புறந்தள்ள வேண்டாம். முதலீடுகளை செய்ய இன்று சிறப்பான நாளாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டாம்பூச்சி

மிதுனம்:

உங்கள் திறன்களுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலான பலன் கிடைக்கும். கடந்த காலங்களில் நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்களுக்கு சிறந்த ஆலோசனை கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சிறப்பான முடிவுகளை பெறுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிலந்தி வலை

கடகம்:

உங்களுக்கு தெரிந்த நபர் பண கஷ்டத்தில் இருக்கிறார். உங்களிடம் அவர் உதவி கோரலாம். உங்களுக்கான பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். குறிப்பாக வணிகம் செய்பவர்களுக்கு பணவரவு சிறப்பாக அமையும். வேலையை மாற்றுவது குறித்த பரிசீலனையை ஒத்திவைக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உதயசூரியண்

சிம்மம்:

இன்று நீங்கள் சில விஷயங்களை பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். உங்களை வழிநடத்தக் கூடிய தொடர்புகளை நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். தொலைந்து போன மதிப்புமிக்க பொருள் திரும்பக் கிடைக்கும். இன்றைய தினம் மந்தமானதாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மலை காட்சி

கன்னி:

கடந்த சில நாட்களாக நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயம் இப்போது நடக்க இருக்கிறது. பணியிடத்தில் இருந்து வருகின்ற நல்ல செய்தி உங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும். தனியுரிமை மீறல் காரணமாக உங்கள் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கைவினைபொருள்

துலாம்:

உங்களுக்கான கொண்டாட்டங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. திட்டமிடப்படாத வகையில் ஏதேனும் நிகழுகின்றது என்றால், அதன் மூலமாக நல்வழி பிறக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அவசரம் காட்ட வேண்டாம். அவை தவறானதாக முடியலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிளாட்டினம் மோதிரம்

விருச்சிகம்:

நீங்கள் மிகுந்த எதார்த்தவாதியாக இருப்பது சிலரை காயப்படுத்தலாம். உங்கள் திறன்களை வெளிப்படுத்தும் நோக்கத்தில் பணி செய்யுங்கள். நீங்கள் விரும்பியது குறித்து முறையான தகவல் பரிமாற்றம் நடந்திருக்காது. ஆச்சரியம் தரும் நடவடிக்கை ஒன்றை தற்காலிகமாக ஒத்திவைப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தங்க தூசு

தனுசு:

இன்றைய நாள் நீங்கள் விரும்பியபடி நல்ல நாளாக அமையும். உங்கள் மனதில் அதிகமான நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம். பொறுமையாக இருந்து இலக்குகளை நிறைவு செய்யவும். இன்றைய தினம் புத்துணர்ச்சி மற்றும் ஆற்றல் பெறுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பசுமையான நினைவுகள்

மகரம்:

முன் பின் தெரியாத இடம் நோக்கி பயணம் செய்ய திட்டமிடுவது பயனுள்ளதாக அமையும். உங்கள் மைத்துனர் அல்லது பழைய உறவினர் உங்களை அன்புடன் நினைவுகூர்வார்கள். குறுகிய கால வர்த்தகம் செய்ய இன்று சிறப்பான நாளாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புறா

கும்பம்:

உங்கள் முடிவுகளில் அசட்டையாக இருக்க வேண்டாம். பணியிடத்தில் உங்கள் திறனுக்கு சீனியர்களிடம் பாராட்டு கிடைக்கும். உங்களுக்கு சேரக் கூடிய கூடுதல் பொறுப்பு ஒன்று வளர்ச்சியை தருவதாக அமையும். உங்கள் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்தவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மூன்று புறா

மீனம்:

உங்கள் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுங்கள். அடுத்தகட்ட விரிவாக்கத்தை நோக்கி புதிய திட்டங்களை வகுக்கவும். உங்களிடம் இருந்து வாக்குறுதியை மேல் அதிகாரி எதிர்பார்க்கிறார். உங்கள் இலக்குகளை நோக்கி நீங்கள் நெருங்கி வருகிறீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நிழல்

First published:

Tags: Oracle Speaks, Tamil News